Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 42)

ஜாஃபர் அலி

தற்பெருமையுடன் நடக்காதே.

1351. (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5789 அபூஹுரைரா (ரலி).

Read More »

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி). 1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5788 அபூ ஹுரைரா(ரலி).

Read More »

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

அப்பொழுது அவருக்கு வயது 40! வழக்கம்போல் ஹிரா குகையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வேளை அது! வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ எனப்படும் இறைச்செய்தி முதன் முதலாக இறங்கிற்று. அவருடைய வாழ்வில் 23 வருடங்கள்வரை இறங்கிய இந்த இறைச்செய்தியே திருக்குர்ஆன் எனப்படுகின்றது. வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் பெற்ற இறைச்செய்தியான திருக்குர்ஆனை தன் சமூகத்தாரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கூட்டம் அவருடைய …

Read More »

மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

1348. ”(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். (பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் ‘எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், ‘நபி (ஸல்) அவர்கள், …

Read More »

ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.

1347. ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள். புஹாரி : 5818 அபூபுர்தா (ரலி).

Read More »

பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 5812 அனஸ் (ரலி).

Read More »

தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

1345. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். புஹாரி : 2919 அனஸ் (ரலி).

Read More »

யார் இந்த முஹம்மத் (ஸல்)?

கி.பி. 570….! ஐரோப்பா கண்டம்! கிறிஸ்துவம் முழுமையாக பரவியிராத காலகட்டம் அது! நாம் மேலே சொன்ன இந்த புனித மக்கா மாநகரில் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். தன்னுடைய பிறப்புக்கு முன்னரே தந்தையையும், பிறந்த சிறிது காலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தார்கள். அரபுலகில் கண்ணியத்துக்கு உரியதாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்த அவர், தம்முடைய சிறிய தந்தையாரின் கண்காணிப்பில் வளர்ந்தார்கள். தன்னுடைய வாய்மைக்காகவும், நேர்மைக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் போற்றப்படத்தக்க வகையில் …

Read More »

தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

1338. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் …

Read More »

தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

ஆடை அணிகலன்கள். 1337. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5634 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) .

Read More »