Featured Posts
Home » வரலாறு » அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) » மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்

மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்

1) பறகத் பொருந்திய பூமி?

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏

ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.

(அல்குர்ஆன் : 21:81)

الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ

( (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 17:1)

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَ سِيْرُوْا فِيْهَا لَيَالِىَ وَاَيَّامًا اٰمِنِيْنَ‏

அவர்களுடைய ஊருக்கும் நாம் அருள்புரிந்த (ஸிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவைகளில் பாதைகளையும் அமைத்து “இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறியிருந்தோம்).
(அல்குர்ஆன் : 34:18)

وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَکُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَـكُمْ خَطٰيٰكُمْ‌ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ‏

அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். “ஹித்ததுன்” (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்” எனக் கூறியிருந்தோம்.

(அல்குர்ஆன் : 2:58)

وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏

அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம்.
(அல்குர்ஆன் : 21:71)

وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ‏

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.

(அல்குர்ஆன் : 23:50)

மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கிப் பிரயாணம் செல்வதையும், அங்கே சென்று தொழுவதையும் பாக்கியம் நிறைந்த காரியமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான், மேலும் பிரயோஜனம் தரும் மரங்களைக் கொண்டும், ஆறுகளைக் கொண்டும், பல வகையான பழங்களை வழங்கியும் அதனை சூழவுள்ள பகுதியை அல்லாஹ் செழிப்பாக்கியுள்ளான்.

2) தூய்மையான பூமி ?

يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ

  1. “என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!” (என்றும் மூஸா கூறினார்)

திருக்குர்ஆன் 5:21

அல்லாஹ்வால் இப்பூமிக்கு அனுப்பப்பட்ட பல இறைத்தூதர்கள் வாழ்ந்த பூமி அது, உலகிலே இரண்டாவதாக அல்லாஹ்வை வணங்கக் கட்டப்பட்ட இறையில்லம் அமைந்த பூமி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று அனைத்து நபிமார்களுக்கும் தொழுகை நடாத்திய பூமி அது .

3) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் விண்வெளிப் பயணத்துக்காக பிரயாணம் செய்த பூமி.?

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:1)

ஒரே இரவில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு நபி (ஸல்) அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து சென்றார்கள் . அங்கிருந்து நபி (ஸல்) அவர்கள் புராக் எனும் வகானத்தில் விண்வெளிப் பிரயாணத்தை மேற்கொண்டார்கள்.

4) முஸ்லிம்களின் முதல் கிப்லா
அமைந்த பூமி ?

وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏

(நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 2:143)

நபிகளாரின் விண்வெளிப் பயணத்தில்
ஐவேலைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 16/17 மாதங்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முன்னோக்கியே தொழுதார்கள். பின்னர் தான் நபிகளாரின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் கஃபா கிப்லாவாக மாற்றப்பட்டது.

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை
2021/05/16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *