Featured Posts
Home » நூல்கள் » சூஃபித்துவத் தரீக்காக்கள் » [தொடர் 2] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

[தொடர் 2] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

Bookமுன்னுரை

புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள், குடும்பத்தவர்கள், அவர்களின் வழிநடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக. ஆமீன்.

தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ‘தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள்’ போன்ற சொற்பிரயோகங்கள் அனைவருக்கும் மத்தியில் பரிச்சயமானதாகும். ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு இவர்கள் மத்தியில் புரிந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போதே ஆச்சரியம் கலந்த வேதனையை அளிக்கின்றது.

சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் பண்டிதர் முதற்கொண்டு பாமரர் வரைக்கும், ‘சூஃபிகள் எனப்படுவோர் இறைநேசச் செல்வர்கள். தொழுகை, நோன்பு, திக்ர், போன்ற இன்ன பல வணக்கங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்., இதனால் சாதாரண மக்களை விட ஒருபடி மேலேசென்று அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும், முழுக்க முழுக்க இஸ்லாமிய அனுஷ்ட்டானங்களைப் பின்பற்றி நடப்பவர்கள் இவர்கள்தான்’ என்பது போன்ற ஒரு போலியான கருத்துக் கண்ணோட்டமும் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எனவே சூஃபித்துவம் என்றால் என்ன? இது எங்கிருந்து தோற்றம் பெற்றது? இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.

அதே போன்று இன்று நவீன சூஃபித்துவமாக விஷ்வரூபமெடுத்து இதே சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளின் நிழலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இது இன்று பாமர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்று தீன் வழி நடக்கும் ஒரே அமைப்பு என்றும், இதிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் என்றும் தப்புக்கணக்குப் போட்டுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அமைப்பாகும். இவ்வமைப்பின் அடிப்படை விதிகள் எப்படி சூஃபித்துவக் கருத்துக்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், இதன் ஆரம்ப ஸ்தாபகர்கள், சமகால முக்கியஸ்த்தர்களுக்கு சூஃபித்துவத்துடன் இருக்கும் தொடர்பு பற்றியும் முடிந்தளவு சுட்டிக் காட்டுவதும் இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.

அத்துடன் உலகிலுள்ள முக்கிய மார்க்க அறிஞர்கள், முஃப்தீகள் போன்றோர் இவ்வமைப்புப் பற்றி வெளியிட்டுள்ள ஃபத்வாக்கள் சிலவற்றையும் எடுத்துக் காட்டுவதுடன் நபியவர்களுடைய தூய சுன்னாவுக்கு எந்ததெந்த வகையில் இவ்வியக்கத்தின் செயல்முறைகள் பல முரண்பட்டு நிற்கின்றன என்றும் முடிந்தளவு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

எனவே அல்லாஹ் எம்மனைவருக்கும் இஸ்லாத்தை அல்குர்ஆனின், தூய சுன்னாவின் ஒளியில் நபித் தோழர்களும், தாபியீன்களும் விளங்கியது போல் அதே வழியில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் வெற்றிபெற்றிட அருள் பாலிப்பானாக ஆமீன்..

-ஏ.சீ. முஹம்மது ஜலீல் (மதனீ)

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற தாங்களின் நூலில் இஹ்யா உலூமித்தீனில் 1-254 யில் வரக்கூடிய வாசகத்தை குறிப்பிட்டீர்கள். அந்தப் புத்தகத்தின் அதற்கான பக்கத்தின் பிரதியை ஸ்கிரீ ஷாட் தர முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *