Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » விவாதங்கள் விவாதங்களாகவே..

விவாதங்கள் விவாதங்களாகவே..

இஸ்லாம் குறித்த என்னுடைய ஒரு பதிவுக்குப்பின் அக்பர் பாட்சாவின் ‘இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்’பதிவும் அப்துல்லாஹ்வின் ‘வாருங்கள் விவாதிக்கலாம்’ பதிவும் நேசகுமாரின் ‘விவாதங்களும் சில விளக்கங்களும்’கூடப் படித்தேன். இந்நிலையில் என்கருத்து இது தான்:

யாரும் யாரையும் தாக்காமல் எங்கிருந்தோ கிடைத்த/கிடைக்கிற; படித்த/படிக்கிற அவதூறுகளை அள்ளி வீசாமல் அழகிய ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கித் தொடர்ந்து எழுதி வரலாம். நிறைய விஷயங்கள் தெளிவாகும் நிறையப்பேருக்கு!
மாதிரிக்கு:
1).கடவுள் கொள்கை எப்படி இருந்தால் நலம்?
2).பர்தா எது – அது அவசியமா?
3).இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களும் பாதிப்புகளும்!
4).தீண்டாமைத் தீண்டலுக்கு சமூகப் பின்னணி என்ன? தீர்வுதான் என்ன? 5).இளம்பெண்துறவுகளின் சாத்தியங்களும் சங்கடங்களும்!
6).மதங்களும் அவை கட்டமைக்கும் சமூக ஒழுக்கங்களும்!
7).சமூகத்தைப் பீடித்துள்ள பயங்கரவாத வியாதிகள் ஏன்? நிவாரணம் என்ன? அரசும் சமூகமும் இதில் (பயங்கரவாத ஒழிப்பில்) எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகின்றன? –
8). இஸ்லாத்தில் தூதர் கடவுளாகக் கருதப்படுவதில்லை யென்பது – என்று நிறைய விஷயங்களை அழகாக ஆரோக்கியமாக விவாதிக்கலாமே?

நேசக்குமார் ஏன் எதிர்மறைப் பார்வை என்றப்பெயரில் ‘சகதியில் புழுத்து கிடக்கும் முகம்’ என்றும் ‘ரவுடி’ என்றும் முஸ்லிம்களின் புனிதங்கள் மீது அவதூறுகளைப் பெய்தும் காழ்ப்புணர்வைக் கொட்ட வேண்டும்?

காழ்ப்புணர்வைக் காட்டுவதுதான் நோக்கம் என்றால்; அதைக் கொண்டுத் தான் மன அரிப்பை சொறிந்துக்கொள்ள முடியும் என்றால் விவாதம் என்று ஒரு அழகிய நாகரீக முகமூடி எதற்கு? உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தி நோக்கத்துக்கேற்ப நேர்மையாக செயல் படலாமே?.இரட்டை மனநிலைப்பாடு நயவஞ்சகத்தனமல்லவா? விமர்சனம் என்றப் பெயரில் யாரும் யார் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது விபரீதமல்லவா? இது மேலும் மேலும் இடைவெளிகளைத்தானே அதிகப்படுத்தும்.

இப்போதும் நேச குமார்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் விவாதங்களைத் தொடருங்கள் என்றுத்தான் -விவாதம் என்பதின் சரியான அர்த்தத்தில். – காய்த்தல் உவத்தல் இன்றி!.

6 comments

  1. மாயவரத்தான்...

    //Sunday, February 13, 2005
    வேண்டுகோள்
    வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்துவதை; ஒருவருக்கொருவர் குற்றம் கன்டுபிடிப்பதை விடுத்துஆக்கப்பூர்வமான நல்ல இலக்கியங்கள் மலரவும் வளரவும் வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி

    posted by சுட்டுவிரல் @ Sunday, February 13, 2005

    1 Comments:
    At Sun Feb 13, 05:17:35 PM, அல்வாசிட்டி.விஜய் said…
    வணக்கோண்ணா, இப்ப தான் உள்ளார வர்றீங்களா? எல்லாரும் இப்படி தான் நெனச்சிக்கிட்டு உள்ள வர்றோம்… ஆனா காலப்போக்குல….//

    Halwacity…Neenga oru dheerkkadharisidhaan!!! :)))

  2. சுட்டுவிரல்

    மாயவரத்தாருக்கும் ஹல்வாசிட்டியாருக்கும்!
    எதிர்மறைப்பார்வை என்றப் பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் யாரும் யார் மீதும் அழுக்குப்பொய்களையும் அவதூறுச்சேற்றையும் அள்ளி வீசவேண்டாம் என்றுத்தான் என்னுடைய இந்தப் பதிவிலும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உணருங்கள். என் முதல் பதிவின் மறுப்பதிப்பாகவே!
    விவாதம் என்றால் நயமாகவும் நாகரீகமாகவும் அதே நேரம் வலிமையான வாதங்களுடனும் வெளிப்படவேண்டும் என்றுத்தான் நானும் நினைக்கிறேன்.அழுக்காறுகளாலும் வன்மத்தாலும் வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டாமே என்பது தான் இப்போதும் எப்போதும் என் கோரிக்கையும் வேன்டுகோளும். ஹல்வாசிட்டியாருடைய ‘தீர்க்கதரிசனம்’ பலிக்காதிருப்பது தான் நலம்.

  3. சர்தார்

    சுட்டு விரலின் சுட்டுதலில் உண்மை இருக்கிறது, பெருமளவில்!

    — சர்தார்

  4. சுட்டுவிரல்

    புரிதலுக்கு நன்றி சர்தார்.
    அறிவு விளக்கேற்றி விடுகிற விவாத/விமர்சனங்களுக்கும், வெறுப்பை மட்டுமே உற்பத்தி செய்கிற அவதூறு/காழ்ப்புணர்வுகளுக்குமான வித்தியாசத்தைத் தான் நான் விளக்க முற்பட்டேன்.
    விவாதங்களில் வாதங்கள் பிடிவாதங்களாகவோ பக்கவாதங்களாகவோ ஆகிவிடக்கூடாது என்பது தான் என் கட்டுரைக் கருத்து.

    – சுட்டுவிரல்

  5. அல்வாசிட்டி.சம்மி

    அண்ணாச்சி உங்க ஆதங்கம் நியாயமானதுதான்.

    எவ்வளவு அழகாக பேசி, விவாதித்து மகிழ ஒரு தளம் கிடைத்திருக்கிறது, ஆனால் இங்கும் வந்து தமிழர்கள் தங்கள் வேற்றுமைகளை மட்டுமே நிறைய அலசுகிறார்கள்.

    மற்ற சாதி மதங்களை குற்றம் சொல்லும் அல்லது தாக்கும் வலைபதிவுகளை நிராகரிக்க காசியிடம் கேட்க்கலாம்.

    அல்வாசிட்டி சம்மி.

  6. சரியாகச் சொன்னீர்கள். விவாதங்கள் புரிதலுககாக மட்டுமே. தன் கருத்தை மற்றெல்லோரும் ஏற;றாக வேண்டும் என நினைப்பது தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *