Featured Posts

வானத்தின் மீது பறந்தாலும்..!

மானுடப் பார்வையில் வானம் என்பது வரம்புக்கு உட்பட்டதாக இல்லை. மேல் நோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம் எதுவும் வானத்தைப் பார்ப்பதாகவே சொல்லப்பட்டு, மேலே பறக்கும் எதுவும் வானத்தில் பறப்பதாகவே பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. சுமாரான உயரத்தில் பறக்கும் பறவைகளை வானத்தில் பறப்பதாகச் சொல்கிறோம், பல மடங்கு உயரத்தில் பறக்கும் விமானங்களையும் வானத்தில் பறப்பதாகவேச் சொல்கிறோம். அப்படியானால் வானம் என்பது உயரத்தில் இருக்கிறது என்றால் வானத்தின் துவக்கம் எது..? மேகத்திலிருந்து மழை பொழிகிறது …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-10

சுழலும் பூமி(3) -10 ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஓன்றுமில்லாத சூன்யப் பெருவெளியில் இந்தப் பிரம்மாண்டமான பேரண்டத்தையும், அதற்குள் நமது சூரியக் குடும்பத்தையும் படைக்க ஆற்றல் பெற்றவன் மாபெரும் பாக்கியவான். அந்த அதிகம்பீர ஆற்றலின் ஏகாதிபதி தன்னுடைய படைப்பில் உதிப்பதற்கும், அஸ்தமிப்பதற்கும் எல்லைகளை வடிவமைத்திருக்கும் தகவலைத் தந்து, அதன் வாயிலாகப் பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியல் பேருண்மையைத் தன் திருமறையில் ஓதி நிற்கிறான். சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வந்து இராப்பகலைத் …

Read More »

கல்வி – ஒரு இஸ்லாமியப் பார்வை

2001 வருடம் முதல் செப்டம்பர் மாதம் என்றாலே ‘தீவிரவாதம்’ பற்றியும் , உலகில் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதனோடு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்பு படுத்தி பேசுவதில் சிலருக்கு கொள்ளைப் பிரியம். ஒரு மாற்றத்திற்கு செப்டம்பர்-5 அன்று அணுசரிக்கப்படும் ஆசிரியர் தினம் பற்றியும், கல்விக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டிய மரியாதையை இஸ்லாம் எப்படி வலியுறுத்துகிறது என்றும் பார்ப்போம். வளர்ந்து ஆளாகியதும், உயிருக்கு உயிராய் உச்சி மோர்ந்து வளர்த்த பெற்றோர்களையே நினைக்க நம்மில் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 3

மேலும் பெட்ரோலை ஊற்றி எரிப்பதற்கும், கேஸ் அடித்து எரிப்பதற்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். இந்த பயிற்சிகளை எல்லாம் இவர்கள் மிகவும் சிரமங்களை மேற்கொண்டு தான் எடுக்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் உணர மறுக்கிறோம். அனைத்தையும் நாம் இலகுவாக பெற்றிட முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது. உடலை வருத்தாமல் நம் இலக்கை அடைய முடியாது என்பதை அவர்கள் …

Read More »

82] அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்..

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 82 இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு. மற்ற எந்த அரபு தேசமும் செய்ய முன்வராதவகையில் இஸ்ரேலை அங்கீகரிப்பது. அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ஒப்பந்தத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்தது. நார்வேயில் அமைதி ஒப்பந்தம். மீண்டும் அமெரிக்காவில் அதை உறுதிப்படுத்துவது. இதெல்லாம் நடந்து முடிந்தவுடனேயே அமைதிக்கான நோபல் பரிசு. அதையும் இஸ்ரேலியர்கள் இரண்டு பேருடன் பகிர்ந்துகொண்டது. என்ன இதெல்லாம்? செய்வது யார்? யாசர் அராஃபத்தா? …

Read More »

81] பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 81 ஓஸ்லோ ஒப்பந்தப்படி காஸாவையும் ஜெரிக்கோவையும் முதலில் ஓர் ஐந்தாண்டு காலத்துக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, அரேபியர்களுக்குக் கிடைக்கும். தன்னாட்சி அதிகாரம் என்கிற பெயரில் அது வருணிக்கப்பட்டாலும், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பின் குறுநில ஆட்சியாளர்களாக அரேபியர்கள் இருக்கலாம், இயங்கலாம். பதிலுக்கு யாசர் அராஃபத் என்ன செய்யவேண்டும்? இதில்தான் யூதர்களின் குயுக்தி வெளிப்பட்டது. பி.எல்.ஓ.வை அரேபியர்களின் ஒரே அரசியல் முகமாகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-9

சுழலும் பூமி(2) -9 ஏ.கே.அப்துர் ரஹ்மான் இராப்பகலை நிகழ்த்துவதற்காக, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே சூரியன் ஒரே இடத்தில் நிற்கிறது. அதற்கு முன்னால் பூமி சுழல்கிறது. இப்போது இந்த அறிவியலை, சூரியனுடைய பெயரையோ, பூமியின் பெயரையோ நேரடியாகச் சம்பந்தப் படுத்தாமல் நாம் கூற வேண்டும். அதே நேரத்தில் அதில் அறிவியல் பிழையும் ஏற்படக் கூடாது. எப்படிக் கூறலாம்?. சூரியனுக்கு முன்னால் முகம் காட்டி நிற்கும் …

Read More »

80] ஓஸ்லோ ஒப்பந்தம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 80 பி.எல்.ஓ. போன்ற மாபெரும் போராளி இயக்கங்களின் தலைவர்கள் பாலஸ்தீனிலேயே இருந்தபடி போராட்டங்களை நடத்துவது என்பது சற்றும் இயலாத காரியம். ஓர் இயக்கத்தை வழி நடத்துவது என்பது நூற்றுக்கணக்கான சிக்கல்களை உட்கொண்டது. முதலில் போராளிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு சௌகரியமான இடம், வசதிகள், உணவு, போதிய தூக்கம், பாதுகாப்பு மிகவும் அவசியம். இவற்றைவிட முக்கியம், பணம். அப்புறம் அரசு ஆதரவு. தடையற்ற …

Read More »

குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்

The Final Solution – குஜராத் படுகொலை: ஆவணப்படம் நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து …

Read More »

79] இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 79 நமக்குத்தெரிந்த ஊர்வலங்கள், நாம் பார்த்திருக்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், நமது தேசத்தில் நடைபெறும் மாபெரும் பேரணிகள், சீரணி அரங்கத்தில் திரளும் மக்கள்வெள்ளம் _ இவற்றைக் கொண்டு பாலஸ்தீனில் அன்று நடைபெற்ற இண்டிஃபதாவைக் கற்பனை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில், எண்பதுகளின் பிற்பகுதியில், பாலஸ்தீனியர்களின் இந்த எழுச்சி அலையை ஒப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காமல் திண்டாடித் தெருவில் நின்றிருக்கிறது சர்வதேச மீடியா. பத்து, நூறு, ஆயிரமல்ல. லட்சக்கணக்கில் …

Read More »