Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் » நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் [e-Book]

நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் [e-Book]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணயத்தள வாசகர்களுக்கு
தஃவா களத்தில் ஈடுபடக்கூடிய மக்கள் தங்களிடத்தில் இருக்க வேண்டிய பண்புகள் பற்றிய வகுப்புகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது எல்லோம் அறிந்ததே. இருந்த போதிலும் தஃவா களத்தில் நிகழ்கூடிய கசப்பான விஷயங்களை கருத்தில் கொண்டு நமது தலைவர் “நபிகளார் (ஸல்) அவர்களின் குணாதியங்கள்” என்ற இந்த மின்னனு நூலை தமிழ்பேசும் மக்கள் பயன்பெறும் பொருட்டு இங்கே வெளியிடப்படுகின்றது.  இத்தகைய சிறந்த நற்பண்புகளை பின்பற்றி ஈருலகில் வெற்றிபெற வல்ல ரஹ்மானிடம் பிரார்தனை செய்வோமாக – இஸ்லாம்கல்வி ஊடக பிரிவு

குதூபுன் மினஸ் ஸமாயிலில் முஹம்மதிய்யா

அரபி மூல நூல் ஆசிரியர்:
முஹம்மது ஷமீல் ஷைனு ரஹிமஹுல்லாஹ்

நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள்

தமிழாக்கம் :
முஹம்மது இக்பால் மதனீ (ரஹ்)
(ஓய்பு பெற்ற அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம், துபாய், சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய காரியங்கள் பற்றிய மந்திரி துறையின் துபாய் அழைப்பாளர்.)

முன்னுரை
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (துவங்குகின்றேன்).
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

அவனை நாம் புகழ்கிறோம் அவனிடமே உதவி தேடுகிறோம் அவனிடத்தே (பாவங்களை) பொருத்தருள வேண்டுகிறோம். நம்முடைய மனங்களின் தீமைகளிலிருந்தும் நம்முடைய செயல்களில் தீயவைகளிலிருந்தும் அல்லாஹ்விடமே பாதுகாக்கத் தேடுகிறோம்.

அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவனை வழிகெடுப்பவர் (எவரும்) இல்லை. இன்னும், அவன் நேர்வழி செலுத்தாதவருக்கு நேர்வழி காட்டுபவரும் இல்லை.

மேலும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் எதுவும் இல்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியார் மற்றும் அவனின் தூதர் எனவும் சாட்சி கூறுகிறேன்.
(அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய நபியின் மீது ஸலவாத் கூறியதற்குப்)
பிறகு,

“ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குணாதிசயங்கள் நபித்துவ நற்குணங்கள் இஸ்லாமிய நல்லொழுக்கங்கள் ஆகியவற்றிலிருந்துள்ள கொத்துக்களை” சங்கை மிகுந்த என் வாசக சகோதரர்களுக்கு முற்படுத்துகிறேன். ஏனெனில் அவர்கள் அவற்றை வாசித்து சங்கை மிகுந்த (குணாதியசங்களின் நாயகராகிய) இத்தலைவரை அவர்கள் அவர்களுடைய பணிவில், அவர்களுடைய சகிப்புத் தன்மையில் அவர்களுடைய வீரத்தில், அவர்களுடைய அள்ளி வழங்கும் தாராளத் தன்மையில், அவர்களுடைய இரட்சகனைப் பற்றிய அவர்களின் ஏகத்துவக் கொள்கை ஆகியவற்றில் பின்பற்றி நடப்பதற்காக. குறிப்பாக நாமிருக்கும் இக்காலகட்டத்தில் ஏகத்துவம்
நற்குணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு மத்தியில் பரப்ப நாம் மிகுந்த தேவையுடையோராவர். அவ்விரண்டின் மூலமே முஸ்லிம்கள் வெற்றி கண்டனர் இஸ்லாமும் பரவியது.

நற்குணங்கள் எஞ்சியிருக்கும் வரையே சமூகங்கள் எஞ்சியிருக்கும் அவர்களுடைய நற்குணங்கள் போய்விடின் அவர்களும் சென்று விட்டனர் என்று கூறிய கவிஞரின் கூற்று எத்துனை அழகானது.

அல்லாஹ்விடமே, முஸ்லிம்களுக்கு இந்நூலைப் பயனுள்ளதாக, அதை தன் சங்கையான முகத்திற்காக தூயதாகவும் ஆக்கித்தர நான் கேட்கிறேன்.

அரபி மூல நூல் ஆசிரியர்:
முஹம்மது ஜமீல் ஜைனூ

மதிப்புரை:
அஷ்ஷைய்க் முஹம்மது ஜமீல் பின் ஜைனு என்ற அறிஞர் எழுதிய குதூபுன் மினஸ் ஸமாயிலில் முஹம்மதிய்யா என்ற அரபி நூலை மரியாதைக்குரிய ஷைய்க் முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் அதைப் படித்து அதனைப் படித்து பயனடைந்தனர். நபிகளாரின் நற்பண்புகளை தமிழ்பேசும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்குடன் மீண்டும் அந்த புத்தகத்தை வெளியிடஅனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு புதிய பொழிவோடு வழங்கியுள்ளார்கள்.

சரியான ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் தொகுக்கப்பட்டுள்ள மூலப் புத்தகத்தை எளிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். தள்ளாத பருவத்திலும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும்

அஷ்ஷைய்க் முஹம்மது இக்பால் மதனீ அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்குவானாக!

இந்த புத்தகத்தின் மூலம் ஆசிரியருக்கும் இது வெளிவர உதவியாக இருந்த அனைவருக்கும் அல்லாஹ் மறுமையில் நல்லருள் புரிவானாக! ஆமீன்!!

எஸ். கமாலுத்தீன் மதனீ
ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆல் வல் ஹதீஸ் (JAQH)

(அஷ்ஷைக் முஹம்மது இக்பால் மதனீ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்து விட்டார்கள், அவரிகளின் மறுமை வாழ்வு சிறப்படைய வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள் – இஸ்லாம்.கல்வி ஊடக பிரிவு)

குறிப்பு:
இது ஓர் இலவச வெளியீடு, இந்த புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

எஸ்.ஏ.ஆர். டிரஸ்ட்
43, டி-ஏ, தர்மலிங்கம் தெரு,
கீரைத் தோட்டம்,
மணப்பாறை – 621 306.

தொடர்ந்து இந்த மின்னனு நூலைவாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் | e-Book பொருளடக்கம்

  1. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடய பிறப்பு / 8
  2. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய பெயர் மற்றும் வம்சாவழி / 9
  3. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களை நீர் பார்ப்பது போன்று / 11
  4. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய சிறப்புகள் / 17
  5. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் நபித்துவ முத்திரை / 21
  6. நபி صلى الله عليه وسلم அவர்களின் (வேர்வைத் துளிகளின்) கஸ்தூரி வாசனை (நிறைந்த நுகர்வதற்கு ஏற்றதாக உள்ள) நறுமணம் / 22
  7. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய தூக்கத்தின் தன்மை / 23
  8. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் ஓதுதல் மற்றும் அவர்களின் தொழுகை / 24
  9. நபி صلى الله عليه وسلم அவர்களுடைய நோன்பு / 27
  10. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் வணக்க வழிபாடு / 29
  11. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய பேச்சின் தன்மை / 31
  12. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய நீர்த்தடாகத்தின் தன்மை பற்றி / 33
  13. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய பற்றற்றவற்றிலிருந்து (சில) (ஆனால் துறவரமல்ல) / 33
  14.  நபித்தோழர்கள் மற்றும் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய பசி / 36
  15. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய வாழ்க்கை / 37
  16. (அல்லாஹ்வின்) தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய அழுகை / 39
  17. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களைக் (கனவில்) காணுதல் / 41
  18. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறப்பு / 44
  19. அல்லாஹ்வின் தூதுர் صلى الله عليه وسلم அவர்களுடைய குணாதிசயங்களிலிருந்து /48
  20. நற்குணங்கள் பற்றிய ஹதீஸ்கள் / 53
  21. நற்குணங்கள் பற்றி (அல்லாஹ்வின்) தூதுர் صلى الله عليه وسلم அவர்களுடைய பிரார்த்தனையிலிருந்து (சில) / 57
  22. சண்டை சச்சரவினிடத்து மன்னித்து விடுதல் / 58
  23. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய பணிவுகளிலிருந்து / 61
  24. பணிவு பற்றிய ஹதீஸ்கள் / 64
  25. பெருமையடித்துக் கொண்டிருந்தோரின் தீய முடிவு / 65
  26. நபி صلى الله عليه وسلم அவர்களுடைய சகிப்புத் தன்மையிலிருந்து (சில) / 69
  27. கோபம் மற்றும் அதற்குரிய மருந்து / 70
  28. (அல்லாஹ்வின்) தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய அற்புதங்களிலிருந்து (சில) / 73
  29. நபி صلى الله عليه وسلم அவர்களுடைய பொறுமை(த் தன்மை)யிலிருந்து (சில) / 77
  30. (அல்லாஹ்வின்) தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய இரக்கத் தன்மையிலிருந்து (சில) / 80
  31. இரக்கத்தன்மை பற்றிய ஹதீஸ்கள் / 83
  32. (அல்லாஹ்வின்) தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய வீரத் தன்மையிலிருந்து (சில) / 85
  33. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் கருணை / 87
  34. மிருகங்களோடு அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய இரக்கம் / 89
  35. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய நீதியிலிருந்து / 91
  36. நபி صلى الله عليه وسلم அவர்களுடைய ஈகைத் தன்மையிலிருந்து சில / 92
  37. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அவர்களிடத்தில் வெட்கத் தன்மை/ 95
  38. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய ஒழுக்கங்களிலிருந்து (சில) / 98
  39.  அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய வழிகாட்டல்களிலிருந்து (சில) / 100
  40. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய நகைச் சுவையாக பேசியவற்றிலிருந்து (சில) / 102
  41. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் எடுத்துக்கூறிய கவிதை / 104
  42. முஸ்லிமான ஆடவரின் ஆடை / 106
  43. ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை (எவ்வாறு இருக்க வேண்டுமென்பது பற்றிய தெளிவு) / 111
  44. தங்கம் மற்றும் மோதிரம் அணிவது பற்றி தெளிவுகள் / 114
  45. ஆடையில் அலங்காரம் / 116
  46. தொழுகை மற்றும் மனிதர்களுக்காக (ஒருவர்-தன்னை) அலங்காரம் செய்தல் பற்றிய பாடம் / 119
  47. சுத்தம் இஸ்லாத்தில் உள்ளதாகும் / 121
  48. இஸ்லாமிய ஒழுக்கங்களிலிருந்து (சில) / 122
  49. கைலாகு செய்தல் முத்தமிடுதல் அல்ல / 126
  50. பெண்களிடம் நான் கைலாகு செய்யமாட்டேன் / 128
  51. தும்மல், மற்றும் கொட்டாவி பற்றிய ஒழுக்கம் / 128
  52. நரையை (சாயம் தேய்த்து) மாற்றுங்கள், மற்றும் கருப்புச்சாயம் தேய்ப்பதைத் தவிருங்கள். / 130
  53. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் வகைக்கு நம்முடைய கடமை / 133
  54. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுடைய நற்குணங்களால் குணசீலராகுதல் / 136

முழு மின்னனு நூலைவாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *