Featured Posts

ஆளுக்கொரு நீதி!

கோவை குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த பத்து வருடங்களாக சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஆனால் குற்றம் நிரூபிக்கப் படாத எவரும் ஜாமீனில் வெளிவந்து சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்ளலாம். அந்தவகையில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நடந்த ஒரு கருத்தருங்கம் பற்றிச் சகோதரர் . கோ.சுகுமாறன் அவர்கள் …

Read More »

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) …

Read More »

அபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு?

இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது. ”உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்” (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது. 004:023) திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர். “காவியச் சுவை மிக்க கம்ப …

Read More »

மக்கா வெற்றி போது ஓதிய குர்ஆனிய வசனங்கள்..

457. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி ‘அல்ஃபதஹ்’ என்னும் (48-வது) அத்தியாயத்தை ‘தர்ஜுஉ’ என்னும் ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்தததை கண்டேன்” என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் ‘தர்ஜுஉ’ செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன். புஹாரி:4281 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Read More »

குர்ஆனை இனிய ராகத்துடன் ஓதுதல்..

455.அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா (ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்: குர்ஆனை இனிமையாக ராகமாக ஓதுதலாகும். புஹாரி :5023 அபூஹூரைரா (ரலி) 456.நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) …

Read More »

குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..

451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள். புஹாரி:5038 ஆயிஷா (ரலி) 452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் …

Read More »

நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா?

மாயமில்லை! மந்திரமில்லை!! நீங்கள் 2% சிறுபான்மையினரில் ஒருவரா அல்லது 98% பெரும்பான்மையினரில் ஒருவரா என்று சோதிக்கும் எளிய கணக்கு! மின்மடலில் வந்தது. சற்று ஆச்சரியமானதும் கூட!! நீங்களும் முயன்று பாருங்களேன். அதற்குமுன், கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொன்றாக பதில் சொல்லுங்கள். முதல் கேள்விக்கான பதில் சொல்லும்வரை அடுத்த கேள்விக்குச் செல்லக் கூடாது. விரைவாக பதில் சொன்னால் உங்கள் புருவங்கள் விரைவில் ஆச்சரியத்தால் உயரும் என்பதற்கு 100% உத்திரவாதம்! அ) ஒன்று …

Read More »

தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்

448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். …

Read More »

அன்பின் நண்பன்

அன்பின் அபூமுஹை, வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன். அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது. அவர் – பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் …

Read More »