Featured Posts
Home » பொதுவானவை » தருமி வாங்கிய Nokia போன்

தருமி வாங்கிய Nokia போன்

நண்பர் தருமி அவர்கள் ஏற்கனவே உபயோகித்த மொபைல் போன் சரியில்லை என்று புதிதாகச் சந்தைக்கு வந்த மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறார்.(Nokia N95 என்று வைத்துக் கொள்வோம்)நோக்கியா தயாரிப்புகளைப் பற்றிய மதிப்பீடு பலராலும் சிறப்பாகவே சொல்லப்பட்டிருப்பதாலும் பலரிடமும் விசாரித்த வகையில் மற்ற போன்களை விட ஓரளவு பரிச்சயமான மற்றும் நம்பகத்தன்மை பெற்ற (கூடுதலாக நம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் ஆதரவு பெற்ற:-) Nokia தயாரிப்பே சிறந்தது என்ற முடிவுடன் ஷோரூமுக்குச் செல்கிறார்.

கடைக்காரரும் அதன் செயல்பாடுகள் மற்றும் சிறப்புகளை விளக்குகிறார். வாரண்டி பற்றி விசாரித்த வகையில், தொழில்நுட்பக் கோளாருகளுக்கு மூன்று வருட வாரண்டியும், உதிரி பாகங்களுக்கு ஒரு வருட வாரண்டியும் உண்டென்கிறார்.

விற்பனை பிரதிநிதியின் விளக்கங்களில் திருப்தியடைந்த தருமி மனமுவந்து பணம் செலுத்திவிட்டு ஒரு Nokia N95 மாடல் மொபைல் போனை வாங்கிச் செல்கிறார். வீட்டுக்குச் சென்று மொபைல் போனுடன் கொடுக்கப்பட்ட கேட்டலாக் மற்றும் வாரண்டி ஒப்பந்தந்தைக் கவனமாகப் படிக்கிறார்.

இணையதளங்களில் Nokia N95 போனைப்பற்றி ஓரளவு அறிந்திருப்பதால் பெரும்பாலான சிறப்பம்சங்களிலும் பயன்பாட்டிலும் சிரமம் இருக்காது என்பதை மனதில் நிறுத்தி வாரண்டி ஒப்பந்தத்தை மட்டும் மிகக் கவனமாகப் படிக்கிறார். அதில், சில வாக்கியங்களைப் படித்ததும் அதிர்ச்சி அடைகிறார். அவரின் அதிர்ச்சியும் சந்தேகமும் நியாயமா என்று பாருங்கள்:

1) வாரண்டி, போனின் உரிமையாளருக்கு மட்டுமே வாரண்டி உரியது. பிறருக்கு மாற்றத் தக்கதல்ல. (The original owner of the cell phone. This warranty is non-transferable.)

2) (நோக்கியாவிடம் இருந்து வாங்கப்பட்ட) சாதனம், உதிரிபாகங்கள் மற்றும் இணைப்புச் சாதனங்களுக்கு மட்டுமே வாரண்டி உண்டு (Property covered under this warranty includes the original cell phone, and related telephone parts and accessories only)

3) மூன்றாம் நபரிடமிருந்து / நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட உதிரி பாகங்களுக்கு வாரண்டி கிடையாது (This warranty does not cover equipment purchased from 3rd parties.)

4) பறிகொடுத்தல் அல்லது இழப்பு, அரசு மற்றும் சுங்கச் சோதனையின் போது உருக்குலைவு, சட்டத்திற்குப் புறம்பான முறையில் கடத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வாரண்டி கிடையாது (The warranty does not include coverage against: (a) Loss or theft of property; (b) Seizure or destruction under quarantine or Customs regulations, confiscation by order of any government or public authority, confiscation by order of any government or public authority, or risks of contraband or illegal transportation or trade.)

5) உரிமையாளர் வாங்கியதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் வாரண்டிக் காலம் முடிவடைகிறது. (The coverage provided under this warranty shall endure for 3 years from the date of purcahse of the original owner.)

7) தவறாகக் கையாளுதல் மற்றும் மோசடியினால் ஏற்படும் இழப்புகளுக்கு வாரண்டி கிடையாது. (A claim under this warranty shall be void if the person making the claim has concealed or misrepresented any material fact or circumstance concerning this coverage or the subject thereof or in any case of fraud, attempted fraud, or false swearing by the person making the claim relating to any matter of this warranty or subject thereof, whether before or after a loss. Misrepresentation and fraud shall be prosecuted to the maximum extent allowed under law.)

8) பழுதுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். மேலும் அதற்குறிய வாரண்டி இழப்பீட்டு ஆவணங்கள் மூலம் மட்டுமே பெறமுடியும். (The person covered shall as soon as practically possible report Warranty Claim Form).

9) இந்த வாரண்டி ஒப்பந்தத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்ட பிற விசயங்களையும் கவனமாகப் படிக்கவும் (It is expressly agreed that this warranty shall not cover to the extent of any other valid and collectible warranty or insurance, whether prior or subsequent hereto in date, and by whomsoever effected, directly or indirectly covering the same property, and shall only be liable for loss or damage only for the excess value beyond the amount if such other warranties or insurance.)

10) விற்பனையாளரின் சந்தைக்குட்பட்ட எல்லைகளில் மட்டுமே வாரண்டி கோரமு

6 comments

  1. அட்றா சக்கை

    நல்லடியார்,

    மனம் கோணாதவாறு நகைச்சுவையுடன் எதிர்க்கருத்துகளை வைத்துள்ளீர்கள்

    பாராட்டுக்கள்

  2. நல்ல பொறுத்தமான விளக்கத்திற்கு பாராட்டுக்கள்.

  3. இது, தமிழோவியத்தில் கனத்த தொடர் கட்டுரை எழுதிய நல்லடியார் எழுதிய பதிவா அல்லது போலியா?

  4. அண்ணே,
    நல்ல ஃபார்முல இருக்கீக போல,
    வாதிச்சு கேக்கறவங்களுக்கு வாதிச்சு சொல்லோணும், லாஜி(க்)ச்சி கேக்கறவங்களுக்கு லாஜி(க்)ச்சி சொல்லோணும் னு எழுதறியளே! சூப்பர்.

  5. பகுத்தறிவாளன்

    //நல்லடியார்: தருமி! இஸ்லாம் பற்றிய உங்களின் பல கேள்விகள் இந்த வகையச் சார்ந்தவைதான் என்பதை உணர்வீர்களா?

    தருமி: ஏன் உணர வேண்டும்?//

    இதற்காகவே சிரிக்க சிந்திக்க! என தலைப்பிடலாம்.

    நகைச்சுவை போன்று எழுதியிருந்தாலும் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.

    தருமி என்பதற்கு அபத்தம் எனப் பெயரிடலாம் என்று தோன்றுகிறது.

    புரிந்து கொள்ள கேட்பவனும், அதற்காகவே தேடுபவனும் நிச்சயம் புரிந்து கொள்வான்.

    ஆனால் அவரைப் பொறுத்தவரை அனைத்தும் மூட்டைக் கட்டி வைத்தாகி விட்டது. இனி அவருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. ஆனால் கேள்விகள் மட்டும் கேனத்தனமாக கேட்டுக் கொண்டே இருப்பார்.

    எதிர் கேள்விகள் கேட்பவர்கள் அவரைப் பொறுத்தவரை வேறு வேலையில்லாத கோமாளிகள்.

    அவருக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்வதை விடுத்து அவரிடம் கேட்கப்பட்ட கேல்விக்கு அவரை பதில் சொல்ல வைக்க முயலுங்கள் நல்லடியாரே!

    http://sitharalkal.blogspot.com/2007/04/blog-post.html

  6. Narayanaswamy.G.

    அரைவேக்காடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *