Featured Posts
Home » வரலாறு » அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) » [04] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

[04] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைளும்.

மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி வழியே குத்ஸ் வெற்றிக்கான வழி.

குத்ஸ் தொடர் – 04


மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ் விடுதலை பற்றிய ஆய்வுத் தேடலுக்கு 60 அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த இரு முக்கிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளையும் அய்யூபி அவர்கள் முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் குத்ஸ் வரலாறு படிக்கின்ற ஒரு மாணவர் அறிந்து வைப்பது அவசியாகும்.

அதுதான் 1087/1146 வரை வாழ்ந்து
ஹிஜ்ரி 522-ல் ஈராக்கிய மௌஸில் நகரை ஆட்சி செய்த மாவீரன்
«عماد الدين زنكي أبو المظفر الأتابك »
இமாதுத்தீன் ஸின்கி
அபுல் முளஃப்பர் அல்அதாபிக் மற்றும் அவரது புதல்வரான நூறுத்தீன் மஹ்மூத் சின்கி ஆகியோர் தொடர்பான வரலாறாகும்.

இமாதுத்தீன் ஸின்கி என்பவரே சிலுவைப் போராளிகளிடம் இருந்து குத்ஸை மீட்பதற்கான தூரநோக்கான வரை படைத்தை வரைந்த முன்னோடி மன்னராக பார்க்கப்படுகின்றார்.

சிலுவைப் போராளிகளைத் தோற்கடித்து யூப்பிரடீஸ் நதிக்கரை நகரங்களில் ஒன்றாகவும் கிழக்குப் பிராந்தியத்தில் சிலுவைப் போராளிகளின் பிரதான நகராகவும் விளங்கிய “அர்ரஹா” என்ற நகரை அவர்களிடம் இருந்து ஹிஜ்ரி 539 -ல் மீண்டும் கைப்பற்றினார்.

அவர் ஹி: 542- ல் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளை அவரது பணியாளர் மூலம் உறக்கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு இறையடி சேர்ந்தார்.

அவரது மரணத்தை தொடர்ந்து “அஷ்ஷஹீத்” என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படட்ட பட்டத்து இளவரசான நீதி வளுவா மன்னர் என்ற பெயரைக் கொண்ட அவரது மகன் நூறுத்தீன் மஹ்மூத்((ஹி 511-569)) ((கி.பி.1118- 1174)
الملكُ العادلُ أبو القاسمِ نور الدين محمود بن عمادِ الدِّين زَنْكِي (511 – 569 هـ / 11 فبراير 1118 – 15 مايو 1174)  .
என்பவர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சிலுவைக்காரர்கள் ஆக்கிரிமித்த பல நகரங்களை மீட்டெடுத்து, குத்ஸ் விடுதலை என்ற தனது தந்தையின் உயரிய கனவை சாத்தியமாக்குவதற்குள் மரணமானார்.

அவர் தனது மாணவன் ஸலாஹுத்தீனுக்கு “குத்ஸ்” வெற்றிக்கு பாதை வெட்டி, களம் அமைத்துக் கொடுத்தவர்; என்றாலும் அவரது தந்தையின் நீண்ட காலத் திட்டமே ஸலாஹுத்தீன் அய்யூபியின் “குத்ஸ்” வெற்றியின் பிரதான லௌகீகக் காரணிகளில் ஒன்றாகவும்
காணப்படுகின்றது என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

தந்தை மகன் ஆகியோரின் “குத்ஸ்” வெற்றிக் கனியைப் கொய்தவர்தான் மஹ்மூத் ஸின்டியின் மாணவராகிய சுன்னா முஸ்லிம் உலகம் இன்றும் போற்றும் மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

رحمهم الله جميعا
அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக!

கீழ் தரப்பட்டுள்ள இணைப்பில் அரிய பல தகவல்களை அறியலாம்.?

https://m.marefa.org/%D8%B9%D9%85%D8%A7%D8%AF_%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86_%D8%B2%D9%86%D9%83%D9%8A

https://ar.m.wikipedia.org/wiki/%D8%B9%D9%85%D8%A7%D8%AF_%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86_%D8%B2%D9%86%D9%83%D9%8A

532 هـ / 1138م
تكريت،  الدولة العباسيةالوفاة27 صفر 589 هـ
(4 مارس 1193م) (55–56 عامًا

ஸலாஹுத்தீன் ( பி. ஹி: 532- கி.பி 1137, மரணம்: ஹி: 589, கி.பி. 1193 ) அவர்கள் எதிர்நோக்கித் முறியடித்த பிரதானமான தடைகள்

(1) யூதப்பரம்பரையில் எகிப்தில் ஃபாத்திமிய்யா என்ற பெயரில் தோற்றம் பெற்ற ஷீஆ ஆட்சியை தோற்கடித்து சுன்னா ஆட்சியை நிறுவியமை.

தற்போதைய எகிப்தும் அதன் ஆட்சியாளர்களும் பாலஸ்தீன வெற்றி தோல்வியின் ரகசியமாக விளங்குவதை போன்றே, அன்றைய எகிப்தை ஆட்சி செய்த ஷீஆ ஆட்சியாளர்கள் குத்ஸ் வெற்றியின் தடைக் கண்களாகக் காணப்பட்டனர்.

ஷாம் தேச முஸ்லிம் பிரதேசங்கள் சிலுவைப் போராளிகளிடம்
பறி போவதற்கு உள் எதிரிகளான நயவஞ்சக ஷீஆப் பிரிவினர் பிரதானமாக செயல்பட்டதன் விளைவாக முதல் முதலாவதாக அவர்களின் சதியை முறியடித்து அவர்களின் நயவஞ்சக ஆட்சிக்கு முடிவு கட்ட முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டார் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்கள்.

பாதினிய்யா ஷீஆக்கள் பற்றி அறிய:?
http://www.islamkalvi.com/?p=122064

(2)முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட மார்க்க பிளவுகளுக்கும், குழுக்களுக்கும் தீர்வை எட்டியமை

இன்று முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் பல்வேறுபட்ட பிரிவினைகளே குத்ஸ் விடுதலையின் தோல்வியின் தாமதமும், ரகசியமுமாகும்.

அதற்கு ஸலாஹுத்தீன் அய்யூபி கால முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

ஆகவே குத்ஸ் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தை அவர் சமரச வழியிலும் சில போது வாள்முனையிலும் உறுதி செய்தார்.

எதிரிகளால் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களுக்கு எதிராக பல தடவைகள் சதித் திட்டம் தீட்டப்பட்டும் அவர் எதிரிகளின் கொலை முயற்சியில் இருந்து தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பினார் .

(3)குத்ஸ் வெற்றிக்கான நகர்வை முன்னெடுத்தல்.

அதாவது ஷாம் தேச சிறு குழுக்களையும் நகரங்களையும் தனது ஆழுகையின் கீழ் கொண்டு வந்து -ஆலிம்- அறிஞர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் எனப் பலரோடு கலந்தாலோசனை செய்த பின்னர், சிலுவைப் போராளிகளிடம் இருந்து
பாலஸ்தீன குத்ஸ் மண்ணை மீட்க தனது படைகளைத் குத்ஸ் நோக்கி நகர்த்தினார் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்கள்.

குத்ஸ் நோக்கிச் செல்லும் வழியில் சிலுவைப் போராளிகளின் கோட்டைகளாகக் காணப்பட்ட முக்கிய நகரங்களான உக்கா, யாஃபா, பைரூத் , (லெப்னான்), தபரிய்யா, ஸைதா, அஸ்கலான், லாதிகிய்யா போன்ற பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு அவற்றின் ஊடாக எதிரப்படை நகர்வுகளை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

பின்னர் ஹிஜ்ரி : 583-ல் கி.பி.1187 ல் நடைபெற்ற ஹத்தீன் நகர மாபெரும் போர் வெற்றியைத் தொடர்ந்து “குத்ஸ்” நகரின் வெற்றியும் உறுதியானது.

குத்ஸின் இறுதி வெற்றியைத் தீர்மானிப்பதில் “ஹத்தீன்” நகரப் போர் பிரதான பங்காற்றியது.

அதனால்தான் அதனை குத்ஸின் வெற்றியாக அர்த்தப்படுத்துவர் இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்தப் போரில் பிரபல கிரிஸ்தவ மன்னர்கள், படைத்தளபதிகள் எனப் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களின் சிலுவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அறுபதாயிரம் சிலுவைப் போராளிகள் வரை கலந்து கொண்ட இந்தப் போர் முஸ்லிம்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய போர்களில் ஒரு போராகும் .

முஸ்லிம் படைகளை கிரிஸ்தவ படைகள் பலமாக எதிர் கொண்டாலும் இறுதியில் அவர்கள் வரலாற்றில் மிகக் கேவலமான தோல்வியைத் தழுவினர்.

“குத்ஸ்” வெற்றி உறுதியான போது

சிலுவைப் போராளிகள் மானசீகமாக தமது தோல்வியை உணர்ந்த போது
“குத்ஸ்” நகர கிரிஸ்தவ மதகுருவான “பால்யான்” என்பவர் போரை இனியும் எதிர்கொள்ளாது, தம்மோடு வாழ்கின்ற 4000 பேரின் உயிருக்கும் உத்தரவாதம் தரும் பட்சத்தில் சமாதானமான முறையில் “குத்ஸ்” நகரை ஒப்படைக்க விருப்புவதாகவும் அய்யூபி இணக்கம் தெரிவிக்காத சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரையும் தாம் கொலை செய்து விட்டு, குத்ஸ் நகரை தீக்கரையாக்கிவிட்டு மரணமாகப் போவதாகவும் அய்யூபியிடம் கூறியதும் அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதை விரும்பாத அப்அய்யூபி அவர்கள் சமாதான உடன்பாட்டிற்கு முழு விருப்பம் தெரிவித்ததை அடுத்து உடனே போர் நிறுத்தப்பட்டு, சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 87- முதல் 91 ஆண்டுகள் வரை சிலுவைப் போராளிகளிடம் இருந்த “குத்ஸ்” நகரை ஒரு வெள்ளிக் கிழமை கைப்பற்றினார் அய்யூபி அவர்கள் .

இருந்தும் அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்த குற்றத்திற்காகவும் இறைத் தூதர் முஹம்மது நபியை வஞ்சித்த குற்றத்திற்காகவும் அர்னோ(னா)ல்ட் என்ற கிரிஸ்தவ மன்னனை கொலை செய்ய முடிவு செய்தார் தளபதி ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹி அவர்கள்.

ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வகையிலான வரலாற்றோடு “குத்ஸ்” வெற்றி பற்றி தெளிவாக அறிய பின்வரும் இணைப்பை வாசிக்கவும் .

https://www-aljazeera-net.cdn.ampproject.org/v/s/www.aljazeera.net/amp/blogs/2018/12/6/%D8%B5%D9%84%D8%A7%D8%AD-%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86-%D8%A7%D9%84%D8%A3%D9%8A%D9%88%D8%A8%D9%8A-%D9%88%D9%85%D8%B9%D8%B1%D9%83%D8%A9-%D8%AD%D8%B7%D9%8A%D9%86?amp_js_v=a6&amp_gsa=1&usqp=

https://m.marefa.org/%D9%85%D8%B9%D8%B1%D9%83%D8%A9_%D8%AD%D8%B7%D9%8A%D9%86

ஸலாஹுத்தீன் (ரஹி) வின் பொறுப்புணர்ச்சி
القائد صلاح الدّين يقول: “كيف يطيب لي الفرح والطعام ولذة المنام وبيت المقدس بأيدي الصليبيين؟!!
பைத்துல் மக்திஸ் சிலுவைப் போராளிகள் கைவசம் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? உணவு எப்படி எனக்கு ருசிக்கும்? -செமிபாடு அடையும்- எப்படித்தான் எனக்கு உறக்கம் வரும்? எனக் கூறி “குத்ஸ்” பற்றிய தனது தொடர் கவலையை வெளிப்படுத்தி புனித “குத்ஸ்” நகரை மீட்டெடுத்த மன்னர் ஸல்ஹுத்தீன் வாழ்வில் காணப்படும் பல நூறு படிப்பினைகளை அவதானிக்கின்ற போது தளபதி ஸலாஹுத்தீன் (ரஹி ) அவர்களின் முன்னெடுப்பை ஒத்ததான முன்னெடுப்புடும் படை நகர்வுகளுமே குத்ஸை மீட்கும் அளவுகோல்களாகும்
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஷீஆக் மதத்தவரோடு சமரசமும், உலகு வணங்கிகளான யூதர்களோடு சகவாசமும் வைத்த நிலையில் “குத்ஸ்” நகர மீட்பை பற்றிய பேச்சுக்கள் எட்டாக் கனியாகும். அவை குத்ஸ் வெற்றியைத் தள்ளிப்போடும் அறிகுறிகளாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்!!!

https://bit.ly/3hKAoqC

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
28/05/2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *