Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது.
சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது:
அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் இலக்கம் – 5687) என்ற ஹதீஸுக்கிட்டே வந்த அவர், *الحبّة السوداء (கருஞ்சீரகம்) என்பதற்குப் பதிலாக الحيّة السوداء (கரும் நாகப் பாம்பு) என்று வாசித்து விட்டார்!. (அதாவது, الحبّة எனும் வார்த்தையில் வருகின்ற ب எழுத்தை ي எழுத்தாக வாசித்து, الحيّة (பாம்பு) என்று தவறாக விளங்கிவிட்டார். الحيّة السوداء என்று வருகின்ற போது ‘கரும் நாகப் பாம்பு’ என அர்த்தமாகி விடுகிறது!)

உடனே அவர், வெளியே சென்று கரும் நாகப் பாம்பு ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து அதைக் கொன்று சாப்பிட்டார்; உடனே, விஷத் தாக்கத்தால் அவர் உயிரிழந்து போனார்!.
எனவே அவர், (ஹதீஸில் வந்த குறிப்பிட்ட) அவ்வார்த்தை குறித்து அறிஞரொருவரிடம் கேட்டு, அதன் அர்த்தத்தை அவர் உறுதிப்படுத்தியிருந்தால் அவர் பாதுகாப்பும் ஈடேற்றமும் பெற்றிருப்பார்!!!

எனவே, அறிஞர்களிடம் சென்று விளக்கம் பெற்று, உறுதிப்படுத்திக்கொள்ளாத ஒருவரின் வெறும் புத்தகப் படிப்பு (சில வேளைகளில்) அவருக்கும், அவரல்லாத பிறருக்கும் பெரும் தீங்காகி விடும். மனிதர்களில் இப்படி அறிவாளிகள் போல் காட்டிக்கொண்டு பெருமை பாராட்டித் திரியும் எத்தனை பேர் அழிந்தே போய்விட்டனர் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!!?.
{ நூல்: ‘துருகு தஅல்லுமில் இல்ம்’, பக்கம்: 10 }

قال العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
قد قيل: « من كان شيخه كتابه كان خطأه أكثر من صوابه »
يذكر أن رجلا طالع صحيح البخاري، وهو أصح كتاب بعد القرآن الكريم! فجاء على حديث: « الحبة السوداء شفاء من كل داء إلا السّام »، فقرأها « الحيّة السوداء » بالياء. فذهب وبحث عن حيّة سوداء ، ثم قتلها وأكلها فمات من أثر السّمّ. فلو سأل عالما عن هذه اللفظة وتأكد منها لسلم!!.
فمجرد المطالعة من دون الرجوع إلى أهل العلم مضرة عظيمة على الإنسان وعلى غيره. فانظر كم أهلك المتعالمون من الناس!!.
{ طرق تعلّم العلم، ص – ١٠ }

✍தமிழில்✍
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *