Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » பொய்யர்களின் கடைசிப் புகலிடம்.

பொய்யர்களின் கடைசிப் புகலிடம்.

இஸ்லாம் மார்க்கத்தைக் களங்கப்படுத்திட களமிறங்கிய இஸ்லாத்தின் எதிரிகளின் ஆய்வறிவற்றப் பொய்ப் பிரச்சாரங்கள் பிரமிக்க வைக்கிறது. இஸ்லாத்தை விமர்சிக்கவென்றே, இஸ்லாத்தைப் படிக்கும் இந்தப் பக்கத்துக் காஃபிர்கள், என்னதான் வாசிக்கிறார்கள்? இருப்பதை இல்லையெனவும், இல்லாததை இருப்பதாகவும் சொல்வதற்கா..?

இஸ்லாத்தின் மீது விஷத்தைத் துவிடக் கிளம்பிய வெஷ குமார் – அபு லபு என்று அடித்துக் கொண்ட இவரை, நேசம், வெஷம் என்று எழுத எமக்கு உரிமையுண்டு என்றாலும், வேண்டாம் நேசகுமார் என்றே குறிப்பிடுவோம். – இந்தப் பக்கத்துக் காஃபிரின் உள்ளத்தில் குடிகொண்ட இஸ்லாமிய வெறுப்பு, மொத்த முஸ்லிம்களையும் வெறுக்கும் ஒரு உளரீதியான வியாதிக்கு அவரைத் தள்ளியிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் வைத்துக் கொண்டக் காரணப்
பெயராகிய அபூ, இப்னு என்ற பெயர்களும் பிடிக்காமல் போய் விட்டது.

சர் வில்லியம் மூய்ரின் தீவிர பக்தரான இவர், இஸ்லாத்தை எதிர்ப்பதில் சர் வில்லியம் மூய்ர் மூத்தவர், தான் இளையவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். திருக்குர்ஆன் பற்றிய இவரின் மகாப் பொய்களை அடையாளம் காட்டியதை மறுக்க திராணியற்ற இவர் என் மீதும் ஒரு மெகா அவதூறைத் திணித்தார். அது பொய்யென்று நாம் சொன்னதற்கு இவரின் மெளனமே இன்றுவரை பதிலாக இருக்கிறது.

வரலாறுகளைத் துல்லியமாக எழுதுவது போல் கட்டிக் கொள்ளும் இந்த மேதாவி!? இஸ்லாமிய வரலாற்றையும் தான் படித்திருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். இவரது இஸ்லாமிய ரிசர்ஜ் எப்படி இருக்கிறது என்றால், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு திருக்குர்ஆனில் ”முஸ்லிம்கள்” என்று சொல்லப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் நேசகுமார் என்ற மத ஆய்வு ”விஞ்ஞானி”!? போகட்டும், திருக்குர்ஆனின் சில ஆயிரக்கணக்கான வசனங்களில் இது அவருக்கு ஏற்பட்ட தவறு என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் ஒரு நல்ல விமர்சகன் தனக்கு அறிவில்லாத விஷயத்தைப் பற்றி விமர்சிக்க மாட்டார். அப்படி விமர்சிப்பவர் நேர்மையான விமர்சகராக இருக்க மாட்டார்.

//இன்று திண்ணையில்(15.09.2006) வெளிவந்த எனது கட்டுரையின் (ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்) முழுவடிவம்:// – கட்டுரையைப் பிரசவித்தவர்:- நேசகுமார்.

”முழுவடிவும்” என்று பிரசவித்த இந்த ஆக்கத்திற்கு ”முழுப் பொய்கள்” என்று பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திக்கும். அவ்வளவு பொய்கள் அதில் மலிந்து கிடக்கின்றன. கைச் சரக்கு தீர்ந்து வரும்போது, எஞ்சியுள்ள சரக்கில் கலப்படம் செய்யும் வியாபாரிகளைப் போலாகிவிட்டார் நேசகுமார். இஸ்லாத்தின் ஆவணங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும் இவரால் இஸ்லாத்தின் மீது துணிந்து பொய்களைக் கட்டவிழ்த்து விட முடிகிறதென்றால், மற்ற விஷயங்கள் இவரிடம் எம்மாத்திரம்..?

முதல் பொய்:- //முகமதுவுக்குப் பின் 200 வருடங்கள் கழித்து, பாரசீகத்தில்தான் இஸ்லாம் ஒரு மதமாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் என்கிற பதமே அரபிக்களிடம் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை – திருக்குரானில் இருப்பதெல்லாம் நம்பிக்கையாளர் பதம் மட்டும்தான். அன்றைய நம்பிக்கையாளர் முகமதுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு கீழ்ப்படிந்து ஜகாத் எனும் வரியை கொடுக்கும் ஒரு குழு-அங்கத்தினர் அவ்வளவே.//

”வரி கொடுக்கும் ஒரு குழு” என்று, என்ன சாமர்த்தியமாக திரிக்கிறார் பாருங்கள்!

இதற்கு 22:78வது வசனத்தை – (”அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்”) – சான்றாக வைத்து சிறு விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாது பொய்:- //பிரமிட்டின் உச்சியில் முகமதின் குடும்பம் இருந்தது. அன்றைய தேதியிலேயே முகமதின் விதவைகளுக்கு 10,000 தினார்கள் இப்படிச் சேர்ந்த செல்வத்திலிருந்து அளிக்கப்பட்டது.//

இது பற்றியும் முன்பு எழுதப்பட்டுள்ளது.

”என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளிக்காசையோ பங்கிட்டுக் கொள்ள(வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமாகும்”. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 2776, 3096, 6729)

நபி (ஸல்) அவர்கள், தாம் விட்டுப்போன சொத்திலிருந்து தமது மனைவிமார்கள் வாழ்வாதாரத் தேவைகளை மட்டுமே பெறமுடியும் என்று சொல்லிட்டு தமது சொத்துக்கு எவரையும் வாரிசாக்கவில்லை என்பதும் மேற்காணும் நபிமொழியிலிருந்து விளங்கலாம். அதுவும், நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் மரணத்திற்குப் பின் அதுவும் கொடுக்க வேண்டிய ஆவசியமில்லாமல், அந்தத் தொகையும் தர்மமாக கொடுக்கப்பட வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் ஆவணங்கள். இதற்கு மேல் 10.000 தினார்கள் என்பதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யட்டும் பரிசீலிப்போம்.

மூன்றாவது பொய்:- //இதன் நல்ல உதாரணம் – ஹிந்தாவுடன் அவருக்கி நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் இதன் நல்ல உதாரணம் – ஹிந்தாவுடன் அவருக்கி நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் – சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் – என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).//

மூன்னறாவது பொய்யிலுள்ள பல கிளைப் பொய்கள்:-

ஒன்று:- //அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது.//

ஹிந்த் பின்த் உத்பா மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றார் என்று அதே செய்தியிலிருந்து எம்மால் நிரூபிக்க முடியும்.

இரண்டு:- //விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் – சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று.//

சுதந்திரமான பெண்கள் திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தியை நம்மால் தர முடியும்.

மூன்று:- //குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் – என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்//

//என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே// –

– நேசகுமார், குழந்தைகள் எங்காவது போருக்குச் செல்லுமா? ”குழந்தைகள்” என்றா அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. எதற்கய்யா இப்படி பொய்க்கு மேல் பொய்யாக அடுக்கிச் செல்கிறீர்..?

ஹிந்தாவின் மகன் அநியாயமாகக் கொல்லப்படவில்லை என்பதையும் அதே செய்தியிலிருந்து நம்மால் நிரூபிக்க முடியும்.

”வேதனையுடன் சொல்வார்” ”வேதனையுடன்” என்று செய்தியில் இல்லை. இது பொய்யரின் அவதூறு+வேதனை.

நான்கு:- //(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).//

நபித்தோழர் உமர் (ரலி) என்ற ஒருவர் மட்டும், கட்டுரையாளரின் பார்வையில் நபித்தோழர்கள் என்று பன்மையில் தெரிவதேனோ..? ”சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்” – ”எக்காளமாகச் சிரித்தார்கள்” இந்த வார்த்தைதான் செய்தியில் உள்ளது என்பதை கட்டுரையாளர் நிரூபிக்கத் தயாரா..? ”சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்” என்று சொன்னது பச்சைப் பொய் என்பதையும் நாம் நிரூபிப்போம்.

பொய்யர்கள் பலவிதம் என்பார்கள் அதில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யன் என்பார்களே அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான் நேசகுமார் என்பவர். இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. மக்கா வெற்றியின் போது, அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களின் மனைவியாகிய, ஹிந்த் (ரலி) – நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வாங்கிய சம்பவத்தில் எவ்வளவு பொய்களை ஊடுறுவியுள்ளார் என்பதே அவர் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யர் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

நேசகுமார் என்ற பொய்யருக்கு தற்சமயம், – ஹிந்த் (ரலி) பெண்களிலேயே இஸ்லாத்தை அவர் போல் யாரும் எதிர்த்தவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு இஸ்லாத்தின் எதிரியாயிருந்தார் உஹத் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னா பின்னப்படுத்தி ஈரல் கொலையை கடித்துத் துப்பியவர். ஆனாலும் பின்னாளில் அவர் மனம் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு – கீழ்கண்ட செய்தியை சான்றாக வைக்கிறேன்.

ஹிந்த் பின்த் உத்பா (ரலி) சொன்னதாக புகாரியில் ஒரு செய்தி:- ”அல்லாஹ்வின் தூதரே! யாருமே பெற்றிராத கேவலத்தை நீங்கள் அடைய வேண்டும் என்று முன்பு நான் பிரியப்பட்டேன். இன்று, யாருமே பெறாத கண்ணியத்தை நீங்கள் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.

நான்காவது:- // அழகிய ரைஹானா எனும் யூதப்பெண்ணை முகமது தமக்கென எடுத்துக் கொண்டார்(இப்பெண் முஸ்லிமாக மதம்மாறவில்லை என்பதால் அடிமைப்பெண்ணாகவே முகமதின் அந்தப்புரத்தில் இருந்து இறந்துபோனார் என்கின்றனர். மதம்மாறாத காரணத்தினால் அவரை மனைவியாக ஏற்கவில்லை முகமது. தமது செக்ஸ் அடிமையாக மட்டும் வைத்துக் கொண்டார் என்று சொல்கின்றனர். சர் வில்லியம் மூர் போன்றவர்கள் இது நிஜமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்).//

பொய்யனின் செய்தியை அவனால் நிரூபிக்க முடியாமல் போகும்போது,
”அது நிஜமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது”
”அப்படியும் இருக்கலாம் என்கின்றனர்”
”அவ்வாறு சொல்லப்படுகிறது”
”அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்” என்று உளறுவான், இப்படி சொல்லித் திரிபவனின் அவதூறுகளை, ”பொய்யர்களின் கடைசிப் புகலிடம்” என்பார்கள். இந்தக் கருத்தையொத்ததாக இருக்கிறது கட்டுரையாளரின் நான்காவது பொய்.

முஸ்லிம்களே! மகாப் பொய்யரான நேசகுமாரிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளளுங்கள்! ”நாங்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்” என்கிறீர்களா..? சரி! ”மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” முழு உலகத்தையும் ஒரு சோத்துப் பருக்கைக்குள் மறைத்திட முயற்ச்சிக்கும் பேராபத்தான மனிதர் இந்த நேசகுமார்.

//முகமது அவர்களின் வாழ்வில் ஜிஹாத் மூன்று கட்டமாக கடைப்பிடிக்கப் பட்டது. அவையாவன:// –

– அதி மேதாவியின் இந்த மூன்று கட்ட உளறலுக்கும் ”இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்” என்ற பகுதியில் விளக்கம் வரும். அதுபோல் மற்றவைகளுக்கும் தொடர்ந்து விளக்கம் எழுதப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஓர் அழைப்பு,
//தழைத்து கொப்பும், கிளையுமான ஆலமரமாய் படர்ந்து தீர்க்க சிந்தனையை// – ஏற்று இளைப்பாற வரலாமே! இதனால் நரக நெருப்பிலிருந்து மீளலாம்.

பிறயாவும் பின்…

அன்புடன்,
அபூ முஹை

7 comments

  1. Dear Mr. Abu Muhai,
    Your article is very fine, but the so called Men will not come to a decent debate,as I’ve seen. Instead, they are going to repeat and reproduce the old ‘avathuuRukaL’. Please Keep going your blog to give required explanations for your readers.

    Why don’t U publish this article in Thinnai ezine?

  2. வஹ்ஹாபி

    அழுத்தமான, நிதானமான பதிவு.

    தமக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்று அபூமுஹை முன்னொரு முறை எழுதியிருந்தார்.

    எனவே, ராஜ் அவர்கள் தமிழில் பின்னூட்டங்கள் இட முயலுமாறு கோருகிறேன்.

  3. //முஸ்லிம்களே! மகாப் பொய்யரான நேசகுமாரிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளளுங்கள்! ”நாங்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்” என்கிறீர்களா..? சரி! ”மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” முழு உலகத்தையும் ஒரு சோத்துப் பருக்கைக்குள் மறைத்திட முயற்ச்சிக்கும் பேராபத்தான மனிதர் இந்த நேசகுமார்.//

    முற்றிலும் உண்மையான வார்த்தை.

  4. சவூதி தமிழன்

    அன்பின் சகோ அபூமுஹை

    தெளிவான அழுத்தமான இடுகை.

    தங்களின் மற்றும் பிறசகோதரர்களின் இது குறித்து அறச்சீற்றம் வெளிப்படுத்தும் நியாயம் நடுநிலையாளர்களைச் சென்று அடையும் என்பதில் ஐயம் இல்லை.

    எனினும் இவர் சிறிது காலம் சற்று ‘உள்வாங்குவார்’. தனி ஒருவனாகப் பலகடமைகளைச் சமாளிக்கிறேன் என்பார், பின்னர் கொலை மிரட்டல் வருகிறது என உதார் விடுவார். வாசகர்கள் மறந்துவிட்டார்கள் என நம்பி முன்னர் எதுவுமே நடவாதது போல முதலில் இருந்து தன் உளறலை ஆரம்பிப்பார். இதற்கிடையில் போலிப்பெயர்களில் ஆங்காங்கே தன் வயிற்றெரிச்சலைத் தீர்த்துக் கொள்வார். (இவரே ஒரு போலி தானே?)

    அவரும் அவருக்கு முது சொறிந்துவிடும் சிங்கியடிக் கூட்டமும் மீண்டும் இதே உளறல்களைத் தொடரும்.

    இது என்ன புதியதா?

    இருப்பினும் பொய்களைத் தோலுரித்துக்காட்டிக் கொண்டே இருங்கள். உங்களுக்கு இறைவன் துணை புரிவான்.

    இனிய ரமதான் வாழ்த்துக்கள்

  5. அபூ முஹை

    ராஜ், வஹ்ஹாபி, ஜாஃபர் அலி, சவூதி தமிழன் உங்கள் வருகைக்கு நன்றி!

    இன்று ரமளான் மாதம் தொடங்கி முதல் நோன்பு முடிந்திருக்கிறது. ரமளான் வாழ்த்துக்கள்!

    ராஜ் அவர்களுக்கு,

    விவாதம் செய்வதில் எனக்கு எதுவும் மறுப்பு இல்லை. கருத்து வேறுபாட்டில் அதுவா? இதுவா? என்ற சந்தேகமான விஷயங்களை விவாதம் செய்யலாம்.

    ஆனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று தெளிவாக்கப்பட்ட ஒரு விஷயத்தை விவாதிக்க என்ன இருக்கிறது. பொய்யென்று நிரூபிக்கப்பட்டவுடன், பொய்யுரைத்தவர் ஓடினால் நாமும் ஓடிப் பிடிக்க வேண்டும் என்கிறீர்களா..?

    ஏன், சம்பந்தப்பட்டவர் வீசிய அவதூறுகளை நம் பதிவுகளில் குறிபிட்டு எதிர் கேள்விகளும் வைத்திருக்கிறோம். உங்கள் போன்றவர்கள் அதை எடுத்துச் சொல்லி அவரிடம் விளக்கம் கேட்கலாமே?

    திண்ணை இணையதளத்தில் எழுதுவது பற்றி யோசிக்க வேண்டும் தேவையான நேரங்களை ஒதுக்க வேண்டும் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

    நீங்கள் அடுத்த முறை மறுமொழியிடும் போது தமிழில் பதிவு செய்யுங்கள். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  6. NERAM ELLAI TAMILIL TYPE ADIKKA. OFFICE L HALF DAY THAN WORK. INSHALLAH.

    NESAKUMARIN MADATHANAMA QUESTION KUM POI ULARAL KALUKKUM NENGAL SUMMA ERUKKA VENDAAM. MULLUKKU MUL. KALLUKUK KAL. ATHUTHAN EPPAM ULLA KAALA KATTATIL THEVAI.

    APPRECIATE YOUR WRITTING

    KEEP GO HEAD. VETTI NAMATHE.
    JAZAKHALLAHU KHAIRAN

    ASALAM

  7. 'தஞ்சை' கண்ணன்

    அபுமுகை ஐயா,

    திண்ணை இணைய தளத்தின் யுக்தியானது சர்ச்சையாக/அவதூறாக எழுதி வாசகர் வட்டத்தை பெருக்குவதே என்பது என் கணிப்பு.

    தொடக்கத்தில் நேசகுமாரின் எழுத்துக்களில் சில இசுலாமியர்கள் மீதான ஆதங்கம் இருந்ததாகவே நான் கருதினேன். ஆனால் போகப்போக அவரின் ஆதங்கம்/கோபம் ஒட்டு மொத்த இசுலாமியர்களையும் அப்பாவி இந்துக்கள் வெருக்க வேண்டும் என்பதாக எழுதி வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

    விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எந்த கொள்கையும் கிடையாது. நேர்மையான விமர்சகனுக்கு அழகு,கொடுக்கப்படும் நியாயமான விளக்கத்தை ஏற்பதே. குறைந்தபட்சம் விளக்கத்தில் திருப்தியில்லை என்றாவது தெளிவுபடுத்துவதாகும்.நேசகுமார்,தருமி போன்றவர்களிடம் அத்தகைய நேர்மையை எதிர்பார்க்க முடியவில்லை என்பது என் போன்ற நடுநிலை பார்வையாளர்களுக்கு ஏமாற்றமான விடயம்.

    ரம்ஜான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *