Featured Posts
Home » நூல்கள் » அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை

ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான்

மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன்

அல் வலா வல் பரா

இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள்; (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அல்குர்ஆன்)

இந்த கண்ணியமான வசனத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா, அவனை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்லி விட்டு நிறுத்தாமல் அவனை வணங்குவதோடு இணைவைப்பை விட்டும், வரம்பு மீறுகின்ற செயல்களை விட்டும் விலகுமாறு கட்டளையிடுகின்றான்; ஏனென்றால், நம்முடைய தவ்ஹீத் முழுமை பெற வேண்டுமென்றால் கண்டிப்பாக இணைவைப்பை விட்டும், இணைவைப்பாளர்களை விட்டும் விலகியிருப்பது அவசியமாகும்.

இது கொள்கை விடயத்தில் ஒரு சுருக்கமான மடல். இதனை நன்முறையில் விளங்கிக் கொண்டு, நடைமுறைப்படுத்தி ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாப்பது கடமையாகும். ஏனென்றால், இவ்விடயம் உங்களை உங்களின் தீனை விட்டும் வெளியேற்றும் வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் அறியாமல் இருக்கும் பொருட்டு, அது என்னவென்றால் அது தான் அன்பு, வெறுப்பு, பாசம், கோபம், குரோதம் ஆகும். அன்பு காட்டப்பட வேண்டியவர்களிடம் அன்பும், வெருப்பு காட்டப்பட வேண்டியவர்களிடம் வெறுப்பும் காட்டுவது. அதாவது ஓரிறை கொள்கையாளரிடம் அன்பும் பாசமும், இறைநிராகரிப்பாளர்களிடம் வெறுப்பும், குரோதமும் காட்ட வேண்டும்.

இது நபி இப்றாஹிம் (அலை) அவர்களுடைய மார்க்கம். நபி இப்றாஹிம் (அலை) அவர்களை ஈமான் கொண்டு அவர்களோடு இருந்த அந்த முஃமின்களின் வழிமுறை.

َدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّـهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّـهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّـهِ مِن شَيْءٍ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

இப்றாஹிமிலும் அவருடன் இருந்தவர்களிலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. அவர்கள் தம் சமூகத்தாரிடம், ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் நீங்கி, உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம்; இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது’ என்று கூறியபோது…(அல்மும்தஹினா:4)

மேலும், இது நம்முடைய முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கமும் வழிமுறையும்.

தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்…

மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

பொருள் அட்டவணை
1. இறைநிராகரிப்பாளர்களுடன் நேசம் கொள்வதும் அவர்களுக்கு உதவுதலும்
2. இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொள்வதும், அவர்களுக்கு உதவுதலும்
3. வலா அல்பராவில் மூன்று வகையினர்
4. பித்அத் ஓர் எச்சரிக்கை
5. பித்அத் என்றால் என்ன?
6. பித்அத்தின் வகைகள்
7. அனைத்து பித்அத்களுக்கும் சட்டம் என்ன?
8. முஸ்லிம்களுடய வாழ்க்கையில் பித்அத் வெளிப்படுதல்
9. பித்அத்கள் தலைதூக்கியதற்கான சில காரணிகள்
10. பித்அத்கள் பரவுவதற்கு அடிப்படையான காரணிகள் சில
11. பித்அத்வாதிகளின் வழிமுறைகள் மீது ‘அஹ்லுசுன்னா வல் ஜமாஅத்’ வுடைய நிலைப்பாடு
12. பித்அத் வாதிக்கு மறுப்பு,பதில் கொடுப்பதில் ‘அஹ்லுசுன்னா வல் ஜமாஅத்’வுடைய வழிமுறைகள்
13. பரக்கத் தேடுவது பற்றிய பாடம்
14. இன்றைய காலத்தில் உருவாக்கப்பட்ட பித்அத்களில் சில
15. பித்அத்வாதிகளிடம் நடந்து கொள்ளும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *