Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » சிந்திப்பதற்காக தியாக பெருநாள்

சிந்திப்பதற்காக தியாக பெருநாள்

Benazir Aslam muneefiya – kuwait

ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாள் வந்து விட்டு செல்கிறது!

நாமும் அதை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்! ஆனால் இந்த ஹஜ் பெருநாள் நமக்கு கற்று தரும் படிப்பினை என்ன என்பதை உணராத மக்களாக இருக்கிறோம் .

வெறுமனே ஒரு ஆட்டை வாங்கி குர்பானி கொடுப்பதும்! வெறுமனே புத்தாடைகளை அணிந்து நல்ல உணவுகளை உண்பது மட்டும் பெருநாள் ஆகிவிடுமா?

ஒவ்வொரு வருடமும் இப்ராஹிம் நபியை பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை அந்த அளவு இப்ராஹிம் நபியுடைய தியாகம் இதில் அடங்கி உள்ளது!

இதை இந்த நாளில் உணர வேண்டிய, நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்!

எத்தனை நபர்கள் இந்த நாளின் தியாகத்தை உணர்ந்து கொள்ள நினைக்கிறோம்! எத்தனை பேர் தியாகங்களை செய்ய தயாராக இருக்கிறோம்!

அர்ப்பணிப்புகளை செய்வதற்கு மனம் இல்லாத மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!

அல்லாஹ் அழகாய் சொல்லி காட்டுகிறான் தன் திருமறையில்:

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏ 

“என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!” என்றார்.
(அல்குர்ஆன் : 37:100)

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏ 

ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
(அல்குர்ஆன் : 37:101)

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏ 

(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த பொழுது, அவர் (தன் மகனை நோக்கி) “என் அருமை மைந்தனே! நான் உன்னை (என்னுடைய கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என்னுடைய கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?” என்று கேட்டார். அதற்கவர், “என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதனைச் சகித்துக்கொண்டு) உறுதியாயிருப்வனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 37:102)

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌‏ 

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.
(அல்குர்ஆன் : 37:103)

وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏ 

அச்சமயம் நாம் “இப்ராஹீமே!” என அழைத்து,
(அல்குர்ஆன் : 37:104)

قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 

உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, (அல்குர்ஆன் : 37:105)

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏ 

“நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்). (அல்குர்ஆன் : 37:106)

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏ 

ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
(அல்குர்ஆன் : 37:107)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌‏ 

அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.
(அல்குர்ஆன் : 37:108)

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ 

(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) “இப்ராஹீமுக்கு “ஸலாம்” ஈடேற்றம் உண்டாவதாகுக” (என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் : 37:109)

كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 

இவ்வாறே, நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 37:110)

இதில் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அவரின் தியாக மனப்பான்மை தான் உலக வாழ்க்கையை பெரிதும் நினைக்காமல் தன் இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை முழுவதும் இறைவனுக்காக அர்ப்பணித்தவர் தனது மனைவி தனது குழந்தை என்று எதையும் பெரிதாக நினைக்காமல் தியாகம் செய்தார். அதனால் தான் அல்லாஹ் அவரை பற்றி கூறுகையில் தனது நண்பன் என கூறி காட்டுகிறான்! இந்த சிறப்பு எந்த நபிமார்களுக்கும் கிடைத்தது இல்லை!

அல்லாஹ் அந்த தியாகத்தை தான் விரும்புகிறான்!
அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 

கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.”
(அல்குர்ஆன் : 6:162)

நபியை பார்த்து அல்லாஹ் கூற சொல்கிறான் காரணம் அல்லாஹ் அதை விரும்புகிறான்!

நம்மில் எத்தனை நபர்கள் இறைவனுக்காக நம்முடைய வாழ்வை அர்ப்பணித்திருக்கின்றோம்!

சொல்வதற்கு நம்மிடத்தில் எதுவும் இல்லை! அல்லாஹ் நாடியவர்களை தவிர!

தியாகம், அர்ப்பணிப்பு என்றால் தன் உயிரையும், பொருளாதாரத்தையும் தான் பலர் சிந்திப்பார்கள்!

ஆனால் அது மட்டும் இல்லை அர்ப்பணிப்பு அதையும் தாண்டி, இன்று பெரும்பாலான மக்களுக்கு புரிய வேண்டிய ஒரு விடயம் என்னவெனில் ஹாராமான விடயங்களை அல்லாஹ்விற்காக அதை செய்வதை விட்டும் தவிர்ந்து வாழ்வதும் அர்ப்பணிப்பு தான்!

கேவலம் இந்த உலகில் உள்ள எத்தனையோ அற்ப விடையங்களுக்காக அல்லாஹ்வை மறந்து விட்டு மறுமையை புறம் தள்ளி வாழ்கிறோம்!

ஆனால் யார் என்னையும் உங்களையும் படைத்தானோ!

யார் என் மீதும் உங்கள் மீதும் ஒரு தாயை விட அதிக அளவு நேசம் வைத்துள்ளானோ!

யார் என் மீதும் உங்கள் மீதும் மனிதர்கள் அனைவரையும் விட அதிக அக்கறை வைத்துள்ளானோ!

அவனுக்காக ஒரு ஹராமன விடயத்தை கூட அர்ப்பணிக்க மனம் வருவதில்லை அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் தொலை காட்சி பார்ப்பதில் ஆரம்பித்து, பொய், புறம், தவறான பழக்க வழக்கங்கள், இசை பாடல் என மார்கத்திர்க்கு புறம்பான அத்தனை விடயங்களும் ஹராம் தான்!

ஆனால் அதை நம்மில் எத்தனை நபர்கள் இறைவனுக்காக அல்லாஹ் தடுத்த விடயத்தை அர்ப்பணிக்க தயாராக உள்ளோம்!

எந்த அர்ப்பணிப்புகளும் இல்லாமல் பிறருடைய அர்ப்பணிப்பை தியாகத்தை கொண்டாடுவதற்கு தயாராக உள்ளோம்!

இது தான் நம்மில் பலரின் நிலை!

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!

சிந்திப்பதர்க்காக

Benazir Aslam muneefiya – kuwait

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *