Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக…!

நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக…!

இந்த மனித சமுதாயம் படைக்கப்பட்டு நேர்வழி எது? – வழிகேடு எது? என்று இறைவன் புறத்திலிருந்து பிரித்தறிவிக்கப்பட்ட நாள் முதல், நேர்வழியை பின்பற்றக்கூடிய (ஈமான் கொண்ட) மக்களையும், பல வீனமானவர்களையும் விழுங்குவதற்கு எதிரிகள் இந்த பூமி முழுவதும் செயலாற்றுவதை ஒழிவு மறைவு இன்றி அனைவரும் கண்டுவருகின்றோம்.

ஒன்று ஈமான் கொண்டவர்களை (அல்லாஹுவையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களை) முழுவதுமாக விழுங்குவதற்கான முயற்சி!

மற்றொன்று பொருளாதாரத்திலும், செயலாற்றுவதிலும் அவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் இறைநம்பிக்கையை வீரியமற்றதாகச் செய்து தங்களுக்கு அடிமையாக்கி வைத்துக்கொள்வதற்கான முயற்சி!

முதலாவது விஷயத்தில் இவ்வுலகம் முழுவதும் உள்ள எதிரிகள் தோல்வியுற்றனர். இரண்டாவது காரியத்தில் அவ்வப்போது பரவலாகச் செய்துகொண்டுள்ளார்.

ஈமான் கொண்ட மக்களை இப்பூமியில் இல்லாமல் ஆக்குவதற்குச் சர்வதேச அளவில் யூத கிறிஸ்தவர்கள் செயலாற்றினாலும் இன்னொருபுறம் இந்தியா போன்ற நாடுகளில் பாஜக, சங்கப்பரிவாரங்கள் செயலாற்றுகின்றனர். இந்தியாவில் இம்முறை இரண்டாவது தடவை பாஜக ஆட்சியை அமைத்துக்கொண்ட பிறகு முஸ்லிம்களை முற்றிலும் இந்தியாவை விட்டும் அப்புறப்படுத்துவது, முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களை முற்றிலும் நசுக்கி, பிழிந்து தங்களுக்கு அடிமையாக்கி வைத்துக்கொள்வது! இதற்கான எல்லா காரியங்களையும் பாஜக சங்கப்பரிவாரங்கள் மேற்கொண்டுள்ளன.

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்தக் கொடுமைக்கார பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் முஸ்லிம்களின் ஈமான் (இறைநம்பிக்கை) இன்னும் வலுவடைவதோடு, பாஜகவின் பாசிச மதவாத அரசியலை விரும்பாத ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம்களோடு வலுவாகக் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதைக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷங்களும் போராட்டங்களும் தெளிவுபடுத்துகின்றது.

இந்தியாவை விட்டும் முஸ்லிம்களை வெளியேற்றத் துடிக்கும் தீய சக்திகளே நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: முஸ்லிம்களின் வாழ்வும், அவர்களின் வணக்க வழிபாடும், அவர்களின் மரணமும் அல்லாஹுவுக்கே உரியதாகும்.

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

(நபியே) நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அல்குர்ஆன்:06:162)

அல்லாஹுவுக்கே உரியது என்றால் ஒரு முஸ்லிம் எந்த ஒரு காரியத்தையும் இணை தெய்வங்களுக்காகச் செய்யக்கூடாது அவர்களது முழு வாழ்வும் அல்லாஹுவுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு இருப்பவர்களுக்கு அல்லாஹ் தான் வாக்களித்த சுவனத்தைத் தருகின்றான்.

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ

ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். (அல்குர்ஆன்:05:09)

இறைநம்பிக்கை கொண்டவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களை நாடுகடத்தத் துடிப்பதும் முஸ்லிம்களுக்கு ஒன்றும் புதிய செய்தியல்ல!

قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَـنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ

அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் – அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார். (அல்குர்ஆன்:07:88)

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராக) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்ஆன்:08:30)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான். (அல்குர்ஆன்: 14:13)

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ هِىَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِىْۤ اَخْرَجَتْكَ‌ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ

மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பலம் உடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் – ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை. (அல்குர்ஆன்:47:13) (இன்னும் பார்க்க அல்குர்ஆன்: 17:76, 51:35,36,37)

இறைத்தூதர்களையும் அவர்களோடு ஈமான்கொண்ட மக்களையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இறைநிராகரிப்பாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற்றிய வரலாற்றையும், அவர்களை வெளியேற்றிய பிறகு அல்லாஹுடைய தண்டனை அந்த ஊரை வந்து பிடித்துக்கொண்டு அந்த பூமியில் அவர்கள் மாண்டுபோய் அழிந்துகிடந்தனர்! இங்கு மனித சமுதாயம் வாழ்ந்ததா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர்களை அல்லாஹ் தரைமட்டமாக ஆக்கினான் என்ற வரலாற்றை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

வரலாற்றில் இறை நிராகரிப்பாளர்கள், இறை நம்பிக்கை கொண்டவர்களை உயிரோடு நெருப்புக்குண்டத்தில் வீசியதற்கும், மார்பளவு மணலில் புதைத்துவைத்து ரம்பத்தால் அறுத்து சித்திரவதை செய்ததற்கும், பிறப்பு உறுப்பில் ஈட்டியால் வேதனை செய்து ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றதற்கும், சுடு மணலில் கிடத்தி மிகப்பெரிய பாறைகளை தூக்கிவைத்து சித்திரவதை செய்ததற்கும், அல்லது ஊரை விட்டும், நாட்டை விட்டும் வெளியேற்றியதற்கும் அடிப்படை காரணம் இவர்கள் “அல்லாஹ்வை தங்களுக்கு இறைவனாக ஆக்கிக்கொண்டது”தான் இதுதான் முதல் காரணமாகும்.

இந்தியச் சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்து, நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்த முஸ்லிம் சமுதாயத்தின் குடியுரிமையைப் பறிப்பதற்காகத் திட்டமிட்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது சர்வாதிகார பாஜக அரசு.

இந்நிலையில் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம் இவற்றோடு நின்றுவிடாமல் இந்த கொடுமையான சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும். தூக்கத்தைத் துறந்து கடைசி இரவில் கண்விழித்து தங்கள் இறைவனிடம் முறைப்படவேண்டும்.

முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்படும் சோதனைகளை மனச்சோர்வுக்கும், அவநம்பிக்கைக்கும் அஸ்திவாரமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது! மாறாக தங்களின் ஈமானுக்கு (இறை நம்பிக்கைக்கு) உரமூட்டும் விதத்திலும், தங்களது ஈமானை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தன் ரப்போடு உள்ள உறவை நெருக்கமாக்கிக் கொள்ளும் விதத்திலும் இதுபோன்ற சோதனைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும்.

இன்ஷாஅல்லாஹ்.., தொடரும்.

S.A Sulthan

06/01/2020

Jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *