Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » போலி ஹதீஸ்கள் » சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-02?

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-02?

1) இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்:

بكى رسول الله يوماً فقالوا : ما يبكيك يا رسول الله ؟ قال : اشتقت لأحبابي قالوا : أولسنا أحبابك يا رسول الله قال : لا انتم اصحابي اما احبابي فقوم ياتون من بعدي يؤمنون بي ولم يروني

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள்.

யாரஸுலல்லாஹ் எதற்காக அழுகின்றீர்கள் ? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள்.

அதற்கு என்னுடைய நேசர்களை எண்ணி அழுகிறேன் என்று நபியவர்கள் கூறினார்கள்.
நபித் தோழர்கள் கேட்டார்கள் நாங்கள் உங்கள் நேசர்கள் இல்லையா ரஸுலுல்லாஹ் ?

நபிகளார் கூறினார்கள் இல்லை, நீங்கள் என்னுடைய தோழர்கள்
உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும் அவர்கள் என்னைப் பார்த்திருக்க
மாட்டார்கள் ,(ஆனால் ) என்னைக் கொண்டு ஈமான் கொள்வார்கள்.

(تاريخ دمشق – ٣٠/١٣٧ )
( .تهذيب الكمال – ٢٣/١٣٧ ) .
(مسند الفردوس – ٤/١٤٨ ) .

பல கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த செய்தியை ஹதீஸ்கலை வல்லுந‌ர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என விமர்சனம் செய்துள்ளார்கள்.

மேலதிக தகவலுக்கு :
https://www.shbaboma.com/vb/showthread.php?t=335

2) ஸஹீஹ் ஆன ஹதீஸ்:

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ، فَقَالَ : ” السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا “. قَالُوا : أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : ” أَنْتُمْ أَصْحَابِي، وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ “. فَقَالُوا : كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ ؟ فَقَالَ : ” أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ، أَلَا يَعْرِفُ خَيْلَهُ ؟ ” قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ : ” فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ، مِنَ الْوُضُوءِ، وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ، أَلَا لَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ، أُنَادِيهِمْ : أَلَا هَلُمَّ ؟ فَيُقَالُ : إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ، فَأَقُولُ : سُحْقًا سُحْقًا “.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று

(அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு,

நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் என் தோழர்கள்தாம்.

(நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள் என்று கூறினார்கள்.

மக்கள், உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ளமாட்டாரா, கூறுங்கள் என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர்.

(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.

அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் வாருங்கள் என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படும்.

அப்போது நான் (இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;அப்புறப்படுத்துவானாக! என்று கூறுவேன்.-
(ஸஹீஹ் முஸ்லிம் : 249)

♦️இரண்டு ஹதீஸ்களுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசங்கள்.

1: ஸஹீஹான ஹதீஸில் அவர்கள் எனது நேசர்கள் என்ற வாசகம் இடம்பெற வில்லை மாறாக அவர்கள் எனது சகோதரர்கள் என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.

2: நபிகளார் அழுத சந்தர்ப்பங்கள் பல உண்டு ஆனால் இச்செய்தியைச் சொன்ன சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள் என்ற தகவல் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

?விளக்கம்:

நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்தார் ஒவ்வொருவரையும் நாளை மறுமையில் தெளிவாக அடையாளம் கண்டு அவர்களுக்கு சூரியன் தலைக்கு மிக அருகாமையில் உள்ள அந்நாளில் நபிகளாருக்கே உரிய அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து அந்த சகோதரர்களுக்கு நீர் புகட்டுவார்கள்.

? இந்தப்பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.?

1: அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காது, மார்கத்தில் புதுமைகளை உருவாக்காது, அல்லாஹ் றஸுலுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்கள்.

2: அங்கத் தூய்மையை (வுளூவை) நிறைவாக செய்தவர் பிரகாசமுடையவராக மறுமையில் இருப்பார். இச்சிறப்பு வேறெந்த சமூகத்தாருக்கும் கிடைக்காது.

3: அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாதவற்றைப் புதிது புதிதாக (பித்ஆக்களை ) உருவாக்கியவர்களுக்கு அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீர் பருகும் இப்பாக்கியம் கிடைக்காது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இத்தகையோரை விரட்டும் படி வானவர்களிடம் கூறுவார்கள்.
(முஸ்லிம்:416, 417, 417…)

அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக..!

✍️நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை
2021/06/06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *