Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » இணையம் » மேலும் சில எழுத்துரு மாற்றிகள்

மேலும் சில எழுத்துரு மாற்றிகள்

1. மேற்கோள்குறிகள் (inverted comma) சீர்மை
ஆரம்பம் மற்றும் இறுதி குறியீடுகள் தட்டச்சு செய்த இடங்களில் “பெட்டி, பெட்டியாக” காட்சி தந்தாலும் தொடராக எழுதப்பட்ட மூன்று புள்ளிகள் (…) வேறு எழுத்தாக உங்கள் இணைய உலாவியல் காட்சி தந்தாலும், உங்கள் செய்திகளை இங்கு இட்டு சீரமைத்துக்கொள்ளுங்கள். திஸ்கி (Tscii) எழுத்துருக்களில் தட்டச்சு செய்தவைகளை யுனிகோடு எழுத்துருவில் மாற்றும்போது இப்பிரச்சினை வரலாம். குமுதத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்டவையும் இதுபோல பிரச்சினைகளுக்கு ஆட்படுவதுண்டு.

அதாவது பிரத்யேக மேற்கோள்குறிகளை கண்டுபிடித்து அதற்கு பதிலாக சாதாரண மேற்கோள்குறிகளை இடும் பணிகளை இந்த மாற்றி (Converter) செய்யும்.

பிளாக்கர் வலைப்பதிவுகளில் உள்ள மேற்கண்ட செய்திகளை சீரமைக்க, Edit –> html mode (do not use compose mode) பகுதிக்குச் சென்று, அங்குள்ள செய்திகளை முதல்பெட்டியில் இட்டு Enter-ஐ தட்டி, பிறகு இரண்டாவது பெட்டியில் தெரியும் செய்திகளை மீண்டும் பழைய இடத்தில் Paste செய்துக்கொள்ளுங்கள். எழுத்துகள் மற்றும் Script ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் வராது.

Inverted comma correction

2. கவிப்பிரியா to யுனிகோடு
சுரதாவின் கன்வர்ட்டரை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டாலும் முற்றிலும் புதிய எழுத்துருக்கான மாற்றியாகும். கவிப்பிரியா என்ற எழுத்துரு தினமணி தளத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருவுடன் ஒத்துபோவது போல் தோன்றினாலும் உயிரெழுத்துக்கள் மற்றும் இன்னும் பல எழுத்துக்களில் முற்றிலும் மாறுபடுகிறது.

கவிப்பிரியா எழுத்துருவை பயன்படுத்தும் ஒரு வாரஇதழ் வெளியீட்டாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க (அவர்களின் தளத்தை யுனிகோடில் மாற்றியமைக்க) இதனை உருவாக்கினேன்.

Kavipriya2Unicode

3. பாமினி to யுனிகோடு
இதற்கு முன்பு சுரதாவின் பாமினி to யுனிகோடு எழுத்துரு மாற்றியை சீரமைத்திருந்தேன். அதில் மேலும் ஒரு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு சீரமைத்துள்ளேன்.

Bamini2Unicode

4. “T_” என ஆரம்பிக்கும் எழுத்துருக்களின் யுனிகோடு மாற்றி
இது T_Bamini, T_sarukesi, T_singari, T_singaram, T_Roja, T_Aruvi… போன்ற பெயர்கள் கொண்ட எழுத்துருக்களின் யுனிகோடு மாற்றி. இது பாமினி குடும்பத்தை சேர்ந்ததுபோல் காட்சி தந்தாலும் சில விஷயங்களில் மாறுபட்டு காணப்படுவதால் தனியாக ஒரு எழுத்துருமாற்றி உருவாக்கியுள்ளேன்.

T_fonts2Unicode

5. யுனிகோடு to பாமினி
தற்பொழுது யுனிகோடு to பாமினியும் சீரமைத்து தந்துள்ளேன். இது பொதுவாக புத்தக வெளியீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

Unicode2Bamini

மேற்கண்ட ஐந்து எழுத்துரு மாற்றிகளையும் தமிழ்மணம் உறுப்பினர்கள், வாசகர்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் (பெயர்களை நீக்காமல்) பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் தளத்திலோ மற்றும் சி.டி. தொகுப்புகளிலோ தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள இதனையே எனது சம்மதமாக எடுத்துக்கொள்ளவும்.

சுட்டியை சொடுக்கி பக்கங்கள் திறந்த பின்னர் “Save as” கட்டளை கொடுத்து உங்களின் கணினியிலேயே சேமித்துக்கொள்ளலாம். அல்லது சுட்டியில் மீது மவுஸை கொண்டு சென்று வலப்புறம் சொடுக்கி “Save target as” இட்டும் சேமித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
முஃப்தி

4 comments

  1. மிக்க நன்றி! முஃப்தி அவர்களே!

  2. >>மேற்கோள்குறிகள் (inverted comma) சீர்மை

    Many Thanks. Very helpful.
    -balaji

  3. முஃப்தி

    ஜாஃபர் மற்றும் பாஸ்டன் பாலா,

    பயன்பெற்று/கருத்துகளை பதியவைத்த உங்கள் இருவருக்கும் நன்றி

    அன்புடன்
    முஃப்தி

  4. சர்தார்

    தாமதமாக இப்பதிவைப் பார்க்க நேர்ந்தது.

    யுனிகோடு பயன்பாடு அறிந்தும், பழைய தட்டச்சு முறை பழகிவிட்ட காரணமாகவோ, அல்லது சரியான எழுத்துரு மாற்றி கிடைக்காத காரணங்களாலோ பல பேருக்கு யுனிகோட் என்பது சிம்மசொப்பனமாகவே இருந்தது.

    தங்களின் இம்முயற்சி மூலம் பல conventional இணையங்கள் புதிய பொலிவு பெறும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *