Featured Posts
Home » நூல்கள் (page 18)

நூல்கள்

பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! பெண்கள் பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது பெண் மீது கொண்ட பற்றினாலோ அல்லது பாசத்தினாலோ உருவான நிலை அல்ல. பெண் அரசியல், பொருளாதாரத் துறையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறிய பின்னர்தான், அவளது உரிமைப் போராட்டங்களின் பின் ஆண்வர்க்கம் வேண்டா வெறுப்புடன் சில …

Read More »

இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]

இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள். இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் …

Read More »

இலங்கை முஸ்லிம்கள் பொறுமை செய்யும் நிலையிலா? போராட்டம் செய்யும் நிலையிலா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த கட்டுரை இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் ஒரு நெருக்கடியான நிலையை பற்றி அலசுகின்றது. கட்டுரை ஆசிரியர் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றார் இதனை முஸ்லிம் சமூகத்தின் பாரிய (உயிர், உடமைகள், பொருளதார) இழப்புக்கள் மற்றும் தூர நோக்குபார்வையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (இஸ்லாம்கல்வி மீடியா குழு) வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. …

Read More »

ஜமாஅத்துத் தொழுகை-2 [பிக்ஹுல் இஸ்லாம்-32]

சென்ற தொடரில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே வேளை, தனியாகத் தொழுவதற்கும் நன்மை உண்டு என்பதையும் விபரிக்கின்றது. பர்ழான …

Read More »

மகாமு இப்றாஹீம் [அல்-குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-13]

மக்காவில் இருக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக மகாமு இப்றாஹீமை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மகாமு இப்றாஹீமில் இருந்து நீங்கள் தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு சூரா பகராவில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். “(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப் போருக்காகவும் ருகூஃ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் …

Read More »

யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]

யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது …

Read More »

சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-7]

எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் …

Read More »

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.! எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், …

Read More »

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் …

Read More »

எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் …

Read More »