Featured Posts
Home » Tag Archives: கதைகள் (page 2)

Tag Archives: கதைகள்

நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Read More »

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

Read More »

ஆராய்ச்சியாளரின் சிந்தனை?! (நீதிக்கதை)

சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.

Read More »

புத்திசாலித் தந்தை, புத்திசாலி மகன் (நீதிக்கதைகள்)

புத்திசாலித் தந்தை (பழசு) ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.

Read More »

மகனின் சாதுரியம் (சிறுகதை)

விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!

Read More »

குரங்கு விசாவில்.. (நீதிக்கதை)

ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று. காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.

Read More »

கடவுளின் பெயரால் (சிறுகதை)

ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை. ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.

Read More »

நினைவலைகள் (சிறுகதை)

பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

Read More »

சுமைதாங்கி (சிறுகதை)

ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.

Read More »

அவர்கள் உங்கள் சகோதரர்கள்! (நீதிக்கதை)

நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.

Read More »