Featured Posts

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.

Read More »

67] அந்த மூன்று காரணங்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 67 இஸ்ரேல் உருவான போது காஸா பகுதி இஸ்ரேலின் பெருமைக்குரிய இடங்களுள் ஒன்றாக இருந்தது. 1948 யுத்தத்தின்போது அது எகிப்து வசமானதை ஏற்கெனவே பார்த்தோம். எப்படியாவது காஸாவை எகிப்திடமிருந்து மீட்டுவிடவேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் அடிப்படை எண்ணம். இழந்த பகுதியை மீட்கும் சாக்கில் இன்னும் கொஞ்சம் சேர்த்துச் சாப்பிட முடிந்தால் சந்தோஷம்தானே? இந்தத் திட்டத்துடன்தான் இஸ்ரேல் ராணுவம் காஸா வழியாக எகிப்தினுள் புகுந்தது. யுத்தம் வரத்தான் …

Read More »

66] சூயஸ் கால்வாயின் சரித்திரம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 66ஒரு கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்? ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும். மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் …

Read More »

வேண்டாத பிள்ளை! (சிறுகதை)

(‘நம்பிக்கை’ ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..) அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். …

Read More »

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும்.

Read More »

திருக்குர்ஆன் சில வசனங்கள் விளக்கம்!

இறைத்தூதர், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பல கடவுட்க் கொள்கையாளர்களும், யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அதனால் முஸ்லிம்கள் பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஒரிறைக் கொள்கையாளர்களாகிய முஸ்லிம்களும் பல தெய்வக் கொள்கையாளர்களாகிய நிராகரிப்பாளர்களும் உறவினர்களாக இருந்தார்கள். உதாரணமாக: அலி (ரலி) சிறு வயதிலேயே …

Read More »

65] எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 65 ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் …

Read More »

நான்தான் உங்கப்பன்டா..

உலகத்தில் நாட்டுக்கு நாடு, மனிதனுக்கு மனிதன் என்று எவராக இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு “உனக்கு அப்பன் நானடா” என்று முன்னேறி வருகிறார்கள். இந்த முன்னேற்றம் மனித வாழ்க்கையை உயர்த்துமானால் அது அவசியமான முன்னேற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பகட்டுக்காகவும், பெருமைக்காகவும்தான் எனும்போது சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. இவர்களின் முன்னேற்றம் யார் “அதிக நேரம் முத்தம் கொடுப்பது” என்பதிலும், பாம்பு பல்லி போன்ற விஷ ஜந்துக்களை கடித்து விழுங்குவதிலும், …

Read More »

குறிப்பு (1)

ஒருவன் அடுத்தவனை நோக்கி நபியவர்களின் பொருட்டால் கேட்கிறேன் (அவர்களைக் கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று கூறினால் இக்கூற்றிலுள்ள ‘நபியைக் கொண்டு கேட்கிறேன்’ என்பதின் கருத்தில் நபியை ஈமான் கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை கருதப்பட்டால் இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும்.

Read More »

இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு

பகுத்தறிவு படைத்தவன் தன்னைப் படைத்த இறைவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் இடையிலுள்ள பல வித்தியாசங்களை விளங்கிக் கொள்வான். ஒன்று: அல்லாஹ் பிறரின் வணக்க வழிபாடுகளில் இருந்தெல்லாம் தேவையற்றவன். அவன் ஒருபோதும் தன் அடியார்களை வேண்டி நிற்க மாட்டான். பிறரை வேண்டி நிற்பது மனிதப் பண்பல்லவா! எத்தனைப் பெரிய மாமன்னரானாலும் பிறரின் உதவி ஒத்தாசைகளை விட்டு விலகி நின்று வாழ முடியாது.

Read More »