Featured Posts
Home » நூல்கள் (page 168)

நூல்கள்

நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!

152- நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் அவர்களுடைய எல்லா விஷயங்களையும் வலது புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். புகாரி-168: ஆயிஷா (ரலி)

Read More »

மறைவிடங்களைச் சுத்தம் செய்வது பற்றி….

151- உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விடவேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-153: அபூ கதாதா (ரலி)

Read More »

இப்னு உமர் (ரலி)யின் கூற்று!

150- ஹப்ஸா (ரலி)வின் வீட்டுக் கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையை பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தமது (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். புகாரி-149: இப்னு உமர் (ரலி)

Read More »

நீர் உம்முடைய தேவைக்காக…..

149- ‘நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். புகாரி-148: இப்னு உமர் (ரலி)

Read More »

மல ஜலம் கழிக்கும் போது….

148- நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாக ஆக்கியோ பின்பக்கமாக ஆக்கியோ உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன் நோக்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அறிவித்து விட்டுத் தொடர்ந்து நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதை விட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடினோம் …

Read More »

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

146- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை அடர்த்தியாக வளரவிடுங்கள் மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி-5892: இப்னு உமர் (ரலி) 147- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள் தாடியை வளரவிடுங்கள். புகாரி-5893: இப்னு உமர் (ரலி)

Read More »

ஃபித்ரத் (இயற்கை மரபுகள்) பற்றி…

145- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயேகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஜந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும். புகாரி-5889: அபூஹூரைரா (ரலி)

Read More »

தூக்கத்திலிருந்து விழிக்கும் போது……

144- நபி (ஸல்) அவர்கள் இரவு (தூக்கத்திலிருந்து) விழிக்கும் போது தங்கள் வாயைக் குச்சியால் சுத்தம் செய்வார்கள். புகாரி-245: ஹூதைஃபா (ரலி)

Read More »

3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் …

Read More »

எவ்வாறு மிஸ்வாக் செய்வது?

143- நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது. புகாரி-244: அபூ முஸா அஷ்அரி (ரலி)

Read More »