Featured Posts

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன. அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார். இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை …

Read More »

ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ

ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: ‘ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ’ ஆனந்த விகடன் 17.4.05 இதழில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபலிக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி …

Read More »

விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: “விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்” ஆனந்த விகடனின் வாசகனாகிய நான், கடந்த 17.04.05 தேதியிட்ட இதழில் திரு. சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியைப் படித்து அதிர்ந்துபோனேன். ஸ்ரீரங்கத்தில் தேர் இழுக்கும் கோவிந்தா கூட்டத்தினரின் நாட்டுப்புறப் பாடலை ஆராய்ந்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்று ‘கோயில் ஒழுகு’ கூறுவதாக ஒரு பெரும் குண்டைத் …

Read More »

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும்

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது, வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 4

திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது இந்த பாசிஸ வெறியர்களிடமிருந்து தப்பித்து கொள்ளுங்கள், VHPயினர் ஆயுதங்களுடன் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள் என்று சக இந்துக்கள் பதட்டத்துடன் வந்து சொன்னார்கள். வெறியர்களிடமிருந்து தப்பி பிழைக்க, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினார்கள் முஸ்லிம்கள். தப்பியவர்கள் போக மீதமுள்ள முஸ்லிம்களை இந்த வெறியர்கள் துண்டு துண்டாக வெட்டி போட்டார்கள். ரோடெங்கும் மூட்டை முடிச்சுகள் சிதறி கிடந்தன. இடையிடேயே முஸ்லிம்களின் …

Read More »

84] அல் அக்ஸா மசூதியின் பின்னணி

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 84 இந்தச் சரித்திரத்தின், மிக ஆரம்ப அத்தியாயங்களில் தொட்டுக்காட்டிய, ஒரு மிக முக்கியமான பிரச்னையின் வாசலில், இப்போது நிற்கின்றோம். உள்ளே சென்று, விரிவாக அலசி ஆராயவேண்டிய விஷயம் அது. அல் அக்ஸா மசூதி. அதனை மீட்பதற்காக பாலஸ்தீனியர்கள் தொடங்கிய ‘அல் அக்ஸா இண்டிஃபதா’வைப் பார்ப்பதற்கு முன்னால், அம்மசூதியின் பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்னையின் ஆணிவேர், இந்த இடத்தில்தான் இருக்கிறது. …

Read More »

83] ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்?

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 83பாலஸ்தீன் விடுதலைப் போராட்ட சரித்திரத்தில், ஓஸ்லோ ஒப்பந்தம் மிக முக்கியமானதொரு கட்டம். ஏனெனில் அமைதியை உத்தேசித்துச் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் மக்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தியையே உண்டாக்கியது. இப்படி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதற்காக, இஸ்ரேலியப் பிரதமராக இருந்த இட்ஸாக் ராபினை ஒரு யூதரே கொலை செய்தார் (1995). அடுத்து வந்த பொதுத்தேர்தலில், யூதர்கள் மிகக் கவனமாக பழைமைவாத யூதரான …

Read More »

பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்

இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் நீர் நினைப்பதுபோல நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்கள். இதைக் …

Read More »

பந்தாடப்படும் பெண்மை

சானியா மிர்ஜா – ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி. இதுவரை கிரிக்கெட் மோகம் கொண்டிருந்த இந்திய விளையாட்டு ரசிகர்களை டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்த இளம் இந்திய மங்கை. ஆந்திராவைச் சார்ந்த முஸ்லிம் பெண். வயது 19. பெற்றோர் இம்ரான் மிர்ஜா – நசீமா. இதுவரை சினிமா நடிகைகளின் ஆடைகளும், அணிகலன்களும்தான் இந்திய மங்கைகளின் மாடல். ஆனால் இன்று மூக்குத்தி, கண்ணாடி என அணிகலன்களிலும் சானியாவின் தாக்கம். லியண்டர் பயசும், …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-11

சுழலும் பூமி(4) -11 ஏ.கே.அப்துர் ரஹ்மான் சூரியன் சுழல்வதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவே அன்றி, சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை எனக் கூறும் திருமறையின் பற்பல வசனங்களை முந்திய கட்டுரைகளில் கண்டோம். சூரியக் குடும்பத்தின் இயக்கதைப் பற்றிய இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பை மேலும், மேலும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சத்தியத் திருமறையின் மேலும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள். திருக்குர்ஆன் கூறுகிறது: ‘பின் வாங்கிச் செல்லும் இரவின் மீதும், புலரும் வைகறையின் மீதும் …

Read More »