Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும்…[உங்கள் சிந்தனைக்கு… – 071]

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும்…[உங்கள் சிந்தனைக்கு… – 071]

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும், அவற்றை முதுகுக்குப் பின்னால் எறிந்து விடுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்: “நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள். (ஏனெனில்) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும்!” (அல்குர்ஆன், 49: 02)

அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வசனத்திலிருந்து பெறப்படும் படிப்பினையொன்றை இவ்வாறு விளக்கப்படுத்துகின்றார்கள்:-
“(நபியுடன் உரையாடுகின்றபோது) அவரின் சப்தத்திற்கு மேலால் நபித்தோழர்கள் தமது சப்தங்களை உயர்த்துவது என்பதே அவர்களின் செயல்கள் அழிந்து போவதற்கான காரணியாக இருக்கின்றது! இதுவே இப்படியாக இருந்தால், நபியவர்கள் கொண்டு வந்த மார்க்க சட்டக் கருத்துக்களை விட்டு விட்டு (அவற்றுக்கு முரண்படுகின்ற) மனிதர்களின் கருத்துக்கள், அவர்களின் சிந்தனைகள், அவர்களின் ரசனைகள், அவர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுடைய அறிவுகள் ஆகியவற்றை முற்படுத்தி, அவற்றை உயர்த்தி வைப்பதன் நிலை எப்படியிருக்கும்!? இப்படிச் செய்வோரின் செயல்களும் அழிந்துபோய் விடுவதற்கு இது மிகத் தகுதியானதாக இல்லையா?”
{ நூல்: ‘இஃலாமுல் முவக்கிஈன்’, 01/51}

 قال الله تبارك وتعالى: { يا أيها الذين آمنوا لاترفعوا أصواتكم فوق صوت النّبيّ ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لاتشعرون } (سورة الحجرات، الآية – ٢)
قال العلّامة إبن قيّم الجوزية رحمه الله تعالى:- [ فإذا كان رفع أصواتهم فوق صوته سببا لحبوط عملهم فكيف تقديم آرائهم وعقولهم وأذواقهم وسياساتهم ومعارفهم على ما جاء به ورفعها عليه! أليس هذا أولى أن يكون محبطا لأعمالهم؟! ]
{ إعلام الموقعين، ١/٥١ }

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 22/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *