Featured Posts
Home » நூல்கள் » இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? தொடர்

இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? தொடர்

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்குப் பயந்த மார்க்க அறிஞர்கள் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் கண்டித்து வருகிறார்கள். …

Read More »

5. முன்னோர்கள் செய்தது மார்க்கமாகி விடாது

ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்து விடுகிறான். …

Read More »

4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களின் மார்க்க ஞானத்தை எவராலும் குறைவாக எடை போட்டுவிட …

Read More »

3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் …

Read More »

2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது

  இது அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். இதுபோல் கேட்பது புதிதல்ல. ஸஹாபா பெருமக்கள் காலத்திலேயே இவ்வாறு கேட்கப்பட்டு அதற்கான பதிலும் கிடைத்து விட்டது. கீழ்கண்ட ஹதீஸை கவனியுங்கள்: ‘ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிற்றைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து …

Read More »

1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?

இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். …

Read More »