Featured Posts
Home » Tag Archives: நூல்கள் (page 4)

Tag Archives: நூல்கள்

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (10)

கல்விக்கு ஏற்பாடின்மை.மேலே நாம் கூறியது போல முடியரசின் கீழ் இஸ்லாமிய ஒழியைப் பரப்பும் பெரும்பணி தனி மனிதர்களின் பொறுப்பாக மாறிற்று. உலமா, சூபிப் பெருமக்கள், ஏன் வர்த்தகர்களும் கூடக் காட்டிய பேரார்வத்தின் காரணமாகத் தொடர்ந்து இஸ்லாத்தின் பால் பலர் கவரப்பட்டு வந்தனர். ஒரு காலத்தில் பேரருவியாக ஓடிக் கொண்டிருந்த புது முஸ்லிம்களின் பெருக்கம் நாளடைவில் சிற்றோடையாகச் சுருங்கிற்று. ஆனால் அது ஒரு போதும் வற்றி வரண்டு விடவில்லை. அரசர்களின் ஆதரவு …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (8)

இரண்டாவது கட்டம்: முடியாட்சியும் விளைவுகளும்இஸ்லாமிய வரலாற்றில் முதற்கட்டத்தில் இஸ்லாம் விரிந்து பரந்தது. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்தது. அத்துடன் பெருந்தொகையான மக்களும் இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டனர். இஸ்லாத்தின் முதற்கட்டத்தின் பிரதிநிதிகளாக அமைந்தவர்கள், இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து அதனைத் தம் சொல்லிலும் செயலிலும் எடுத்துக் காட்டியவர்களாவர். இம்மனிதப் புனிதர்களின் உயர் பண்பாலும், பண்பட்ட நடத்தையாலும் கவரப்பட்டு …

Read More »

ஓதிப் பார்த்தல்

ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (7)

இஸ்லாத்தின் வெற்றியின் மர்மம் எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் படைகள் அடைந்த பெரும் வெற்றி கண்டு அக்காலத்தில் அவற்றை அவதானித்தவர்கள் வியப்படைந்தனர். ஒரு சிறு படை, சிறந்த ஆயுதம் கொண்ட பெரும் படைகளை எப்படி துவம்சம் செய்ய முடிந்தது என்பது அவர்களுக்கு விளங்க முடியாத புதிராக இருந்தது. அவர்கள் முஸ்லிம் படையின் ஆள் பலத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர். அதனால் தான் அவர்கள் திகைப்படைந்தனர். முஸ்லிம் படைகளின் உடல் பலத்துக்கு …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (6)

இஸ்லாமியப் புரட்சியின் பெறுபேறுகள் இஸ்லாமியப் புரட்சியின் நேரடி விளைவுகளில் ஒன்று, இஸ்லாமிய உணர்வைக் கொண்ட ஒரு சமூகம் தோன்றியதாகும். இச்சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சிந்தனைப் போக்கு, வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் என்பன முற்றிலும் இஸ்லாமிய சன்மார்க்க நெறிக்குள் அமைந்தனவாய்த் திகழ்ந்தன. அதன் கொள்கை ஒரே இறைவனைத் தவிர வேறு எதனையும் வணங்குவதைக் கொண்டு மாசுபடுத்தப் படவில்லை. அச்சமூகத்தின் ஒழுக்கப்பண்பாடும் அதன் உறுப்பினர்களது பண்புகளும் இஸ்லாத்தினால் உருவாக்கப்பட்டு அதனால் தூய்மைப் படுத்தப்பட்டவையாகும். …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (5)

இஸ்லாமிய அரசை வலுப்படுத்துதல்:இறைத்தூதர் அவர்கள் மக்காவில் முதன் முதலாகத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது மக்கள் அதனை கவனிக்கவில்லை. அவர்களது போதனையின் மீது சிலரே கூடிய கவனம் செலுத்தினர். அதைவிட மிகச் சிலர் தான் அண்ணலார் அவர்கள் மனிதனைப் பற்றியும், உலகைப் பற்றியும் அளித்த புதிய கருத்தினை ஏற்கும் மனநிலை உடையோராக இருந்தனர். அவர்களது தூதின் பொருளையும் அதன் விளைவுகளையும் விளங்கிக் கொள்ளத்தக்க நுண்ணறிவுத் திறனை ஒரு சிலரே பெற்றிருந்தனர். …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)

முதல் இஸ்லாமிய அரசு. முதலாவது இஸ்லாமிய அரசு மிகச் சிறிய நகர அரசாக உருவாகியது. சில சதுர மைல் பரப்புடையதாகவும், சில ஆயிரம் மக்களைக் கொண்டதாகவும் அது அமைந்தது. எனினும் இச்சிறு அரசு சில ஆண்டுகளிலேயே முழு அரேபியாவையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்து விட்டது. இவ்வெற்றிக்குக் காரணம், இஸ்லாமிய சன்மார்க்கக் கொள்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததாகும். அதில் இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அதன் உண்மைத் தோற்றத்தில் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (3)

முதற் கட்டம்: இலட்சிய காலம்முதலாவது கட்டத்தில் இஸ்லாம் அதன் எளிமையான தூய உருவில் காட்சியளிக்கிறது. ஓங்கு புகழுடனும் மாசுமருவற்ற பேரொளியுடனும் மிளிர்கிறது. சிற்றின்பத்தில் திளைத்து ஒழுக்க, ஆன்மீக உணர்வுகள் மரத்துப் போன ஒரு சமுதாயத்தில் இஸ்லாம் பிறந்தது. நண்பர்களின் உறவின்றி தன்னந்தனியாக நின்ற வறிய, ஆனால் பிரபஞ்சத்தின் ஆன்மீக அம்சத்தினை நன்குணர்ந்த ஒரு மனிதரை மூன்று அடிப்படை நம்பிக்கைகள் மீது மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இறைவன் நியமித்தான். இறைவனில் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (2)

இனி, ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதற்குக் கொள்ளப்படும் மற்றிரு பொருள்கள் பற்றிக் கூற விரும்புகிறேன். இப்பொருள்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என நான் கருதுகிறேன். முதலாவதாக ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பது பின்வரும் பொருள்களைக் குறிக்கலாம்: இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அழைப்பினை எவ்வாறு ஏற்றுள்ளனர்? எந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் முத்திரை பதிந்துள்ளது? அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் கண்ணியமானதாக்கவும் ஆற்றல் பெற்ற ஒரு சக்தியாகத் திகழ்கின்றதா? …

Read More »