Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்… [உங்கள் சிந்தனைக்கு… – 057]

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்… [உங்கள் சிந்தனைக்கு… – 057]

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்…..?!

அல்லாஹ் கூறுகிறான்: “(நல்வழியில்) செலவிடுவதற்கு தம்மிடம் வசதி ஏதும் இல்லையே என்ற கவலையால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும் நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். (இத்தகையோர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை!)” (அல்குர்ஆன், 09:92)

இறை வழிபாடாக இருக்கும் நன்மையான செயல் (வசதியின்மை காரணமாக செய்ய முடியாமல்) போனதற்காகத்தான் இவர்கள் அழுதிருக்கிறார்கள்! (இதுவே இப்படியாக இருந்தால்) பாவத்தைச் செய்துவிட்டதற்கான இவர்களின் அழுகை எப்படி இருந்திருக்கும்!!

சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்! மேலே நாம் எடுத்துக் காட்டிய அல்குர்ஆன் வசனத்தில், تدمع (கண்கள் கண்ணீர் சிந்தியது/வடித்தது) என்ற கருத்தைத் தரும் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தவில்லை. மாறாக, تفيض (கண்ணீர் வழிந்தோடியது) என்ற பொருள் தரும் வார்த்தையை அவன் பயன்படுத்துகிறான்.
வெள்ளமாக வழிந்தோடுகின்ற வரைக்கும் கண்ணீர் எல்லைமீறிச் சென்றிருக்கின்றது என்பதே இங்குள்ள விடயமாகும். இவையெல்லாம், நன்மையொன்று தவறிப் போனதற்காக ஏற்பட்ட கவலையினாலாகும்.
# நாம் எதற்காக அழுதுகொண்டிருக்கின்றோம்!!? #
{ Ahmed Mohamed என்பவரின் முகநூலிலிருந்து….)

 قال الله تعالى: { تولّوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون } (سورة التوبة: الآية – )
    يبكون على فوات الطاعة…
    فكيف بكاؤهم على فعل المعصية؟؟!!….
وتأمّل! لم يقل: «تدمع». بل قال: «تفيض»
فالأمر تجاوز الدمع إلى الفيضان! كل ذلك حزنا على فوات طاعة!
« فعلى ماذا نبكي نحن؟! »
{ FACEBOOK – Ahmed Mohamed }

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 13/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *