Featured Posts
Home » பொதுவானவை » வாழ்க வெறும் தீவிரவாதம்!

வாழ்க வெறும் தீவிரவாதம்!

* குர்ஆன் வன்முறையத் தூண்டுகிறது

* சுவர்க்கத்தில் பெருமுலைக் கன்னியர்கள் கிடைப்பர் என்ற ஆசையில்தான் காஃபீர்கள்மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்

* இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று சொல்கிறார்கள்;ஆனால் இஸ்லாமிய நாடுகளில்தான் (பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான்….) அமைதியின்மை நிலவுகிறது.

* பாலஸ்தீன தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது அநியாயமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள்.

* காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகக் குண்டு வைக்கிறார்கள்

*

*

*

நிற்க!

இஸ்லாமியத் தீவிரவாதம், குண்டுவெடிப்பு, ஜிஹாத் ஆகியவற்றுக்கு ஊடகங்கள் தந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் மேற்சொன்னவை. இவற்றையெல்லாம் கண்டு, கேட்டு, கேள்விப்பட்டு, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உங்களுக்குக் கொஞ்சமேனும் வெறுப்பு ஏற்பட்டிருக்கா விட்டால் உலகஅறிவில் நீங்கள் பின்தங்கியிருக்கிறீர்கள் அல்லது நாட்டு நடப்புகளில் ஆர்வமில்லாதவர் என்று பொருள்!

பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியில் தனக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சீனாவிற்கு ஆப்படிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு திபெத்தியர்களின் போராட்டம் திருப்பதி லட்டு மாதிரி கிடைத்துள்ளது.

தலாய் லாமாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சீனாவின் திமிரை அடக்கி வைக்கலாம் என்று அமெரிக்கா காய் நகர்த்துகிறது. சீன எதிர்ப்பு திபெத் போராட்டங்களை அமெரிக்கா ஆதரிப்பதன் பின்னணி திபெத்தியர்களின் விரலால் சீனாவின் கண்ணைக் குத்தலாம் என்ற ஆசை! பாலஸ்தீனர்களின் போராட்டத்தையும் ஆதரித்து, இஸ்ரேலின் கண்ணையும் குத்தலாமே! ஆசை..தோசை..அப்பளம்……அமெரிக்கா! :-)))

பாலஸ்தீனத்திலும் இராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் முஸ்லிம்கள் தம் சொந்த நாட்டில் சுதந்தரத்துடன் வாழும் உரிமைகளுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடினால் அது இஸ்லாமியத் தீவிரவாதமாம்! அதையே மற்றவர்கள் செய்தால், வெறும் தீவிரவாதமாம்! நல்லா இருக்குதய்யா நியாயம்!

வாழ்க வெறும் தீவிரவாதம்! ஒழிக இஸ்லாமியத் தீவிரவாதம்!!

2 comments

  1. சுல்தான்

    வாழ்க வெறும் தீவிரவாதம்! ஒழிக இஸ்லாமியத் தீவிரவாதம்!!
    வாழ்க வெறும் தீவிரவாதம்! ஒழிக இஸ்லாமியத் தீவிரவாதம்!!
    :)))

  2. அது தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *