Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 001]

மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 001]

மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மனோ இச்சையும் இன்னொரு கடவுள்தான்! இணைவைத்தல் என்பது கற்கள், மரங்கள், ஏனைய பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்குவதோடு மாத்திரம் சுருக்கப்பட்டது அல்ல! மாற்றமாக, இங்கே வேறொரு கடவுளும் இருக்கிறது; அதுதான் மனோ இச்சையாகும்.

சிலைகளையோ, மரங்களையோ, கற்களையோ சில வேளைகளில் மனிதன் வணங்காமல் இருப்பான; மண்ணறைகளையும் அவன் வணங்காமல் இருப்பான். என்றாலும் தனது மனோ இச்சையை அவன் பின்பற்றுவான்! இவன்தான் தனது மனோ இச்சை எனும் கடவுளின் அடிமையாவான்.

எனவே, இது விடயத்தில் ஒரு மனிதன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்; அல்குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பாடாக வரக்கூடியதைத் தவிர வேறு எதையும் அவன் பின்பற்றக் கூடாது!”

[நூல்: ஷர்ஹுஸ்ஸுன்னா லில் பbர்பbஹாரீ  1/71]

قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى: ( فالهوى إله آخر … وليس الشرك مقصورا على عبادة الصنم أو الوثن، بل هناك شيئ آخر ؛ وهو الهوى.
فقد لا يعبد الإنسان الأصنام والأشجار والأحجار ، ولا يعبد القبور . لكن يتبع هواه، فهذا عبد لهواه! فعلى الإنسان أن يحذر، ولا يتبع إلا ما وافق الكتاب والسنة )
[ شرح السنة للبربهاري، ١/٧١ ]

அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். அவனது செவிப்புலனிலும் உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தி விட்டான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார் இருக்கின்றான்? நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?” –அல்குர்ஆன் 45:23

மேலும் கூறுகின்றான்: “யார் தனது இரட்சகன் முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்தும் காெண்டாரோ நிச்சயமாக சுவர்க்கம்தான் (அவரது) ஒதுங்குமிடமாகும்” –அல்குர்ஆன் 80:40,41

தமிழில்
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *