Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் » டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

Jaguarவளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது என்ற செய்திதான் அது.

டாடா குழுமம் “ஒரு லட்ச ரூபாய்” (உலகின் மிகக் குறைந்த விலை) காரினை கடந்த ஜன-10, 2008ல் அறிமுகம் செய்தபோதே, டாடா தனது எதிர்கால இலக்கில் உறுதியாக இருப்பதை பறைசாற்றியது. ஏனெனில், 2005-ல் குறைந்த விலை கார் முயற்சியில் இறங்கியபோது பலர் கிண்டலும்,கேலியும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களில் மட்டும், டாடா நிறுவனம் வாங்கிய மிகப் பெரிய சொத்துக்களின் பட்டியல்:

பிப்ரவரி 2000-ல் இங்கிலாந்தின் டெட்லே (Tetley) நிறுவனத்தை 432 மில்லியன் டாலருக்கு வாங்கி உலகின் இரண்டாவது (Packaged) டீ நிறுவனமாக மாறியது.

பிப்ரவரி 2004-ல் தென் கொரியாவின் டாய்வோ குழுமத்தை (Daewoo Group) 102 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு கையெழுத்தானது.

ஆகஸ்ட் 2004-ல் சிங்கப்பூரின் லோன் ஸ்டீல் மில்லர் மற்றும் நாட்ஸ்டீல் நிறுவனங்களை (lone steel miller, NatSteel Ltd) 286 மில்லியன் டாலருக்கு டாடாவின் ஸ்டீல் குழுமம் வாங்கியது.

ஜுன் 2005-ல் அமெரிக்க நிறுவனமான எய்ட் ஓ கிளாக் காஃபி கம்பெனியை (Eight O’Clock Coffee Co) 220 மில்லியன் டாலருக்கு டாடாவின் காபி நிறுவனம் வாங்கியது.

ஜுலை 2005-ல் வி.எஸ்.என்.எல் நிறுவனம் அமெரிக்க நிறுவனமான டெலிகுளோப் இண்டெர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் (Teleglobe International Holdings Ltd)-ஐ 239 மில்லியனுக்கு வாங்கியது. மேலும் டைய்கோ பன்னாட்டு கடல்வழி ஃபைபர் ஆப்டிக் கேபில் நெட்வொர்க் (Tyco International’s global undersea fibre optic cable network unit)-ஐ 130 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஆகஸ்ட் 2006-ல் டாடா தேயிலை நிறுவனம், யு.எஸ் என்ஹேன்ஸ்டு வாட்டர் ஃபர்ம் எனர்ஜி பிராண்ட் நிறுவனத்தை (U.S. enhanced water firm Energy Brands Inc) 677 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம், ஆங்கிலோ டட்ச் ஸ்டீல் மேக்கர் கோரஸ் குழுமத்தை (Anglo-Dutch steelmaker Corus Group) 13 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய கையகப்படுத்தலாக கருதப்படுகின்றது.

மார்ச் 2007-ல் டாடா பவர் நிறுவனம், இந்தோனேசியாவின் இரண்டு எண்ணெய் சுரங்கங்களை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2008-ல் டாடாவின் கெமிக்கல்ஸ், யு.எஸ் சோடா-ஆஸ் உற்பத்தி (U.S. soda-ash producer General Chemical Industrial Products Inc) நிறுவனத்தை 1.01 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

மேற்கண்ட உதாரணங்களில் டாடாவின் சிறிய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை ஃபோர்டு நிறுவனம் விற்றுவிட முடிவு செய்தபோது, இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், “மகேந்திரா அண்ட் மகேந்திரா” நிறுவனமும் போட்டி போட்டன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது. இதன் காரணம், கார் உற்பத்தியில் டாடா நிறுவனம் ஏற்கனவே புகழ் பெற்றது. மேலும் அவர்களுக்கு நல்ல உற்பத்தி திறன் இருக்கிறது என்று தொழிலாளர் யூனியன் கருதியது. இங்கிலாந்தில் கோவன்ட்ரி, பர்மிங்ஹாம், லிவர்பூல் ஆகிய இடங்களில் இருக்கும் ஜாகுவார் தொழிற்சாலையில் 10 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். வெஸ்ட் மிட்லாண்ட் மற்றும் வார்விக்ஷயரில் இருக்கும் லேண்ட்ரோவர் தொழிற்சாலையில் 9 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்கள் பணக்காரர்களின் மத்தியில் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருந்தாலும்கூட மற்ற ஆடம்பர கார்களுடன் ஒப்புமைப் படுத்தும்போது அதன் விற்பனை விகிதம் குறைந்திருப்பதும், ஜாகுவார் பிராண்டினால் ஏற்கனவே ஃபோர்ட் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1999 வருடத்திலிருந்து லேண்ட் ரோவரின் விற்பனை, 29 ஆயிரம் எண்ணிக்கை முதல் 46 ஆயிரம் எண்ணிக்கை வரை 2008-ன் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜாக்குவார் 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் எண்ணிக்கையாக குறைந்திருக்கிறது. எனவே பொருளாதார நோக்கர்களின் எண்ணமெல்லாம், டாடாவின் “லேண்ட் ரோவர் தேர்வு”, ஜாக்குவாரை விட சிறந்தது என்பதுவேயாகும்.

சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை தனியார் துறை நிறுவனங்கள் என்றால் அது மிகை அல்ல. வெற்றிகரமாக இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தையும் இந்திய நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன. வெகுவேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு இந்திய நிறுவனங்களும் வேகமாக முன்னேறுகின்றன. அதற்கான சமீபத்திய உதாரணம் டாடா குழுமம்.

டாடா குழுமம் தனக்கான ஒரு எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை மிகத்திறமையுடன் பயன்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறது.

-அபூ உமர்

4 comments

  1. சலாஹுத்தீன்

    இந்திய நிறுவனங்கள் உலகத்தரத்தில் செயல்பட முடியும் என்பதற்கு டாடா குழுமம் ஒரு சிறந்த உதாரணம்.

  2. நானோ (Nano) கார்:
    மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்
    — நானோ காரைத் தயாரிப்பதர்காக, வரிச் சலுகை, மலிவான நிலக் குத்தகை எனப் பல நூறு கோடி ரூபாய் அரசுப் பணத்தை மானியமாகச் சுருட்டிவிட்டது, டாடா நிறுவனம்.

  3. arasu panathai suruthiya yarum makkal payan adayakudeya entha muyarcheeyum seiyavellai

  4. tata nana car indian cheapest car but srilanka prize rs-9,75000 why?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *