Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் (page 49)

உண்மை உதயம் மாத இதழ்

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

Read More »

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-3)

– இஸ்மாயில் ஸலபி மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2)

Also visit இக்கட்டுரை தொடர்பான மற்றொரு பதிவு: பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்தற்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் பதில் – இஸ்மாயில் ஸஃலபி “குர்ஆன்-சுன்னா”வைப் பின்பற்று வதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உத்தமர்களான உலமாக்கள் மத்தியில் கூட மார்க்க விவகாரங்களில், குறிப்பாக “பிக்ஹு”த்துறையில் கருத்து பல்வேறுபட்ட வேறுபாடுகள் நிலவின. இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு சில நியாயமான காரணங்களும் இருந்தன. இவ்வகையில் …

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

– இஸ்மாயில் ஸலபி பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப் போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது. இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.

Read More »

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

– இஸ்மாயில் ஸலபி இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.

Read More »

உறவுகளைப் பேணுவோம்

– இஸ்மாயில் ஸலபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

Read More »

இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

Read More »

இல்லற வாழ்வில் புரியாத பாஷை

கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது. இதைப் புரிந்துகொள்ளப் …

Read More »

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்

-எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை …

Read More »