Featured Posts
Home » பொதுவானவை » இ.பி.கோவும் இந்து மதமும்!

இ.பி.கோவும் இந்து மதமும்!

நம்நாட்டு தண்டனைச் சட்டப்படி ஒருவரை, ‘பறையன் ‘ என்று இழிவாகக் குறிப்பிட்டது நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்! அதைவிட மோசமான ‘சூத்திரன்’ என்று சொன்னால் அதற்கு இந்திய தண்டனைச் சட்டப்படி எவ்வித தண்டனையும் இல்லை! (அவ்வாறு சொல்வதற்கு சிலருக்கு வேதரீதியில் அனுமதியும் உண்டு! ) இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனைக்குரியதாக நேரடியாகச் சொல்லப்படா விட்டாலும் தொடர்புடைய விசயங்களையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி.

உதாரணமாக, “பூணூலை அறுத்தெரிந்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுமா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” நேரடியாக அதனைத் தடுப்பதற்குச் சட்டப்படி வழியில்லை. மற்றவரின் தனிமனித நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுவதற்கும் அரசியல் சாசனம் அனுமதித்துள்ள மத உரிமைகளில் தலையிடுவதற்கும் தடையுள்ளதால், பூணுல் அணிவதை சம்பந்தப்பட்டவரின் விருப்பத்திற்கு மாறாக அறுப்பதும் தண்டிக்கப்படக்கூடிய குற்ற வகையைச் சாரும் ” என்றுதானே சொல்வீர்கள்! இப்படிச் சொன்னால் நீங்கள் தடுமாற்றம் அடைந்துள்ளீர்கள் அல்லது பொய்சொல்கிறீர்கள் என்று அர்த்தமாம்!

சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களிடம் ஒரு மனநோயாளி சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அவரால் இதுவரை இஸ்லாத்திற்கு எதிராக அவதூறாக வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் அவ்வப்போது முஸ்லிம் வலைப்பதிவர்கள் தகுந்த பதில் கொடுத்துள்ளார்கள். பதில் பெற்று தெளிவடைவது அல்லது தவறான கண்ணோட்டத்தை திருத்திக் கொள்வதல்ல இவர்(களி)ன் நோக்கம்.

இஸ்லாம் சம்பந்தமான பொது விவாதங்களின்போது வேலைப்பளு, கொலைமிரட்டல் என்று வசதிக்கேற்றாற் போல் காரணம் சொல்லிப் பதுங்குவதும், மக்கள் மறந்திருப்பார்கள் என்ற‌ மூடநம்பிக்கையோடு மீண்டும் வரும்போது முகமூடி கிழிக்கப்பட்டால் உடனே சாமியாடுவதும் அல்லது அவ்வாறு பதில் கொடுப்பவர்களைத் திட்டித் தீர்த்துத் திசைதிருப்பும் சங் குயுக்தி தமிழ் வலைப்பூவில் பலராலும் நன்கு அறியப்பட்டதே!

இப்படியாக உள்வாங்கி பின்னர் சாமியாடும் மனநோயாளி & கோவினர் அப்படி என்னதான் முஸ்லிம்களால் பதில் சொல்ல முடியாதவற்றைப் புதிதாகக் கேட்டு விட்டார்கள் என்று ஆராய்ந்தால், எல்லாமே Old soup in new bowl என்பது மாதிரியான ‘புதிய மொந்தையில் வடிக்கட்ட பழைய கள்ளு’. செத்த பாம்பாகிப்போன மநு புத்தகம் போன்ற‌, தலைக்கு வைத்துப் படுக்கக் கூட லாயக்கில்லாத ஆரிய வேதங்கள் வழக்கிழந்து குப்பையாகிப்போனது போல், திருக்குர்ஆனும் ஹதீசுகளும் தெளிவின்றி இருப்பதாக ஒரு மாயபிம்பத்தை ஏற்படுத்த, தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

இஸ்லாம் சரியில்லை என்று சாமியாடுபவரிடம், ” இருக்கட்டும்! அதற்கு மாற்றாக இந்து மதத்தைச் சொல்கிறீர்களா? என்று கேட்டால், அவரே வெட்கப்படும்படியான ‘சங்க’டம்+’சங்க’திகள் நிறைந்தவைதான் இவர் முன்நிறுத்தத் தயங்கும் இந்து மதம். திருக்குர்ஆனின் சட்டங்கள் தெளிவில்லை எனும் இவரிடம் இந்து மதத்தின் ஒரே சட்டமாகிய மநுவின் சட்டங்களை எடுத்துச் சொன்னால் அவையெல்லாம் செத்தபாம்புக்கு ஒப்பானவை என்று நழுவும் வஞ்சக நரித்தனம்!

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களைப்பற்றி குறை சொல்லும் இவர், அதைவிடச் சிறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தின் சட்டத்தைத்தானே ஒப்பீடு செய்ய வேண்டும்! ஆனால் இ.பி.கோ, சி.ஆர்.பி.சி எனச்சொல்லி தன்னை மேதாவியாகக் காட்டிக் கொள்ள முயன்றுள்ள கயமைத்தனத்தை யாரிடம் சொல்லிச் சிரிப்பது என்று தெரியவில்லை.

முஹம்மது நபியைப் பற்றி அவதூறு செய்யும் இ

4 comments

  1. //”லாட்சில் ரூம் போட்டுத் தங்கித்தான் சிரிக்க வேண்டும்!”//

    நல்லடியாரே! லாட்ஜில் ரூம் போட்டு கமுக்கமாக எங்கே சிரிப்பது. அவருடைய அறிவைப்பற்றி தான் சந்தி சிரிக்கிறதே!

  2. அட்றா சக்கை

    நல்லடியார்,

    //கூகிலில் தன் பெயர் முன்னிருப்பதாகச் சொல்லித் தனக்குத்தானே புல்லரித்துக் கொள்வதையும் //

    பொது இடத்தில் மலம் கழிக்கும் மன நோயாளிகள் வேறு என்ன சொல்வார்கள்?

    சகோதரர் இப்னு பஷீர் வைத்த பழைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் எங்கே?

    போங்கய்யா இதையே கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு!

  3. முஸ்லிம்

    அப்போ பொது இடத்திலே சிரிக்க முடியாதா? :)

  4. நண்பன்

    //கூகிலில் தன் பெயர் முன்னிருப்பதாகச் சொல்லித் தனக்குத்தானே புல்லரித்துக் கொள்வதையும் //

    இதைப் படித்ததும் தோன்றியது – எதைப் பற்றிப் பேசினால், தன்னை முன்நிறுத்திக் கொள்ள முடியும் என்ற அனுமானத்தில், ஒரு கணக்கின் படியில், எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

    பாவம், இந்த மனநிலை – பலரிடம் இருக்கிறது. தன்னைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்ற ஆவலே, எத்தகைய செயலையும் செய்யத் தூண்டுகிறது.

    இவர்களுக்குத் தேவை – எந்த விளக்கமும் இல்லை. சும்மாவானும் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் – அத்தனை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *