Featured Posts
Home » வரலாறு » அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) » [01] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

[01] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-01

அறிமுகம்

பாலஸ்தீன புனித மண்ணில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸ்- அல்மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளிவாசல் பரக்கத் செய்யப்பட்ட தேசம், நபிமார்களின் பூமி, என்றெல்லாம் சிறப்பாக அறியப்படுகின்ற ஃபலஸ்தீன் மண்ணில் அமையப் பெற்றுள்ளது.

இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் புனித மக்காவில் இருந்து “புராக்” வாகனத்தின் மூலம் இந்த மண்ணை அடைந்து, அங்கு நபிமார்களுக்கு இமாமத் செய்து, பின் அங்கிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் துணையோடு ஏழாம் வானத்திற்கும் அப்பால் அர்ஷில் இருந்து ஆட்சி செய்கின்ற அல்லாஹ்வை திரைமறைவில் உரையாடி விட்டு சில நிமிடங்களில் மக்கா திரும்பினார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் படிக்கின்றோம்.

இந்த பூமி முஸ்லிம்களின் உத்தியூகபூர்வ முதல் கிப்லாவாக பதின் ஆறு மாதங்கள் செயலில் இருந்து வந்து, பின்னர் மறுமைவரை கஃபாவே தொழுகைக்கான திசை என மாற்றப்பட்டது என்றால் இந்த மண் இஸ்லாமிய மக்களின் வணக்கத்திற்கான முக்கிய தளம் என்பதை மறுக்க முடியாது.

அக்ஸா பள்ளியோடு தொடர்பான மஸ்ஜிதுஸ் ஸக்ரா, மஸ்ஜித் அல்கிபலி, அக்ஸாவின் முழு வளாகமும் “அல்மஸ்ஜித் அல் அக்ஸா” என்றே அழைக்கப்படும்.

?இரண்டாவதாக கட்டப்பட்ட இறை இல்லமாகும்.?

பூமியில் உருவான இரண்டாவது இறை இல்லமே அக்ஸா பள்ளியாகும்.
பின்வரும் ஹதீஸில் அது பற்றிய தெளிவைக் காணலாம்.

، عن أبى ذر الغفارى، رضى الله تعالى عنه، قال: قلت يا رسول الله أى مسجد وضع فى الأرض أولا؟ قال: “المسجد الحرام”، قال: قلت ثم أى؟ قال: “المسجد الأقصى”، قلت: كم كان بينهما؟ قال: “أربعون سنة، ثم أينما أدركتك الصلاة فصله، فإن الفضل فيه”،  (رواه البخارى)

அபூ தர் அல்ஃஙிஃபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதலாவது அடித்தளமிப்பட்ட மஸ்ஜித் எது? எனக் கேட்டேன். மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்ஹராம் எனக் கூறினார்கள். அதன் பின் எது? எனக் கேட்டேன். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” எனக் கூறினார்கள். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கால அளவு எ‌வ்வளவு எனக் கேட்டேன். நாற்பது ஆண்டுகள் எனக் கூறி விட்டு, தொழுகையை நீ எங்கிருந்த போது அடைந்து கொண்டாலும் அங்கு தொழுது கொள் எனக் கூறினார்கள். (புகாரி)

அக்ஸாவை கட்டியது யார்? எப்போது?

இமாம் இப்னு ஹஜரின் பின்வரும் விளக்கம் இதனை தெளிவுபடுத்துகின்றது

புகாரியின் பிரசித்திபெற்ற விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் நபிமார்கள் தொடர்பான அத்தியாயத்தில் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹி) அவர்கள் அக்ஸா பள்ளியைக் கட்டியது பற்றிய விளக்கத்தில்:

“إن أول من أسس المسجد الأقصى آدم عليه السلام، وقيل الملائكة، وقيل سام بن نوح عليه السلام، وقيل يعقوب عليه السلام”، وقال كذلك: “وقد وجدت ما يشهد ويؤيد قول من قال: إن آدم عليه السلام هو الذى أسس كلا المسجدين.
(أورد ابن حجر فى الفتح كتاب أحاديث الأنبياء)

அக்ஸா பள்ளிக்குரிய முதலில் அடித்தளமிட்டவர்
ஆதம் நபியே எனக் கூறிய பின், இரண்டாவது கருத்தாக வானவர்கள் , நூஹ் நபியின் மகன் ஸாம் , பின் யாகூப் (அலை) என உறுதியற்ற சொற்பிரயோக த்தின் மூலம் இமாம் அவர்கள் விளக்கி இருப்பதன் மூலம் ஆதம் நபி கஃபாவிற்கு அடித்தளம் இட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து அக்ஸாவிற்கு முதலில் தளமிட்டவர் என்ற முடிவிற்கு வரலாம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பு- தற்போதைய அமைப்பில் இருக்கின்ற அக்ஸாவை உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக் பின் மர்வான் அவர்கள் ஹிஜ்ரி 73 ம் ஆண்டு கட்டியதாக வாகிதீ, அல்கலபீ, யாகூபி , அத்தபரி, இப்னு ருஷ்த் போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கேள்வி:
சுலைமான் நபிக்கும் பாலஸ்தீன பள்ளிக்கும் இடையில் காணப்படும் இறுக்கமான தொடர்புதான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றதல்லவா.

பதில்: ?
பாலஸ்தீன ஆட்சியாளராகவும் நபியாகவும் இருந்த
தாவூத் நபியின் மகன் சுலைமான் நபி அவர்கள் தனது தந்தை தாஊதின் மரணித்தின் பின்னால் பைத்துல் மக்திஸைத் தலைமையகமாகக் கொண்ட அகண்ட சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக விளங்கினார்கள்.

சுலைமான் நபி (அலை) பற்றிய தகவல்களை அல்பகரா, அந்நம்ல், அல்அன்பியா, ஸபஃ, ஸாத் போன்ற அத்தியாயங்களில் மிகத் தெளிவாக காண முடிகின்றது .

قال الله تعالى: { وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُدَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ } [النمل: 16]

சுலைமான் (ஆட்சியில்) தாஊதுக்கு மறுவாரிசாக வந்தார். மனிதர்களே! பறவைகளின் பாசை நமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்தும் நாம் வழங்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக இதுதான் தெளிவான சிறப்பாகும் எனக் கூறினார். (அந்நம்ல்- 16)


{ قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ } [ص: 35]

எனது இரட்சகனே! எனக்கு நீ எனக்குப் பின்னால் யாருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரத்தை நீ எனக்கு தருவாயாக! நிச்சயமாக நீ மாபெரும் கொடையாளன் (ஸாத்- 35) என அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததற்கு அமைவாக அல்லாஹ் அவருக்கு அனைத்துவிதமான வசதிகளையும் வழங்கினான் என்பதை அந்நம்ல்-16 வது வசனத்தின் மூலம் அறியலாம்.

மனித, ஜின் இனங்கள், பறவைகள், காற்றை வசப்படுத்தி பயணித்தல் என
அனைத்து விதமான வசதி வாய்ப்புகளும் குறைவின்றி, தாராளமாக வழங்கப்பட்ட முஸ்லிம் மன்னராக இருந்ததை குர்ஆன் குறிப்பிடுகின்றது.

யூதக் கனவு

தற்போதைய மஸ்ஜித் அக்ஸா அமைந்திருக்கும் இடத்தின் கீழ்பகுயில் சாலமோன் சுலைமான் (அலை) அவர்கள் அமைத்த கோயில் உள்ளதாகக் கூறி, அது தொடர்பான அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் கற்பனைக் கோயிலுக்காக மஸ்ஜிதை அழிக்கும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம்.

ஆதனால்
அவரது ஆட்சியைத் தாம் மீட்டப் போவதாகவும் அது தமது தோரா மற்றும் தெல்மூதில் பரிந்துரைக்கப்பட்ட மீள் தேசம் எனவும் தற்போதைய சியோனிஸ யூதர் கூட்டம் வாதிட்டாலும் பாலஸ்தீன பூமிக்கும் அவர்களின் ஆட்சி அதிகார முறைக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையாகும்.

ஏனெனில் யூதர்கள் இறைகட்டளைக்கு மாறு செய்த காரணத்திற்காக 2000 வருடங்களுக்கும் மேலாக சொந்த நிலபுலம் இன்றி உலகின் பல்வேறு தேசங்களிலும் உடுத்த உடை இன்றி, உண்ண உணவின்றி, குடியிருக்க கொட்டில்கள் வாழ்ந்த இறை சாதத்திற்கு உள்ளான நரித் தந்திரமும், திருட்டும், பெய்யும் நிறைந்த கேடு கெட்ட ,
சீரழிந்து சின்னாபின்னமான ஒரு கூட்டமாகும்.

கிரிஸ்தவ மதத்தினரால் இஸ்பைனின் இஸ்லாமிய வீழ்ச்சியைத் தொடர்ந்து அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த வந்தேறிகள் உஸ்மானியர் ஆட்சியில் துருக்கியில்
ஒரு ஓரமாக குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் துருக்கிய மொழியில் “தொனமா யூதர்கள்”
يهود الدونمة

மதம்மாறிய யூத வந்தேறிகள்” என அழைக்கப்பட்டனர்

இவர்கள் தமது யூதக் கனவு தொடர்பான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணியில் உஸ்மானிய அதிகாரத்தின் கீழ் இருந்த கிரேக்கத்தின் ஸாலேனிக் நகரில் குடியமர்த்தப்பட்டனர்

இந்தக் கயவர்கள் பத்து வருடத்தில் உஸ்மானிய கிலாஃபத்திற்கே ஆப்பு வைத்தவர்கள் என்பது வரலாறு.

இந்த சத்திராதிகளே தமது வக்கிரபுத்தி, சூழ்ச்சி காரணமாக பாலஸ்தீன மண்ணில் குடியேற துருக்கிய ஆட்சியாளரிடம் அனுமதி பெற்று குடி அமர்த்தப்பட்ட பின்னர் அந்த மண்ணை
ஆக்கிரிமித்த கரையான்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

யாகூப் நபி (அலை) அவர்களின் தந்தையான இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையினர் என வாதிடும் இந்தக் கூட்டம் யாகூப் நபியின் இஸ்ராயீல் என்ற பெயரை தாம் ஆக்கிரிமித்த பாலஸ்தீன பூமிக்கு பெயராக சூட்டி உள்ளனர்.

ஊரா ஊட்டு கோழிக்கு உம்மா பெயரில் கத்தமாம்!!!

பாலஸ்தீன் என்ற பூமியின் பெயர் 1948ற்குப் பின் இன்று இஸ்ரேல் என்றும் அறியப்படுவதை நாம் அறிவோம்.

ஒரு சமூகத்தின் பூமியை ஆக்கிரமித்து , அந்த பூமிக்கு வேறு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் முஸ்லிமாக ஒரு நபியின் பெயரை சூட்டி அந்த மண்ணின் உரிமையாளர்களான பாலஸ்தீன மைந்தர்களை அந்தப் புனித மண்ணில் இருந்து துரத்தியது மட்டுமல்லாது, அவர்களைக்
கொத்துக் கொத்தாக கொன்றொழிக்க அப்போதையத் திருடன் பிரிட்டன் காரணமாக இருந்தது போலவே
அவர்களின் பெரிய தந்தையான அமெரிக்க அரக்கனும் இஸ்லாத்தின் பரம எதிரியான பிரான்ஸும் இன்று காரணமாக இருப்பது ஒன்றும் புதுமை அல்ல.

ஏனெனில் அல்லாஹ்வின் இரு கயிறுகளின் துணை கொண்டு வாழ்வார்கள் என குர்ஆன் கூறுவதில் நபியின் வருகையோடு ஒரு கயிறு அறுந்து விட்டது.

மற்றது பிற நாடுகளின் துணை கொண்டு வாழ்வார்கள் என்று கூறுவதற்கு அமைவாக அது அறுபடும் நேரம் வரும் போது நாட்டை விட்டு ஓடுவார்கள்.

தொடரும் – இன்ஷா அல்லாஹ்

எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி
18/05/2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *