Featured Posts
Home » பொதுவானவை » தனித்தமிழ்நாடு

தனித்தமிழ்நாடு

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்று சொல்லி 1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது.

பின்னர் காங்கிரஸும் – திமுகவும் அரசியல் உடன்பாடு கண்டதால், கூட்டனிக் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற கூட்டனி தர்மப்படி தனித்தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.அதன்பிறகு அவ்வப்போது மாநில பிரிவினை கோரிக்கை எழும்போது எல்லாம் மத்திய அரசின் இரும்புக் கரங்களால் அடக்கப்பட்டன. திராவிட இயங்கங்களும் மத்திய அரசில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் வகித்ததால் தனித்தமிழ்நாடு கோரிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது.

தமிழக அரசியல்வாதிகள் இக்கோரிக்கையைக் கைவிட்டாலும் அண்டை மாநில அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் போலும்! கர்நாடகம், கேரளா, ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் தமிழகத்திற்கு முறையே காவிரி, முல்லை பெரியாறு ,பாலாறு ஆகிய ஜீவநதிகளைத் தடுத்து, தமிழகத்திற்கு அநீதி இழைக்கிறார்கள். தமிழகத்தின் மூன்று பக்கங்களிலுமுள்ள மாநிலங்கள் தான் இப்படியென்றால், இலங்கை ராணுவமும் அவ்வப்போது தமிழக மீனவர்களின் ஜீவாதாரத்தைத் தடுத்து தமிழகத்தை நான்கு பக்கமும் நெருக்குகின்றனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி அனைத்துக் கட்சியினரின் சார்பாக உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழக அரசை கலைக்கச் சொல்லி எச்சரித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழகத்தை வஞ்சிக்கும் கேரள,கர்நாடக, ஆந்திர அரசியல்வாதிகளை பெயரளவேனும் கண்டிக்காதன் மூலம் தமிழகம் மட்டுமே சவலைப்பிள்ளையாகப் பார்க்கப்படுகிறது என்பதை அறியலாம்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல்வாதிகளும், சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகளும் தங்கள் மாநில நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுசேர்ந்து உரிமைகளை பெறுவதிலும், எதிர்ப்புகளைத் தெரிவிப்பதிலும் கடைசிவரை ஒற்றுமையாகப் போராடுகின்றனர்.திமுக அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதன் மூலமே தங்கள் அரசியல் இருப்பைக் காட்டிக்கொள்ள முடியும் என்பதால் அதிமுக,பிஜேபி மற்றும் உதிரிக்கட்சிகளும் தங்கள் பங்குக்கு தமிழக மக்களைப் பிரித்தாளுகின்றனர்.

ஆளும் திமுக கூட்டனி அரசின் மத்திய அமைச்சர்களும் தனித்தனியே தங்கள் கட்சிக்கட்டளைப்படியே பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதால் தமிழகத்தின் பாராளுமனறப் பிரதிநிதிகளால் தமிழகம் தொடர்ந்து தனிமைப் படுத்தப்படுகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு திராவிட இயக்கங்கள் கைவிட்ட தனித்தமிழ்நாட்டை அண்டை மாநில அரசுகளும், மத்திய அரசின் பாராமுகவும் உண்டாக்கி விட்டது. தூத்துக்குடி – கொழும்பு கப்பல் போக்குவரத்தை திமுக அமைச்சர் கொண்டு வந்தார் என்பதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதா கிடப்பில்போட்டார். கேரளா மிகச்சாதுரியமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. அதேபோல், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் முறையே கர்நாடகத்திற்கும், ஆந்திராவிற்கும் அத்திட்டங்கள் சென்றன. (ஒத்துழைப்பு என்பதை கமிஷன்தொகை கட்டுபடியாகவில்லை என்று வாசிக்கவும்:)

காவிரிப்பிரச்சினையில் தமிழக சினிமா நடிக-நடிகையர் நெய்வேலியில் ஊர்வலம் நடத்திய போது அதனைக் குலைப்பதற்கென்றே கர்நாடகத்திற்கு விசுவாசமாக ரஜினிகாந்த் தனி

44 comments

  1. எவனோ ஒருவன்

    //செந்தமிழ்நாடெனும் போதினிலே //

    தீ வந்து பாயுது பார்பனர் காதினிலே
    :))

  2. நண்பன்

    நாம விரும்பிக் கேட்டப்ப கொடுக்காததை, இப்போ வலியத் திணிக்கிறாங்கன்னு சொல்ல வர்றீங்களா?

  3. புரட்சி தமிழன்

    தனி தமிழ் நாடு என்னும் போது நமக்கு இன்னும் நிறையவே வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடின உழைப்பாள்களான தமிழக மக்கள் சோம்பேரிகளான வட நாட்டு மக்களால் உழைப்பினை உறிஞ்சப்படுகிறார்கள். நாமும் நமக்கு இருக்கும் திறமையை முழுவதுமாக பயன் படுத்தி முன்னேற முடியும்.

  4. வெத்து வேட்டு

    தமிழகத்தை பிளவு படுத்த முஸ்லீம்களின் வேலை ஆரம்பம்

  5. அழகப்பன்

    அன்பின் நல்லடியார்,

    தாங்கள் மாநில சுயாட்சி பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். தனித் தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதமே. (இந்தியா என்பது பல தேசங்களை உள்ளடக்கிய தேசம் என்பது தனிக்கதை)

    //தனி தமிழ் நாடு என்னும் போது நமக்கு இன்னும் நிறையவே வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. //

    புரட்சித்தமிழனின் இந்தக் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன். தமிழகம் தனி நாடாக அமைந்தால் அதன் வளர்ச்சி சிங்கப்பூரின் அளவுக்கு இல்லாவிட்டாலும் மலேசியாவின் அளவுக்கேனும் அமையும் என்பது என் எண்ணம்.

  6. நல்லடியார்

    //நாம விரும்பிக் கேட்டப்ப கொடுக்காததை,இப்போ வலியத் திணிக்கிறாங்கன்னு சொல்ல வர்றீங்களா?//

    அதேதான்!

  7. நல்லடியார்

    //தனி தமிழ் நாடு என்னும் போது நமக்கு இன்னும் நிறையவே வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது//

    புரட்சித் தமிழன்!

    இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! சில வெத்து வேட்டுக்கள் இதையும் முஸ்லிம்களின் சதியாக சொல்வார்கள்!

  8. நல்லடியார்

    //தமிழகத்தை பிளவு படுத்த முஸ்லீம்களின் வேலை ஆரம்பம்//

    வெத்துவேட்டு,

    ஜாலிஜம்பர் said…

    வெத்துவேட்டு,பாகிஸ்தானில் தினமும் குண்டு வெடிக்குதே அது இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமலா நடக்கிறது,சரி அந்தக் கதையெல்லாம் விடுங்கள், ராமர் மசூதியை என்ன காரணத்துக்கு இடித்தீர்கள்?

    ஜாலி ஜம்பருக்கு பதிலிட்டு விட்டீர்களா?
    பாபர் மசூதியை இடித்து இந்தியர்களை மதரீதியாகப் பிரிப்பதைவிட ‘இது‘ ஒன்றும் மோசமில்லை.

  9. நல்லடியார்

    //தாங்கள் மாநில சுயாட்சி பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். தனித் தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதமே//

    அழகப்பன்,

    மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியா பூகோல ரீதியில் துண்டாடப்படுவதை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல் மதரீதியில் துண்டாடுவதும் ஏற்க முடியாத ஒன்று. தனித்தமிழ்நாடு தேச துரோகம் என்றால் இந்தியா இந்துக்களுக்கு என்பதும் தேசதுரோகமே.

    ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்று தேசிய நலனுக்காக உழைப்பை வழங்ங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை, சுற்றியுள்ளவர்கள் வஞ்சிக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் மெத்தனம் தொடர்ந்தால் மீண்டும் இக்கோரிக்கை எழக்கூடும். (சில வருடங்களுக்கு முன்புகூட தற்போதைய அரசியல்வாதிகளால் முணுமுணுக்கப் பட்டது என்பதையும் நினைவில் கொள்க!)

    //தமிழகம் தனி நாடாக அமைந்தால் அதன் வளர்ச்சி சிங்கப்பூரின் அளவுக்கு இல்லாவிட்டாலும் மலேசியாவின் அளவுக்கேனும் அமையும் என்பது என் எண்ணம்.//

    மலேசியாவை இலங்கை மாதிரி போர்க்கள பூமியாக்க சில விசமிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களே?

  10. வவ்வால்

    //திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது.//

    நல்லடியார்,

    பெயருக்கு ஏற்ற நல்ல எண்ணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே?

    மொழி வாரி மாநிலங்கள் என்பதையும் தனி நாடு என்பதையும் கூட வித்தியாசப்படுத்த தெரியாத ஒருவரை , நட்சத்திரமாக , தேர்ந்தெடுத்த தமிழ்மணத்தை எத்தால் அடிப்பது!

    1952-53 லேயே மொழி அடிப்படையில் ஆந்திரப்பிரதேஷ் உருவாக்கப்பட்டு விட்டது, பொட்டி ஷ்ரி ராமுலு என்பவர் இதற்காக உயிர் துறந்தார்.

    திராவிட இயக்கத்தலைவர்கள் கோரியது தனி திராவிட நாடு.அது தமிழ் நாடு என்று கூட சொல்ல முடியாது. இது சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பெரியார் அவர்கள் தலைமையில் கேட்கப்பட்டது.பின்னர் தேர்தல் அரசியலில் ஈடுப்பட்ட அண்ணா அது சாத்தியமில்லை என்பதால், மொழி வழி பிரிந்து, இன வழி ஒன்று சேர்வது என்று சொன்னார்…அதன் அடிப்படையில் தனி மாநிலம் தான் கேட்கப்பட்டது. தனி மொழி வாரி மாநிலம் கேட்டதன் விளைவாக இந்தியாவிலேயே முதன் முறையாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

    இதெல்லாம் 1952-53 இல் நடந்தது, பின்னர் எதை வைத்து 1960 இல் தனி மாநிலம் கேட்பது தேச துரோகமாக கருதப்பட்டது என்கிறீர்கள்.

    //மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியா பூகோல ரீதியில் துண்டாடப்படுவதை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல் மதரீதியில் துண்டாடுவதும் ஏற்க முடியாத ஒன்று.//

    இங்கே தெரிகிறது உங்கள் சுய ரூபம்!

    இந்த பதிவில் நான் எல்லாம் இனியும் பேசினால் அது சரியாகப்படாது.

    படை எடுத்து ஊடுருவதை(முகலாய அரசர்களில் அதிக நிலப்பரப்பை ஆக்ரமித்த அவுரங்க சீப்பின் முயற்சிகள் எல்லாம் கை கூடவில்லை, சிவாஜி என்ற மராத்த வீரன் முன்னால் தவிடு பொடியானது) ஒருங்கிணைத்தது என்று சொல்லும் , உங்களைப்போன்றவர்களை எல்லாம்… நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்!

  11. தனி சோழ நாடு அமைந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.எதுக்குன்னா இந்த பல்லவ வன்னிய கும்பல் எல்லாம் கள் குடித்து கும்மாளம் போடும் சோம்பேறி கும்பல்.அவங்களை கழட்டி விட்டா சோழ நாடு துரிதமாக முன்னேற வாய்ப்பு இருக்கும்.பாண்டிய ப் பசங்களெல்லாம் ரெளடிப் பசங்க.ஒண்ணுக்கும் உதவாதவங்க.அவனுங்களையும் துரத்திடலாம் மதுரைக்கு.கடைசியா இந்த தாடிக்கார பசங்களுக்கு தனி தமிழ் பாகிஸ்த்தான் அமைச்சு குடுத்தா எல்லாரும் முன்னேற வாய்ப்புள்ளது.

  12. //இந்த தாடிக்கார பசங்களுக்கு தனி தமிழ் பாகிஸ்த்தான் அமைச்சு குடுத்தா எல்லாரும் முன்னேற வாய்ப்புள்ளது//

    அடடா, இது நல்லா இருக்கே.போகிற போக்கைப் பாத்தா நம்ம லக்கி அய்யா வந்து தனி குற நாடு கேப்பாரு;திருநெல்வேலிப் பசங்க தனி கட்டபொம்மு சீமை கேப்பாங்க.நல்ல காமெடியை நல்லடியார் அய்யா ஆரம்பித்து வைத்திருக்கிறார்.என்னைக் கேட்டா சிங்காரச் சென்னையை தனி சென்னை நாடா அறிவிச்சுட்டா புரட்சி தமிழன் அய்யா சென்னையை சிங்கப்பூரா மாத்திக் காட்டுவாரு.

    பாலா

  13. //உங்களைப்போன்றவர்களை எல்லாம்… நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்//

    வவ்வால் அய்யா,

    இப்ப மட்டும் என்ன வாழுதாம்?தமிழ் மல நிர்வாகிகள் அந்த வேலையைத் தான் செய்க்றார்கள்.வேதனை என்னன்னாக்க, தொழிலை சரியாக செய்யாமல்,தமிழ் மலத்தை திராவிட,,நக்சல,இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகளோட கூடாரமா ஆக்கிட்டங்க நம்ம அரவிந்தன் அய்யா சொன்னாப்போல.

    பாலா

  14. மிக அருமையான பதிவு

    தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் நல்லடியார் அவர்களே

    நன்றிகள் பல

    Sathiyanarayanan

  15. நல்லடியார்,
    பெயருக்கு ஏற்ற நல்ல எண்ணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே? -வவ்வால்

    அது எப்படி ‘தலைகீழாக’ தொங்கிக்கொண்டு – பெயருக்கும் – எண்ணத்திற்கு பொருத்தம் பார்க்க முடிகிறது?

    உங்களைப்போன்றவர்களை எல்லாம்… நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்!
    -வவ்வால்..

    தமிழ்மணம் வவ்வாலுக்கு போட்டியாக ‘சிரைக்க’ போகக்கூடாது என்பது என் தாழ்வான கருத்து..

    ஆந்தை

  16. அட்றா சக்கை

    செல்லும் இடமெல்லாம் மலம் கழிக்கும் (நன்றி: பதிவர். இறை நேசன் அவர்கள்) கும்பல் இந்தப் பதிவின் சிந்தனையோடு ஒத்துப் போகவில்லை என்றால் அதை அழகான முறையில் சொல்ல வேண்டியது தானே!

    திருந்தாத ஜென்மங்கள்!

    //அதனைக் குலைப்பதற்கென்றே கர்நாடகத்திற்கு விசுவாசமாக ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் இருந்ததோடு, நதிநீர் இணைப்பிற்காக ஒருகோடி ரூபாய் நன்கொடை கொடுப்பதாக அறிவித்தார்.//

    பதிவில் எனக்குப் பிடித்தது இந்த வரிகள் தான். ‘ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு பெற்ற’ இந்த சூப்புர ஸ்டார் தமிழகத்துக்கு இதுவரை என்ன உருப்படியா செய்து கிழித்தார்?

    அட செய்யாட்டாலும் பரவாயில்லை; கெடுக்கவும் அல்லவா செய்கிறார்!, ஹும்!

    //அதேசமயம் கர்நாடகாவில் ராஜ்குமார் தலைமையில் தமிழரான ரமேஷ் அரவிந்த் உள்பட ஒட்டுமொத்த சினிமா நடிகர்களும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.//

    இதில் என்னய்யா ஆச்சரியம்? ரமேஷ் அரவிந்த் தமிழ் பேசும் நூல் பார்ட்டி அவ்வளவே! அவர் தன் புத்தியைக் காட்டாமல் இருப்பாரா?

    இவர்கள் வெள்ளையர்கள் நம்மை ஆண்ட போது அவர்களுக்கு ஜால்ரா அடித்தார்களே மறந்துவிடுமா?

    யார் பக்கம் காத்தடிக்குதோ அந்தப் பக்கம் சேர்ந்துக்க வேண்டியது தான்!

  17. தி.ராஸ்கோலு

    //நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்!//

    நல்லடியாரின் இந்தப் பதிவுக்குக் கருத்துக் கூறுமுன் எனக்கு வவ்வால் என்பவர் எழுதிய இவ்வாசகம் பளிச்சென்று பட்டது.

    இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் வவ்வால்? தமிழ்மண நிர்வாகத்தைப் பழித்துக் கூற முனைந்திரூக்கிறீர்கள் அதற்கு உங்கள் பார்வையில் கேவலமான தொழிலாக சிரைப்பது படுவதால் அந்த வேலையைச் செய்யச் சொல்லி இருக்கிறீர்கள். சிரைப்பது உங்களுக்கு கேவலமான தொழிலா?

    நீங்கள் பார்ப்பனரா இல்லையா என்பது தெரியாது ஆனால் இப்படி எழுதுவது பார்ப்பனியத் திமிர் அல்லது கொழுப்பு என்று மட்டும் தெரிகிறது.

    உங்களின் பதிவுகளும் அதையே உறுதிப் படுத்துகின்றன.

  18. வவ்வால்

    ஆந்தை, அட்ரா சக்கை,

    இவர்களுக்கெல்லாம் பதிவெதுவும் இல்லை, ஆனால் அவர்கள் என்னைப்பார்த்து கேள்விக்கேட்பார்கள், இக்கேள்வி, பதிவரின் சுய அரிப்பின் வடிகால் என நான் நினைத்தால் தவறெதுவும் இருக்காது என நினைக்கிறேன்.

    நான் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்றுப்பார்க்காமல் மூட நம்பிக்கை பரப்பும் அனைவரையும் தட்டிக்கேட்பது , பதிவுலகில் அனைவருக்கும் தெரிந்தது.

    அது என்ன நான் பிராம்மணியத்தை தட்டிக்கேட்டப்போது எல்லாம் வந்து எனக்கு முத்திரை குத்த வராதவர்கள் இப்போது எனக்கே பிராம்மண முத்திரைக்குத்த வருவது.இங்கே பலருக்கும் தெரியும் நான் எப்படி பல சமய, மூட நம்பிக்கைகளை சாடி வருகிறேன் என்று.

    தனி நாடு கேட்டதுக்கும், தனி மாநிலம் கேட்டதுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசும் நல்லடியாரை எல்லாம் என்னவென்று சொல்வதாம்.

    முதலில் இந்திய வரலாறு, திராவிடர் வரலாறு எல்லாம் படிக்கவும், அப்புறம், எந்த வருஷம் என்ன நடந்தது என்பது தெரியும்.

    நல்லடியார் என்று பெயர் வைத்துக்கொண்டு , வாய்ப்பு கிடைத்தது என்று பிதற்றினால், பிச்சுப்புடுவேன் பிச்சு!

    முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியா என்று எந்த தைரியத்தில் இந்த நல்லடியார் சொல்கிறார்.

    ஒட்டு மொந்த இந்தியாவையும் வெள்ளையர்களே ஆட்சி செய்யவில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது பல சுதந்திர நாடுகள் இந்தியாவில் இருந்தது, அவற்றை இணைத்தது வல்லபாய் படேல் என்பது , சரித்திரம்.

    இந்த நிலையில் வெள்ளையர்களுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த முகலாயர்கள் எந்த இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள்.

    அவுரங்க சீப் காலத்திலேயே பிஜாப்பூர், கோல்கொண்டா, அஹ்மத் நகர் , ஏன் வங்காளம் கூட அவர்கள் கீழ் முழுமையாக இல்லை. முழு தமிழகமும் தனியாக இருந்தது.தினம் சண்டை, போர் தான். அவுரங்க சீப்பின் தோல்வியாக தக்காண பீட பூமி படை எடுப்பு அமைந்தது என்பது வரலாறு! கூட சிவாஜியின் எழுச்சி அப்புறம் எங்கே இருந்து முகலாயர்கள் இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள்.

    எனது ஒரே கேள்வி முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியா என்பது எந்த வகையில் உண்மை!

  19. நல்லடியார்

    //மொழி வாரி மாநிலங்கள் என்பதையும் தனி நாடு என்பதையும் கூட வித்தியாசப்படுத்த தெரியாத ஒருவரை//

    வவ்வால்,

    இப்பதிவில் சொல்லப்பட்டுள்ளவை இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து தனியொரு தேசமாக்க வேண்டும் என்பதல்ல;திராவிடத் தலைவர்களால் கோரப்பட்டபோது மறுக்கப்பட்ட தனித் தமிழ்நாட்டை, சுதந்திர இந்தியாவில் அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பின்மையால் தமிழ்நாடு தனித்தீவாக மாற்றப் பட்டுள்ளது என்ற ஆதங்கத்தைச் சொன்னேன்.

    கன்னடர்,தெலுங்கர்,மலையாளி இவர்களெல்லாம் மாநில ஒற்றுமைக்காக ஒன்று சேர்கிறார்கள். ஆனால் தமிழன் மட்டும் இவற்றை உணராமல் பிரிந்து நிற்கின்றனர் என்பதைச் சொன்னேன்.

    பின்னூட்டங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் பதிவை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.

  20. நல்லடியார்

    //கடைசியா இந்த தாடிக்கார பசங்களுக்கு தனி தமிழ் பாகிஸ்த்தான் அமைச்சு குடுத்தா எல்லாரும் முன்னேற வாய்ப்புள்ளது.//

    அனானியாக எழுதிவிட்டு பாலா என்ற பெயரிலும் மொ.மா.தனம் பண்ணும் அன்பருக்கு,

    தாடிக்கார பசங்களுக்கு தனி தமிழ் பாகிஸ்தான் அமைச்சுக் கொடுத்துட்டு வந்தேறிய குடுமிக்கார பசங்களின் தேசமாக இந்தியாவை மாற்ற முடியாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம்

  21. நல்லடியார்

    //சிரைப்பது உங்களுக்கு கேவலமான தொழிலா?//

    திராஸ்கோலு ஐயா,

    வவ்வால் என்பவர் பார்ப்பன வவ்வாலோ இல்லையோ தெரியாது. சிரைப்பது பார்ப்பனர் செய்யக்கூடாத தொழில் என்பதும்,சிரைப்பவர்கள் பார்ப்பன வேதம் ஓதக்கூடாது என்பது பற்றியும் ஓரளவு தெரியும்.

    நான் அறிந்தவரை பார்ப்பனர் குடுமியை சிரைக்கக் கூடாது; லேசாக கத்தரிக்க மட்டும் செய்யலாம். அதுவும் பார்ப்பனருக்குச் சேவகம் செய்யப் பிறந்த சூத்திரனைக் கொன்றால் மட்டுமே என்பதைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  22. வவ்வால்

    நல்லடியார்,

    //1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது.//

    இது தான் உங்கள் பதிவின் ஆரம்ப பத்தி , இது ஒன்றும் பின்னூட்டத்தில் இருந்து பிடித்துக்கொண்டது அல்ல, (1952-53 இலேயே ஆந்திர மாநிலம் தனியாக உருவாக்கபட்டு விட்டது, அப்புறம் எப்படி தனி மாநிலம் கேட்டதை 1960 இல் தேச துரோகம் சொன்னார்களாம், உண்மையில் தனி நாடு கோரிக்கை தான் தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது, பின்னர் வேறு வழி இல்லாமல் தமிழ்நாடு என்ற மாநிலத்தோடு சமரசம் ஆகி விட்டார்கள்)இதனைப்போலவே பின்னர் முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியா என்றும் முழங்கினீர்கள். முகலாயர்கள் எந்த இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள், அவர்களும் நாடு பிடிக்க வந்தவர்கள் தானே! அவர்கள் என்ன இந்திய மண்ணின் பூர்வ குடிகளா?

    ஆரம்பமும் தப்பு, பின்னூட்டமும் தப்பு அவ்வளவு தான் நான் சொல்வேன்.

    எனக்கு எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்திக்கோங்க!

    அது என்னையா இந்துத்துவ மூட நம்பிக்கையா சொன்னா என்னனு கேட்க கூட வராத பயல்கள் எல்லாம் வேறு யாரோ(நல்லடியார்) சொன்னத கேள்விக்கேட்டா மட்டும் பொங்கிட்டு வர்ரிங்க எல்லாம் ஒரு குருப்பா தான் அலையுரிங்களா!

  23. அட்றா சக்கை

    தலைகீழாய்த் தொங்கி உற்று நோக்கினால் என்னவாகும் எல்லாம் தலைகீழாய்த் தெரியும்.

    பதிவுகளுக்கு வாசகர்கள் என்றொரு பிரிவினர் இருப்பது தெரியாது, முட்டாள் வவ்வால்களுக்கு.

    நான் இந்த வவ்வாலை நோக்கி ஒன்றுமே கேட்கவில்லையே!

    இவ்வளவு டென்ஷன் ஏன் ஆகிறார் இவர்?

    இவர் பதிவில் இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் இவரது சுய அரிப்பின் வெளிப்பாடு என்றும் நான் நினைக்க வாசகனாகிய எனக்கும் உரிமை உள்ளது.

  24. நல்லடியார்

    //ஆரம்பமும் தப்பு, பின்னூட்டமும் தப்பு அவ்வளவு தான் நான் சொல்வேன்.//

    வவ்வால்,

    தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை இந்திய அரசியலில் திராவிடக் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்த பிறகுதான் நன்கு அறியப்பட்டது. பத்து வருட இடைவெளி என்பது வரலாற்றில் ஒன்றும் நீண்ட காலமல்ல. பதிவெழுதும் போது என் நினைவில் வந்த வருடத்தை குத்து மதிப்பாக எழுதி விட்டேன். இதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சொல்ல வரும் செய்தியைப் புரிந்து கொள்ளாமல் தொங்கிக் கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. என் கூற்றில் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று முன்னுரையில் சொல்லியுள்ளேனே.

    மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியா பற்றிய விவாதத்திற்குச் செல்லும் முன் முகலாயர் வருகைக்கு/படையெடுப்புக்கு முன் இருந்த ஒரே இந்தியா பற்றியும் அதன் மன்னர் யாரென்றும் சொன்னால் மேற்கொண்டு வாதிக்கலாம்.

  25. வவ்வால்

    அட்ரா சக்கை,
    //நான் இந்த வவ்வாலை நோக்கி ஒன்றுமே கேட்கவில்லையே!

    இவ்வளவு டென்ஷன் ஏன் ஆகிறார் இவர்?//

    மன்னிக்கவும்,இந்த வலைப்பதிவில் உள்ள சிறு தவறினால் நான் தி.ராஸ்கோலு என்பவர் சொன்னதை நீங்கள் சொன்னதாக நினைத்து சொல்லிவிட்டேன்.

    அதாவது ஒரு பின்னூட்டம் வந்ததும் அதன் கீழ் ஒரு கோடு வருகிறது பின்னரே அதை சொன்னவர் பெயர் வருகிறது, அதை தொடர்ந்து அடுத்த பின்னூட்டம் வருகிறது.

    ஆனால் அப்பெயர் அடுத்து வரும் பின்னூட்டத்துடன் சேர்ந்து காட்சி அளிக்கிறது. அதற்கிடையே எந்த பிரிப்பானும் இல்லை.

    பின்னூட்டம் போட வரும் போது வேறு மாதிரி இருக்கிறது , பதிவில் வேறு மாதிரி இருக்கு என்று சொல்கிறேன்.

    அட்ரா சக்கை என்ற இடத்தில் தி.ராஸ்கோலு என்று வந்திருக்க வேண்டும்.

    வாசகர்கள் என்று ஒரு நிலை உண்டு என்பதை அறிவேன், தி.ராஸ்கோலு என்பவர் என் பதிவில் உள்ளது அப்படி இருக்குனு முடிவு சொல்லி இருந்தார்,(என்பதிவில் அப்படி மோசமாக எதுவுமே இல்லை என்பது வேறு விஷயம்) எனக்கு பதிவு இருப்பதால் அப்படி சொல்ல முடிகிறது, இல்லாமல் சொல்லும் உங்களுக்கு எதை வைத்து சொல்வது என்று கேட்கும் நோக்கில் அப்படி சொல்லி இருக்கிறேன்.

    மற்றப்படி வாசகர்களாக சொல்வதற்கு தடை இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல நான்.

    இந்த வலைப்பதிவில் ஏன் இப்படி வித்தியாசமாக வடிமைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. காபி பேஸ்ட் செய்தால் கூட கீழே இருப்பவரின் கருத்துடன் வருவது போலவே இருக்கு!

  26. வவ்வால்

    நல்லடியார்,
    //பத்து வருட இடைவெளி என்பது வரலாற்றில் ஒன்றும் நீண்ட காலமல்ல. பதிவெழுதும் போது என் நினைவில் வந்த வருடத்தை குத்து மதிப்பாக எழுதி விட்டேன்.//

    10 வருடம் என்பது நீண்ட இடைவேளை இல்லை எனலாம், ஆனால் நான் சொல்வது கருத்துப்பிழையை, தனி மாநிலம் கேட்பதை தேச துரோகம் என்று சொல்லவில்லை, தனி நாட்டைத்தான் சொன்னார்கள்.

    தனி நாடு கிடைக்காத ஆசையைத்தான் தனி மாநிலம் கிடத்தப்போதும் “தமிழ் நாடு” என்று “நாடு” என வருமாறு தீர்த்துக்கொண்டார்கள்.

    10 ஆண்டுகள் என்பதை விட நீங்கள் சொன்னதோ தனி மாநிலம் கேட்பதை தேச துரோகம் என்று சொன்னார்கள் என்று, அதுவே தவறு தானே!

    ஏன் எனில் அப்படி தனி மாநிலம் கேட்பதை எப்போதும் யாரும் தேச துரோகம் என்றெல்லாம் சொல்லவே இல்லையே!

    //மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியா பற்றிய விவாதத்திற்குச் செல்லும் முன் முகலாயர் வருகைக்கு/படையெடுப்புக்கு முன் இருந்த ஒரே இந்தியா பற்றியும் அதன் மன்னர் யாரென்றும் சொன்னால் மேற்கொண்டு வாதிக்கலாம்.//

    வெள்ளைக்காரன் தான் கடைசியாக இந்தியாவை விட்டு சென்றவன் அவன் காலத்திலேயே ஒருங்கிணைந்த இந்தியா இல்லை என்று சொல்கிரேன், நீங்கள் முகலாயர்கள் , அவர்கள் முன்னர் இருந்த ஒருங்கிணைந்த இந்தியா எங்கே என்று கேட்டால் எப்படி.

    ஒருங்கிணைந்த இந்தியா என்ற எண்ணமே வெள்ளையர்களுடனான சுதந்திரப்போரின் போது தான் உருவானது. எனவே முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியா என்பது உங்களைப்போன்றவர்களின் சொந்த ஆசை!

    இன்று வரை வெள்ளையர்கள் ஆண்டதால் தான் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது என்று சொல்வார்கள், முகலாயர்களால் அல்ல.

    அப்படி முகலாயர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா எனில் ஏன் பாகிஸ்தான் என்ற நாடு உருவானது, அதுவும் முகலாயர்களால் ஒன்றினைக்கப்பட்ட இந்தியாவை துண்டாடும் செயல் தானே!

    நீங்கள் தானே முகலாயர்களால் ஒருங்கிணைத்த இந்தியாவை துண்டாடக்கூடாது என்று சொல்பவர், பாகிஸ்தானை ஏன் தனி நாடு ஆக்கி துண்டாக்கினார் ஜின்னா?

    முகலாயர்களில் கடைசிப்பேரரசர் அவுரங்க சீப் தானே அவர்கள் காலத்திலே எவ்வளவுப்பகுதிகள் அவர் ஆட்சியின் கீழ் இருந்தது.

    பலப்பகுதிகளும் தனி மன்னர்கள், கப்பம் கட்டுபவர்கள் என்று தான் இருந்தது, மற்றப்பகுதிகள் தன்னாட்சியுடன் இருந்தது. மராத்தவை கூட பிடிக்க முடியாமல் தான் உயிர் விட்டார் அவுரங்க சீப்.

    அப்புறம் எங்கே தமிழகம் முகலாயர்களின் கீழ் இருக்கப்போகிரது்,அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, எல்லாம் தமிழக எல்லைத்தான்.

  27. //இவர்கள் வெள்ளையர்கள் நம்மை ஆண்ட போது அவர்களுக்கு ஜால்ரா அடித்தார்களே மறந்துவிடுமா?//

    முண்டம் அஎறா சக்கை அய்யா,

    ஆங்கிலேயனுக்கு ஜால்ரா போட்டது,அவன் காலில் விழந்து சுதந்திரம் வேண்டம் என்று கெஞ்சியது கன்னட தமிழர் தந்தையான தாடிக்கார தீவிரவாதி தான்.வேறு யாருமல்ல.இது கூட தெரியாத நீ யெல்லாம் தாடிக்காரனின் உண்மையான சீடனா..தூ.

    பாலா

  28. நல்லடியார்

    //வேதனை என்னன்னாக்க, தொழிலை சரியாக செய்யாமல்,தமிழ் மலத்தை திராவிட,,நக்சல,இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகளோட கூடாரமா ஆக்கிட்டங்க நம்ம அரவிந்தன் அய்யா சொன்னாப்போல.//

    பாலா,

    அரவிந்தன் அய்யா இப்ப எந்தக் கூடாரத்துல் இருக்கிறாரோ அந்தக்கூடாரத்தில்போய் வாந்தி எடுக்கலாமே.

    உங்கள் அரவிந்தன் அய்யா சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களுடன் தொடர்பில் இருப்பவர். உண்மையத் தவிர வேறெதுவும் சொல்லவே மாட்டார்!

    ரொம்ப நல்லவர் என்றும் அவரால் தமிழ்மணம் செழுமை அடைவதாகவும் ‘நேச’மாக ஒருவரே சான்றளித்துள்ளார்.

    அதாவது இந்துத்துவா வெறியர்களின் கொ.ப.செ.க்கள் வலைப்பூக்களில் எழுதியதை தமிழ்மணம் திரட்டியவரை செழுமையடைந்ததாம். உலகம்கா நியாயாவகள்தானய்யா நீங்கள்!

  29. நல்லடியார்

    //தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் நல்லடியார் அவர்களே//

    நன்றி சத்யநாராயணன்.

  30. நல்லடியார்

    //ஒட்டு மொந்த இந்தியாவையும் வெள்ளையர்களே ஆட்சி செய்யவில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது பல சுதந்திர நாடுகள் இந்தியாவில் இருந்தது, அவற்றை இணைத்தது வல்லபாய் படேல் என்பது, சரித்திரம்//

    //ஒருங்கிணைந்த இந்தியா என்ற எண்ணமே வெள்ளையர்களுடனான சுதந்திரப்போரின் போது தான் உருவானது. எனவே முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியா என்பது உங்களைப்போன்றவர்களின் சொந்த ஆசை!//

    //இன்று வரை வெள்ளையர்கள் ஆண்டதால் தான் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது என்று சொல்வார்கள், முகலாயர்களால் அல்ல//

    வவ்வால்,

    In 1526, Babur, a Timurid (Turco-Persian) descendant of Timur, swept across the Khyber Pass and established the Mughal Empire, which lasted for over 200 years. The Mughal Dynasty ruled most of the Indian subcontinent by 1600; it went into a slow decline after 1707 and was finally defeated during the Indian rebellion of 1857. This period marked vast social change in the subcontinent as the Hindu majority were ruled over by the Mughal emperors…

    சிறுசிறு சமஸ்தானங்களாக இருந்துவந்த பகுதிகளை ஏறக்குறைய தற்போதைய இந்தியாவாக இணைத்தவர்கள் மொகலாய மன்னர்களே.

    http://www.answers.com/topic/history-of-india

    இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்களின் கடைசி மன்னராக இருந்த அவுரங்கசீப் தமிழகத்தின் சில பகுதிகள்வரை உள்ளடக்கி முழு இந்தியாவையும் ஒருங்கிணைத்தார்.

    http://content.answers.com/main/content/wp/en/3/34/Mughal_empire_large.png

    இப்படி துண்டு துண்டாக இந்து மன்னர்களால் ஆளப்பட்ட சம்ஸ்தானங்களாக இந்தியா மீண்டும் அவ்வாறு துண்டுகளாகி விடக்கூடாது என்பதே எமது விருப்பம்.

    நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியாவையும், இந்துத்துவாவினால் பிரிக்கப்பட்ட இந்தியாவையும் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

    கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

  31. வவ்வால்

    நல்லடியார்,

    //it went into a slow decline after 1707 and was finally defeated during the Indian rebellion of 1857. This period marked vast social change in the subcontinent as the Hindu majority were ruled over by the Mughal emperors…//

    answers.com சொல்லிவிட்டது என்பதால் இது உண்மையாகி விடாது.

    1707 – 1857 வரைக்கும் யார் ஆண்டது இந்தியாவை. அப்போது இருந்ததும் வெள்ளையர்கள் ஆட்சி தான்.

    1857 சிப்பார்கள் கலகம் முகலாயர்களுக்கு எதிராக அல்ல , ஆங்கிலேயர்களுக்கு எதிராக தான் அப்படி இருக்கும் போது 1857 இல் முகலாய அரசு வீழ்த்தப்பட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்.

    இன்னும் சொல்லப்போனால் சிப்பாய்கள் ,பிரிட்டீஷாரிடம் பென்சன் வாங்கிக்கொண்டு காலம் தள்ளிய பகதூர் ஷா ஜாபர் என்ற வயதான முகலாய மன்னரை மீண்டும் கொண்டு வந்து அரியணையில் அமர்த்தினார்கள். கலகம் முடிவுற்றதும் அவரை சிறையில் அடைத்து விட்டார்கள்.

    அது ஒன்று தான் 1857க்கும் முகலாயர்களுக்கும் உள்ள ஒரே தொடர்பு.

    1857 சிப்பாய் கலகத்தின் பிறகு விக்டோரியா மகாராணி இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி வசம் இருந்து நேரடியாக பிரிட்டீஷ் வசம் எடுத்துக்கொண்டு ஒரு பிரகடணம் செய்தார் என்பதும் வரலாறு!

    முகலாயர்களை விட அதிகப்பகுதிகளை ஆண்டது வெள்ளையர்கள் தான்.

    மேலும் இந்துத்வ மன்னர்கள் துண்டு துண்டாக ஆண்டார்கள் என்பது போல முகலாய வழி வந்த மன்னர்களும் துண்டு துண்டாக ஆண்டு கொண்டு தான் இருந்தார்கள்.

    //நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியாவையும், இந்துத்துவாவினால் பிரிக்கப்பட்ட இந்தியாவையும் பற்றி விரிவாக எழுதுகிறேன்.///

    நீங்கள் சொல்வது போல இருந்திருக்குமானால் ஏன் பாகிஸ்தான் உருவாச்சு, அதை உருவாக்கியவர் யார் ஜின்னா தானே! அப்புறம் இந்துத்துவ மன்னர்கள் துண்டாக்கினார் கள் என்பது எப்படி?

    இன்னும் சொல்லப்போனால் காஷ்மீரை சுதந்திரத்தின் போது ஆண்டவர் இந்து மன்னர், ஹரி சிங்க், அவர் இந்தியாவுடன் இணைந்ததை பிடிக்காமல் தானே இன்றும் அங்கே சண்டை நடக்கிறது. துண்டாடும் நோக்கம் எங்கே யாரிடம் இருக்கிறது என்பது தெளிவு!

    அதே போல தனி மாநிலம் உருவாக்குவதை தேச துரோகம் என்று எங்கும் யாரும் சொல்லவில்லை, நீங்களாகவே அப்படி சொல்வதும் உள்நோக்கம் கொண்டது.

    இல்லை எனில், கோவா, சட்டிஸ்கர், ஜார்கண்ட் , உத்திராஞ்சல் என்ற புதிய மாநிலம் உருவாகி இருக்காது.ஏன் தற்போது தெலுங்கான மாநிலம் உருவாக எல்லாம் குரல் கொடுத்துக்கொண்டு இருப்பார்களா?

    நீங்கள் தனி நாடு கேட்டதை தனி மாநிலம் என்று வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள்.

  32. இறை நேசன்

    //தனித்தமிழ்நாடு தேச துரோகம் என்றால் இந்தியா இந்துக்களுக்கு என்பதும் தேசதுரோகமே.//

    நல்லடியார்,

    எதை எதனுடன் தொடர்பு படுத்துகின்றீர்கள்?

    தனிதமிழ்நாடு தேசத்துரோகம் இல்லையெனில் இந்தியா இந்துக்களுக்கு என்பதும் தேசத்துரோகம் இல்லை என்றாகி விடுமா?

    ஒருவரின் உழைப்பை சுரண்டி கொழுத்து விட்டு அவருக்கு அல்வா தரும் மற்றொருவரின் செயல்பாட்டுக்கு எதிராகத் போராடுவது எவ்வகையிலும் தவறல்ல.

    ஆனால் அதே சமயம், இருவருக்குச் சொந்தமான சொத்தை எனக்கு மட்டுமே சொந்தம் என ஒருவன் உரிமை கொண்டாடுவது எவ்வகையில் நோக்கினாலும் தவறானதே.

    அன்புடன்
    இறை நேசன்.

  33. இறை நேசன்

    //நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்!//

    அடேய் தலை கீழாகத் தொங்கும் காட்டுவாசியே… என அழைத்துத் துவங்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அது தனி மிருகத் தாக்குதல் என வவ்வால் தலைகீழாகத் தொங்குமே என்பதால்….

    தலையைச் சிரைக்காமல் நாகரீகமின்றி காட்டுவாசியாகவே வாழும் வவ்வாலே “சிரைத்தல்” உனக்கு என்ன மோசமாகத் தெரிகிறதா?

    சிரைப்பவர்கள் சிரைக்காமல் இருப்பின் உன் நிலைமையைச் சற்று யோசித்துப் பார்.

    வந்தேறி பார்ப்பானப் பன்னாடைகள் சிரைப்புத் தொழிலைக் கேவலப்படுத்துவது போன்று உள்ளது உன் சொல்லாடல்.

    முதலில் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறு. இல்லையேல் நீயும் அந்த நன்றி கெட்டக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை ஒத்துக் கொள்.

    இறை நேசன்.

  34. இறை நேசன்

    //இப்ப மட்டும் என்ன வாழுதாம்?தமிழ் மல நிர்வாகிகள் அந்த வேலையைத் தான் செய்க்றார்கள்.//

    ஓ! எப்படியப்பா உங்களுக்கு அது தெரிந்தது?

    அடிதாங்கி பாப்பான்களின் அதே வேலையைத்தான் நீங்களும் செய்கிறீர்களோ?.

    //வேதனை என்னன்னாக்க, தொழிலை சரியாக செய்யாமல்,தமிழ் மலத்தை திராவிட,,நக்சல,இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகளோட கூடாரமா ஆக்கிட்டங்க நம்ம அரவிந்தன் அய்யா சொன்னாப்போல.//

    பொது இடத்தை மலம் கழித்து நாற்றமடிக்க வைத்த அரவிந்தக் கொய்யாக்களைக் கையில் தடியெடுத்து அடித்து விரட்டி அவ்விடத்தைத் துப்புரவாக்கியதால் எழுந்த ஆற்றாமை.

    போகட்டும் அப்படி மூலையில் இருந்து புலம்பிக் கொண்டே இருக்கட்டும். விட்டு விடுங்கள் பாலா. பெயரைக் கேட்டவுடனேயே நாற்றமடிக்கிறது!

    இறை நேசன்

  35. மயிலாப்பூர் மாமா

    சரவணக்குமார் என்ற பெயரில் ஒரு பாப்பான் வந்து உங்கள் எல்லோரையும் திட்டி பதிவு இருக்கான். இந்த பாப்பான் பண்ணாடை கிச்சு மாமா அண்ட் கோ வின் அல்லக் கையாக செயல்படும் கூட்டத்தை சேர்ந்தவன். அவனுங்க எல்லோரும் எழில் என்ற பெயரில் கட் அண்ட் பேஸ்ட் செய்து, இந்துக்களுக்கு இருமல் வந்தால் இஸ்லாம் தீவிரவாதிகளின் ‘சளி’ என்று எழுதுகிறான். கால்கரி சிவா என்கிற பண்ணாடையும் வஜ்ரா என்ற பாப்பானும் தான் சரவண குமாராக வேசம் கட்டி இருக்கானுங்க. நேற்று எழுதிய நான்கு பதிவும் வஜ்ரா எழுதியது. பிரியாணி தின்பதற்கு ஆசைப்பட்டு அது கிடைக்கததால் துலுக்கன் **திரத்தை குடிக்க அலையுறானுங்க

  36. வவ்வால்

    //சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது.//

    //மொகலாயர் ஒருங்கிணைத்த இந்தியா பூகோல ரீதியில் துண்டாடப்படுவதை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல் மதரீதியில் துண்டாடுவதும் ஏற்க முடியாத ஒன்று.//

    மேலும் எந்த வித சம்பந்தா சம்பந்தமும் இல்லாமல் சொன்ன ஒன்று,

    //தனித்தமிழ்நாடு தேச துரோகம் என்றால் இந்தியா இந்துக்களுக்கு என்பதும் தேசதுரோகமே.//

    இறைநேசன்,

    நீங்க என்னமோ உங்களுக்கு மட்டும் திட்ட தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிங்களா, திட்டுறதுல எல்லாம் நீங்க வெறும் கொழந்த…நான் ஆரம்பிச்சா தாங்க மாட்டிங்க.

    முதலில் நீங்க யாரு… நான் பேசுவதில் குறுக்கே ஏன் வரிங்க.

    நான் சொன்னதில் சிரைத்தல் என்பதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தொங்காமல், நல்லடியார் பிதற்றியதையும் பார்க்கணும்.

    அவர் சொன்னவற்றை மேலே மீண்டும் காபி பேஸ்ட் செய்துள்ளேன், அவற்றையும் திரும்ப பெற சொல்லுங்கள், அப்படி இல்லை எனில் நீங்கள் எல்லாம் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் இறையாணமைக்கு எதிரானவர்கள் ,திராவினர்களை கொச்சைப்படுத்துபவர் என்று நானும் தீர்ப்பு வழங்குவேன்.

    உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா இப்படிலாம் முத்திரைக்குத்த.

    இறைநேசன் நரிக்கு நாட்டாமை கிடைத்தது போல குறுக்க புகுந்து குட்டையை குழப்ப பார்த்தா… திருப்பி கொடுப்பேன் அப்புறம் தாங்க மாட்டிங்க.இதைப்பணிவுன் சொல்லிக்கொள்கிறேன்.

  37. தி.ராஸ்கோலு

    வவ்வால்,

    நான் கேட்டதைத் திசை திருப்பாமல் முதலில் சிரைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் தாருங்கள்.

    இல்லையேல் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கேளுங்கள்.

  38. வவ்வால்

    தி.ராஸ்கோலு,

    வாய்யா உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்,இவ்வளௌ நேரம் எங்கே காணோம்? ஆமாம் இந்த பதிவில் சொன்ன கருத்துக்களுக்கு உங்கள் சம்மதத்தோடு வந்த ஒன்றா , நீங்கள் சொல்லித்தான் இப்படிப்பதிவு போட்டு இருக்காங்களா, அப்படினா நீங்க மன்னிப்புக்கேட்க சொன்னா அர்த்தம் இருக்கு.

    நீரே வழிப்போக்கன் கணக்கா எட்டிப்பார்த்து எதாவது சொன்னா? எப்படி. நான் பேசுவது பதிவைப்போட்ட நல்லடியாரிடம், அப்படி நீங்களும் இதில் கலந்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் என் மீது முத்திரைக்குத்த முயலாமல் சொல்ல வந்ததை சொல்லி அந்த வார்த்தை ஆட்சேபகரமானது என்று சொல்லி இருக்கணும்.

    ஏற்கனவே ஒருவருக்கு சொன்னது தான் பதிவில் வரலாற்றுத்திரிபு இருக்கு அதை மாத்த சொல்லாமா ஏன் இப்படினு நான் சொன்ன ஒத்தை வார்த்தை பிடித்து தொங்கினால் அது உங்க விருப்பம் ,ஆயுசுக்கும் தொங்கிட்டே தான் இருப்பிங்க :-))

    இனிமேல் இங்கே வந்து கேள்விக்கேட்பவர்களுக்கு பதில் அளிக்கப்போவது இல்லை. அந்த வரலாற்று திரிப்புக்கு விளக்கம் அளித்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

  39. இறை நேசன்

    //நீங்க என்னமோ உங்களுக்கு மட்டும் திட்ட தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிங்களா, திட்டுறதுல எல்லாம் நீங்க வெறும் கொழந்த…நான் ஆரம்பிச்சா தாங்க மாட்டிங்க.

    ஓ, அப்ப நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?. நீங்க ஆரம்புச்சிட்டீங்கன்னு நெனச்சுத்தான் நான் களத்துக்கே வந்தேன். அப்படின்னா, “சிரைக்கப்போகலாம்” அப்படீன்னுறது புகழ்றதா?

    அப்புறம் நான் தாங்குறது தாங்காததெல்லாம் பின்னாடி பாக்கலாம். இன்னும் ஆரம்பிக்கலன்னு சொன்னீகளே. எங்கே ஆரம்பிக்கப் பாக்கலாம்.

    //முதலில் நீங்க யாரு… நான் பேசுவதில் குறுக்கே ஏன் வரிங்க.

    இதே கேள்விய நீங்க இந்தப் பதிவுல கமெண்ட் போட்டத வச்சு திருப்பிக் கேக்கலாம். நல்லடியார் ஏதோ அவருக்குத் தெரிஞ்சது தெரியாதது பத்தி எழுதிட்டுப் போறார். நீங்க யாரு குறுக்க வர?. சரி அப்படியே வந்தீகளா, அவரோட எழுத்துக்கு நேரா நேர்மயா விமர்சனத்த வச்சுக்கிட்டு போக வேண்டியது தானே?.

    எதுக்குச் சம்பந்தமே இல்லாம தமிழ்மண நிர்வாகிகளத் திட்டணும்?. என்ன திட்டினாலும் அங்கயிருந்து எதுவுமே திருப்பிக் கிடைக்காதுங்குற தைரியமா?

    //நான் சொன்னதில் சிரைத்தல் என்பதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தொங்காமல், நல்லடியார் பிதற்றியதையும் பார்க்கணும்.//

    அய்யா, வவ்வாலு நீங்க என்ன நல்லடியார் எழுதிய அத்தனையையுமா பாத்து விமர்சனம் வச்சிருக்கீங்க?. ஒங்களுக்கு எதிர் கருத்து ஒள்ளதுல மட்டும் தானே?. அதப் போலத் தான் இதுவும். ஒங்க கருத்துல எது எனக்குத் தப்புன்னு பட்டதோ அத எதுத்து தான் வச்சிருக்கேன். அது தப்புன்னா, நீங்க இங்க கருத்து வச்சிருக்கறதும் தப்பு தானுங்களே?.

    //அவர் சொன்னவற்றை மேலே மீண்டும் காபி பேஸ்ட் செய்துள்ளேன், அவற்றையும் திரும்ப பெற சொல்லுங்கள்,//

    அது ஒங்களுக்கும் அவருக்கும் இடையிலான விவாதம். நமக்கிடையில ஒள்ளதப் பத்தி மட்டும் நாம பாப்பமே.

    //அப்படி இல்லை எனில் நீங்கள் எல்லாம் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் இறையாணமைக்கு எதிரானவர்கள் ,திராவினர்களை கொச்சைப்படுத்துபவர் என்று நானும் தீர்ப்பு வழங்குவேன்.//

    ஓ, தாராளமா! இதுக்கெல்லாம் நாம அசந்துட மாட்டோம்.

    ஆனா ஒரு கண்டிசன். அந்தக் கொடுக்குற தீர்ப்பு ஏத்துக்கும்படியா இருக்கணும். இன்னின்ன காரணத்தாலன்னு பட்டியல் போட்டு குடுங்க. தாராளமா ஏத்துக்கறேன்.

    அப்புறம் இன்னொரு வெசயம்.

    ஒங்களுக்கு கஸ்டமில்லாம இருக்கணுமிங்கறதுக்காக….,

    நானு இஸ்லாமிய அடிப்படைவாதி தான். தீவிரவாதி தான்னு ஏற்கெனவே பலமொற ஒத்துக்கிட்டாச்சு. வேற என்னா வேணும்?.(வந்தேறி பார்ப்பனப் பன்னாடைகள்ட்டயும் அதுகளுக்கு கும்புடு போட்டுட்டு சிசுக்களோட ரத்தத்தக் கூட விட்டு வைக்காம குடிக்கறதுக்காக அலையுற வெறிப்பிடித்த சங்க கூட்டத்துக்கிட்டயும் அதுகள் செய்யுறது எல்லாம் சரி தான்னு காவடி தூக்கி அலையுற இணைய மாமாக்கள்கிட்டயும் வாணுமின்னா கேட்டுப் பாரும்).

    //உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா இப்படிலாம் முத்திரைக்குத்த.//

    நா கேட்டதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லிட்டு இதக் கேளும். அது நியாயம்.

    //இறைநேசன் நரிக்கு நாட்டாமை கிடைத்தது போல குறுக்க புகுந்து குட்டையை குழப்ப பார்த்தா… திருப்பி கொடுப்பேன் அப்புறம் தாங்க மாட்டிங்க.//

    நா தாங்கறனா இல்லையாங்கறத நீங்க ஆரம்பிக்க முன்னாடியே தீர்மானிச்சிட்டா எப்படி?. இங்க திருப்பிக் கொடுப்பது யாருங்கறது ஆரம்பத்துலருந்துள்ள பின்னூட்டங்களப் படிச்சுப் பாத்தா தெரியும். இங்க திட்டறத நா ஆரம்பிக்கல சாமியோவ்.

    //இதைப்பணிவுன் சொல்லிக்கொள்கிறேன்.//

    நமுக்கு பணிவெல்லாம் கெடயாதுங்ணாவ்.

    அப்புறம் நா மொத
    ல்ல கேட்டத மறந்துட வாணாம்.

    “என்ன அர்த்தத்துல சிரைக்கப் போலாமுன்னு சொன்னீங்க?” – பதில சொல்லுங்க. சிரைத்தல் என்ன மோசமானதா?. கோயிலில் மணியாட்டப்போலாமுன்னு சொல்லியிருக்கலாமுல்லியோ?.

    இறை நேசன்

  40. அட்றா சக்கை

    வவ்வால்,

    //மன்னிக்கவும்,இந்த வலைப்பதிவில் உள்ள சிறு தவறினால் நான் தி.ராஸ்கோலு என்பவர் சொன்னதை நீங்கள் சொன்னதாக நினைத்து சொல்லிவிட்டேன்.//

    உங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொண்டேன். டெம்ப்ளேட் எப்படி இருந்தாலும், இனியாவது யாருக்கு பதில் சொல்கிறோம் என நிதானமாகப் பார்த்துப் பதில் எழுதுங்கள்.

  41. வவ்வால்

    //இதே கேள்விய நீங்க இந்தப் பதிவுல கமெண்ட் போட்டத வச்சு திருப்பிக் கேக்கலாம். நல்லடியார் ஏதோ அவருக்குத் தெரிஞ்சது தெரியாதது பத்தி எழுதிட்டுப் போறார். நீங்க யாரு குறுக்க வர?. சரி அப்படியே வந்தீகளா, அவரோட எழுத்துக்கு நேரா நேர்மயா விமர்சனத்த வச்சுக்கிட்டு போக வேண்டியது தானே?.//

    யாருப்பா அது குறை நேசன் ச்சே இறை நேசன்!

    ஒரு பதிவர் , படிவு போட்டா அதுல யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் போடலாம், அவருக்கு அப்படி வாசிப்பவரின் மறுமொழியே தேவை இல்லை எனில், பின்னூட்ட வசதி எடுத்து விடலாம். எனவே எப்போது ஒருவர் பதிவு போடுகிறாராரோ அப்போதே ஒருவர் பின்னூட்டம் போட்டு கேள்விக்கேட்கலாம். அதே சமயம் அங்கே வரும் பின்னூட்டத்தில் யாருக்கு கேள்விக்கேட்கப்பட்டதோ அவர்கள் பதில் சொல்வது தான் சரி, இப்போ நீங்க பதில் சொல்ல வருவதால் , ஒன்று நீங்கள் நல்லடியாராக இருக்க வேண்டும் , அல்லது தமிழ்மணத்தை சொல்லிவிட்டேன் என்று வருவதால் தமிழ் மண நிர்வாகியாக இருக்க வேண்டும்.

    தமிழ்மணத்தைப்பார்த்து எப்படிக்கேட்கலாம் என்று ஒரு விஸ்வாசத்தில் கேட்பவராக இருக்கலாம், ஆனால் , தமிழ்மண கொள்கைகளுக்கு எதிராக செயல்ப்பட்டு . அதிகம் சேறடித்தவர் நீங்கள் என்பது எனக்கும் தெரியும்!

    இரண்டில் நீங்கள் யார் என்று சொன்னால் நானும் அதுக்கு ஏற்றார்ப்போல பேச வசதியாக இருக்கும்.

    நான் மொட்டையாக கேட்கவில்லை, நல்லடியாரை கேட்டுள்ளேன் அவரது பதில் என்ன என்று தெரிந்துக்கொள்வது எனது முதல் விருப்பம், அவரால பதில் சொல்ல முடியாது, தெரியாது ,நீங்களாக ஓடி வந்து சொல்வீர்கள் எனில் சொல்லுங்கள்.உங்க வரலாற்று அறிவு எம்மாத்திரம் என்பதையும் பார்த்துடுவோம்!

    முகலாயார்கள் எந்த இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள், அவர்கள் ஒருங்கிணைத்த இந்தியாவை துண்டாடுவதை பொறுக்க முடியாது எனில் , பாகிஸ்தானை பிரித்தது யார்? அப்போதும் முகலாயர்கள் ஒருங்கிணைத்த இந்தியாவை துண்டாடக்கூடாது என்று இவர் சொன்னாரா ,அதை ஜின்னா கேட்க வில்லையா? என்னையா காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?
    தனி மாநிலம் கேட்பதை தேச துரோகம் என்று சொன்னார்கள் என்கிறார் எப்போ அப்படி சொன்னாங்கனு சொல்லுங்கனா ,போய் பதுங்கிக்கொள்கிறார்?

    அதுக்கு பதிலா ஒரு பினாமி வரார் எதுக்குலாம் பினாமி வச்சுக்கிறதுனு விவஸ்தை இல்லையா?

  42. நல்லடியார்

    வவ்வால்,

    மொகலாயப் பேரரசர்களில் அவுரங்கஸேப்பின் ஆட்சியில் தற்போதைய தமிழகத்தின் வடபகுதிகளும் உள்ளடங்கும். இது உண்மையல்ல என்றால் தகுந்த வரலாற்றுச் சான்றுகளுடன் மறுப்பதை விடுத்து, சக பதிவர்கள் மீது வசை பாடாமல் கீழ்கண்டவற்றிற்கும் நேரடியாகப் பதில் சொல்லவும்.

    1) ஸஹீருத்தீன் பாபரை டெல்லிக்குப் போரிட்டு வரும்படி அழைத்த போது ‘இந்தியா’ என்ற பெயரில் தேசம் இருந்ததா?அதன் எல்லைகள் எவை?

    2) ஆட்சியாளர்களுக்கு முக்கியமான நிதி,நீதித்துறைகளில் வழக்கிலுள்ள சொல்லாடல்களும் அதன் முறைகளும் மொகலாயருக்குப் பிறகு ஆங்கிலேயர் ஏறத்தாழ இருநூறு வருடங்கள் ஆண்ட பின்னரும், அவர்கள் சென்று அறுபது வருடங்கள் கழிந்த பின்னரும்கூட அதேபெயரில் நடைமுறையில் உள்ளன.

    3) இந்தியாவை ஆங்கிலேயர்கள்தான் ஒருங்கிணைத்தார்கள் என்பது உமது எஜமான விசுவாசம் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை; அக்கூற்றில் உண்மை இருந்தால்,இருநூறு வருடங்கள் ஆண்டபின்னரும் கூட ஏன் மொகலாய சொல்லாடல்கள் கடைகோடி “பஞ்சாயத்து”க்களிலும் ‘அமல்’ படுத்தப்பட வேண்டும்?

    4) ஒருங்கிணைக்கப்படாத தேசத்திற்கு சில பகுதிகளில் மட்டும் அறியப்பட்ட (பார்ஸி,அரபு) சொல்லாடல்கள் வழக்கிழந்து போயிருக்க வேண்டுமே?

    /தனி நாடு கிடைக்காத ஆசையைத்தான் தனி மாநிலம் கிடத்தப்போதும் “தமிழ் நாடு” என்று “நாடு” என வருமாறு தீர்த்துக்கொண்டார்கள்//

    தமிழ்நாட்டிற்கு இன்னொரு பெயர் தமிழகம் என்பது தெரியும். ஒரு மாநிலப் பெயருடன் ‘நாடு’ என்று சேர்த்துச் சொன்னால் அது தனிநாடாகி விடுமா?

    சேர,சோழ,பான்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட எல்லைகளை அவரவர்களின் பெயரில் சேரநாடு,சோழநாடு,பான்டிய நாடு என்று சங்கத்தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.முத்தமிழ் மன்னர்களும் வெறியினால்தான் தங்கள் பகுதிகளுக்கு அவ்வாறு வைத்துக் கொண்டார்களா?

    மத்தியப் பிரதேசம்,ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் என்பவை இந்திய மாநிலங்களின் பெயர்கள்.நாடு – என்பதற்கு இணையானதே பிரதேசம் என்பதும்.

    இன்றும் அவற்றுடன் ‘பிரதேஸ்’ என்று ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களின் ‘ஆசை/வெறி’ என்று கொள்ளலாமா?

    சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர் வசம் இல்லாமல் சமஸ்தானங்களாக இருந்தவை பெரும்பாலும் நவாப் மற்றும் நிஜாம்களின் பகுதிகள். அகண்ட பாரத வெறியினால்தான் நேபாளம்,பூடான், திபெத் தவிர்த்து மற்ற பகுதிகளை மட்டும் சுதந்திர இந்தியாவுடன் இணைத்ததும்.

    பாகிஸ்தான் பிரிவினையால் இழந்தது விசுவாசமாக இந்தியராகவே இருந்து விட்ட நாங்கள்தான்.ஒருவேளை பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்டிருக்கா விட்டால் சொற்ப சதவீத இடஒதுக்கீட்டை 2% சதவீதம் உள்ளவர்களிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

    பாகிஸ்தான் பிரிவினை அன்றைய மக்கள் தலைவர்களின் அரசியல் மோசடி.

    அப்புறம் தொடர்பில்லாத கேள்வி “அகண்ட பாரதக் கனவில், சீனாவிடம் கோட்டை விட்ட திபெத் எல்லைகளைகளையும் சிவன் வீற்றிருக்கும் கைலாஸ் மானசரோவரையும் இணைக்கும் எண்ணம் உள்ளதா?

    நன்றி!

  43. வவ்வால்

    நல்லடியார்,

    சிலரின் பேச்சு வழக்குகள் புழக்கத்தில் இருப்பதலாயே அவர்கள் ஒருங்கிணைத்தார்கள் என்று பேசுவதெல்லாம் மிகையான ஒன்று, இந்தியாவில் பிரஞ்சு, போர்ச்சுகீஸ், லத்தின் , சொற்களும் , சமஸ்கிருதமும் தான் நிர்வாகத்தில் அதிகம் பயன்படுகிறது. எனவே அவர்களும் இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள் என்று சொல்வீர்களா, உங்களுக்கு அந்த மொழிச்சொற்கள் எவை என்று தெரியாததால் வித்தியாசம் தெரியவில்லை.

    முகலாயர்கள் செய்தது என்ன என்று கூட புரியவில்லை.
    அவர்கள் படை எடுத்து வருவார்கள், அந்த குறுநில மன்னர், அவருக்கு கட்டுப்பட்டு போர் செலவு,மற்றும் வருடாந்திர கப்பமும் செலுத்த ஒப்புக்கொள்வார், அவரே தொடர்ந்து அங்கே மன்னராக இருப்பார்.

    ஆனால் வெள்ளைக்காரர்கள் கப்பம் மட்டும் வசூலிக்காமல் , நேரடியாக வரி வசூப்பிலும் ஈடுபட்டார்கள்.தங்கள் படைப்பிரிவை ஒவ்வொரு குறுநில மன்னன் நாட்டிலும் நிறுத்தி வைத்தார்கள்.

    மேலும் வாரிசு இல்லாமல் மன்னன் இறந்தால் அந்த நாட்டை நேரடி வெள்ளை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.

    இந்த வித்தியாசம் கூட தெரியாமல் பேச வந்துட்டிங்களே.

    நீங்கள் சொல்வதை பார்த்தால் அஷோகரே முதலில் இந்தியாவை ஒருங்கிணைத்தார். என்ன அவர் இறப்புக்கு பின்னர், மற்ற மன்னர்கள் வந்துட்டாங்க.

    அப்படித்தான் அவுரங்க சீப்பின் இறப்புக்கு பின் ஆங்காங்கே இருந்த குறுநில மன்னர்கள் சுய ஆட்சி என்று பிரகடணம் செய்து ஆள ஆரம்பித்தார்கள். ஆனால் வெள்ளியர்களுக்கு பிறகு எல்லாம் அப்படி ஆகவே இல்லை.

    சரி விடுங்கள் வரலாறு என்னவென்று தெரியாத உங்களை ஏற்றுக்கொள்ள செய்ய வைப்பது என் வேலை அல்ல.

    //தமிழ்நாட்டிற்கு இன்னொரு பெயர் தமிழகம் என்பது தெரியும். ஒரு மாநிலப் பெயருடன் ‘நாடு’ என்று சேர்த்துச் சொன்னால் அது தனிநாடாகி விடுமா?//

    இந்த கேள்வி உங்களைப்பார்த்து நான் கேட்பது. நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மாநிலம் கேட்பது தேசத்துரோகம் என்று பேசியதால்! இதிலிருந்தே தெரியுது உங்களின் புரிதலின் ஆழம்! :-))

    அதை விட சேர, சோழ, பாண்டிய நாடு என்பது அப்போது எல்லாம் அவை தனிநாடுகளே.

    அப்படி இருக்கும் போது நாடு என்பதால் அவை நாடாகி விடுமா என்று கேட்பது …உங்களை சொல்லி குற்றமில்லை… உங்களுக்கு தெரிந்த வரலாறு அவ்வளவு தான் :-))

    நீங்கள் முகலாயர்கள் இணைத்த(அப்படி ஒன்று இருந்தா)இந்தியா அப்படியே இருக்கனும்னு ஆசைப்பட்டா அதை எல்லாம் இணைத்து விடலாம் :-))

    நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு.இதோடு என் வேலையைப்பார்க்க நடையைக்கட்டுகிறேன். இனிமே நீங்களாச்சு் உங்கள் கற்பனைக்கதையாச்சு. ஏன் எனில் உங்கள் அடிப்படைவாதக்கொள்கைகளை எல்லாம் லேசில் மாற்ற முடியாது. பிழை என்னவென்று சுட்டிக்காட்டியாச்சு. படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

  44. தி.ராஸ்கோலு

    வவ்வாலு,

    நல்லடியாரின் வரலாற்று அறிவைச் சோதிப்பது இருக்கட்டும். நீங்கள் சொன்ன ‘சிரைத்தல்’ என்ற வார்த்தையில் வெளியாகும் பார்ப்பனியத் திமிர் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது.

    உண்மையிலேயே நீங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர் என்றால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கேளுங்கள், இல்லாமல் இன்னும் ஜல்லி தான் அடிப்பீர்கள் என்றால் உங்களின் வேஷம் கலைத்த மகிழ்ச்சி உண்டு எனக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *