Featured Posts
Home » நூல்கள் (page 6)

நூல்கள்

பிப்ரவரி 14 – காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் …

Read More »

பாகிலானி(ரஹ்) அவர்களும், அவர்களின் சாதுர்யமும்

முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், …

Read More »

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் | இறைமொழியும் தூதர் வழியும்-03

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ”நபி(ஸல்) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத்தன்மையை நேசிப்பவராகவே …

Read More »

சுலைமான் நபியும்… சாதுர்யமான தீர்ப்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-37]

தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப் பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை …

Read More »

வேடிக்கையும் கேளிக்கையும்

மனித வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விளையாட்டுக்கள், பேச்சுக்கள், நடத்தைகள் அனைத்தையும் இஸ்லாம் தடுத்திருப்பதாக சிலர் நினைக்கின்றனர். பேசாமல், சிரிக்காமல் முகத்தை ‘உம்’ என்று வைத்திருப்பதுதான் உண்மையான தக்வாவின் அடையாளம் என்று சிலர் நினைத்துள்ளனர். இது தவறாகும். சிரித்த முகத்துடன் காட்சியளிப்பதும் பிறரை மகிழ்வூட்டுவதும் மார்க்கம் போதிக்கும் நல்ல பண்புகளில் உள்ளவைதான். “நபி(ச) அவர்களை விட நான் புன்புறுவல் பூக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை” என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்(வ) அவர்கள் …

Read More »

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் …

Read More »

மனிதனின் பலவீனம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-36 [சூறா அந்நிஸா–13]

மனிதனின் பலவீனம் يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا “அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28) அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் என்றால் யார் என்று தெரியுமா? அவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். கிடங்கு என்பது நெருப்புக் கிடங்காகும். அல்குர்ஆனில் சூறா ‘அல்புரூஜ் என்றறொரு (85) அத்தியாயம் உள்ளது. அதில் அல்லாஹுத்தஆலா இந்த வரலாற்றை சுருக்கமாகக் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் அந்த சம்பவத்தை விவரித்துக் கூறுகின்றார்கள். வாருங்கள் அந்த வரலாற்றை வாசிப்போம். முன் ஒரு காலத்தில் கொடுங்கோல் அரசன் (ஒரு ஊரை …

Read More »