Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]

நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]

நூஹ் நபியும்… கப்பலும்…

ஆதம் நபி காலத்தில் மக்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. அந்த மக்களில் மிகச்சிறந்த சிலர் இருந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் மீது பற்றுக் கொண்ட மக்கள் அவர்களின் மண்ணறைகளில் சில அடையாளங்களை வைத்தனர். பிற்பட்ட காலத்தில் வந்த மக்கள் அந்த கப்ருகளில் ஏதோ விசேசம் இருப்பதாக எண்ணி அந்தகல்லறைகளை தரிசித்தனர். அங்கே தங்கியிருந்தனர். பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களின் உருவங்களைக் கற்பனையில் வரைந்தனர். பின்னர் வந்தவர்கள் அவர்களைச் சிலையாக வடித்து வழிபட ஆரம்பித்தனர். சிலை வணக்கம் உலகில் இப்படித்தான் உருவானது. இந்த சிலை வணக்கத்தை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தை செய்தார் நூஹ் நபி. அவர் 950 வருடங்கள் உலகில் வாழ்ந்தார். நீண்ட நெடிய காலம் அவர் பிரச்சாரம் செய்தார். இருந்தாலும் அந்த மக்கள் சிலை வணக்கத்தில் மலைபோல் உறுதியாக இருந்தனர்.

நூஹ் நபி இரவு பகல் பிரச்சாரம் செய்தார். கூட்டத்திலும் சொன்னார். தனித்தனியாகவும் செல்வார். அந்த மக்கள் கேட்கவில்லை. நூஹ் நபி பேச ஆரம்பித்தால் கல்லால் எரிவார்கள். அவரது தலையில் அடிபட்டு முகத்தில் இரத்தம் வடியும். தனது முகத்தில் வடியும் இரத்தத்தைத் தனது கரங்களால் துடைத்துக்
கொண்டே “என் இறைவா! என் சமூகத்தை மன்னித்துவிடு. அவர்கள் தெரியாமல் செய்து விட்டனர்” என சமூகத்திற்காகப் பிரார்த்திப்பார். இவ்வளவு சகிப்புத் தன்மையுடன் அவர் நடந்து கொண்டார். ஆனால் அம்மக்கள் அவருடன் முரட்டுத்தனமாகவே நடந்து கொண்டனர். அவர் பேச ஆரம்பித்தால் அவரது பேச்சைக் கேட்கக்கூடாது என காதில் கையை வைத்துக் கொள்வர். அவர் பேசும் போது அவரை அவமதிக்கும் விதத்தில் ஆடையைத் தூக்கி தலைமேல் போட்டுக் கொண்டனர்.

அவர் எவ்வளவு சொல்லியும் அந்த மக்கள் கேட்கவில்லை. ” நீங்கள் சத்தியத்தை மறுத்தால் அழிக்கப்படுவீர்கள்” என எச்சரிக்கை செய்தார்.
ஆனால் அவர்கள் நம்பாமல் “அழிவைக் கொண்டுவா பார்க்கலாம்” என சவால் விட்டனர். இதன் பின்னர் இவர்களில் ஈமான் கொள்ள எவரும் இல்லை என அல்லாஹ்வின் அறிவிப்புக் கிடைத்தது. பொறுமையின் சிகரமாக இருந்த நூஹ் நபி, அல்லாஹ்விடம் கையேந்தினார். “யா அல்லாஹ். இவர்களை அழித்துவிடு. இவர்கள் திருந்தவும் மாட்டார்கள். திருந்தியவர்களை நிம்மதியாக வாழவிடவும் மாட்டார்கள். இவர்கள் காபிர்களையும் பாவிகளையுமே பெற்றெடுப்பார்கள்” என பிரார்த்தித்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். ஒரு கப்பலைக் கட்டுமாறு உத்தரவிட்டான். நூஹ் நபி கப்பல் கட்டினார். ஊர் மக்கள் எள்ளி நகையாடினர். “இப்போது நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். உங்களை நாம் கிண்டல் செய்யும் நாள் வரும்” என்று அவர் கூறினார்.

அந்தக் காலமும் வந்தது. வானம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பூமியின் நீரூற்றுக்களும் பீறிட்டு வந்தது. நூஹ் நபி, தன்னை ஏற்றுக்ª£கண்டவர்களைக்
கப்பலில் ஏற்றினார். மழை அதிகரித்து வெள்ளம் அதிகரித்தபோது கப்பல் நீரில் மிதக்க ஆரம்பித்தது. அப்போது நூஹ் நபியின் மகன் தரையில் இருந்தான். அவன்
அல்லாஹ் ஈமான் கொள்ளவில்லை. நூஹ் நபி அவனை அழைத்தார். “மகனே… என்னுடன் கப்பலில் ஏறிக்கொள்” என்றார். அவனோ இந்த ஊரில் உள்ள பெரிய
மலையில் ஏறி நான் என்னைக் காத்துக் கொள்வேன்” என்றான்.

நூஹ் நபியின் கண் முன்னால் ஒரு அலை வந்து அவனை அடித்துச் சென்றது. மகன் கண் முன்னால் அழிவதைக் கண்ட நூஹ் நபி, “இறைவா! என் மகனும் என்னைச் சேர்ந்தவன்தானே.. அவனைப் பாதுகாத்து விடு” என்றார். அல்லாஹ் நூஹ் நபியைக் கண்டித்தான், “அவன் உம்மைச் சார்ந்தவன் அல்ல. அவனது செயல்கள் நல்லதல்ல. இதன் பின்னர் இப்படி முட்டாள்தனமாக கேட்கக்கூடாது” என கண்டித்தான்.

இஸ்லாத்தில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பார்க்கப்படாது. சிறந்த செயலை உடையவர்தான் சிறந்தவர். வெள்ளம் பெருகியது. மலைகளும் மூழ்கும் அளவுக்கு மிகப்பெரிய வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. இறுதியில் வெள்ளம் வற்ற ஆரம்பித்ததும் கப்பல் ஜூதி எனும் மலை மீது தங்கியது. அதன்பின் தண்ணீர் வற்றிய பின்னர் மக்கள் வந்து பூமியில் வசித்து பல்கிப் பெருக ஆரம்பித்தனர்.

அண்மையில் தான் மலை மீது இருந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

அல்குர்ஆனில் இந்த சம்பவம் சூறா நூஹ் (71:1&28) எனும் அத்தியாயத்தில் முழுமையாகக் கூறப்படுகின்றது. மேலும் 11:36&48 போன்ற வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

One comment

  1. As salamu alaikum..

    சிறுவர் பகுதியில். நிங்கள் பதிவிடும் கட்டுரையை தொடர்சியாக வாசித்து வருகிறேன். Al hamdulillah.
    கட்டுரையை கால இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாய் பதிவிடுங்கள்(weekly once) அத மாதிரி. பயனுள்ளதாக இருக்கும்.

    Jazkallah khair.. reply பன்னுவீர்கள் என்று எதிர்பாகிறேன்..pudupet, chennai-2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *