Featured Posts
Home » பொதுவானவை » இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்!

இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்!

சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழைய புள்ளி விபரங்களைப் பார்த்து விட்டு மேற்கொண்டு புகழ்பாடலாம்!

கடந்த செப்டம்பர்-2000 முதல் ஜனவரி-2003 வரை பள்ளி மாணவ மாணவிகளின் மீதான இஸ்ரேலின் அக்கிரமங்கள்:

166 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
1289 பாலஸ்தீன பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
197 பள்ளிகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
11 பள்ளிகள் முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.
9 பள்ளிகள் குறிவைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன.
25 பள்ளிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் சோதனைச் சாவடியாகவும் இராணுவ முகாம்களாகவும்

ஆக்கப்பட்டுள்ளன.
185 பள்ளிகள் இஸ்ரேலிய வாந்தக்குதல்களால் சிதிலமடைந்துள்ளன.

(Sources: Defense for Children International and The Health, Development, Information and Policy Institute)

கடந்த செப்டம்பர்-2000 முதல்:

600 க்கும் மேற்பட்ட தடவைகள் பாலஸ்தீன ரெட்கிரஸண்ட் ஆம்புலன்ஸ்கள் மருத்துவ உதவி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ அனைத்து ஆம்புலன்ஸ் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பலவந்தமாக கீழிறக்கப்பட்டும் அடித்தும் பல மணி நேரங்கள் முதலுதவி செய்ய தடுக்கப்பட்டுள்ளனர்.

15 மருத்துவ அதிகாரிகள் பணி செய்து விட்டு திரும்போது கொல்லப் பட்டுள்ளனர்.

275 செம்பிரை மற்றும் பிற மருத்துவர்கள் காயம் பட்டுள்ளனர்.

254 மருத்துவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் அடிக்கப்பட்டுள்ளனர்.

197 செம்பிரை ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டு கிட்டத்த 80%க்கும் மேல் பயன் படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

25 ஆம்புலன்ஸ்கள் முழுவதும் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

70 பேர் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி செய்த போது இஸ்ரேலிய ராணுவம் தடுக்கும் போது நடந்த கைகலப்பில் கொல்லப்பட்டவர்களாவர்.

39 குழந்தைகள் சோதனைச் சாவடிகளின் வாசலில் பிரசவிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டது.

Source: Palestinian Red Crescent Society and UPMRC

28 செப்டம்பர் 2000 முதல் 20 ஆகஸ்டு 2002 வரை:

2639 கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

36,349 தனியார் குடியிருப்புகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
96,100 பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

(source: Ministry of Public Works and Housing)

இவற்றின் மூலம் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு 665 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (source: US Agency for International Development)

30 மசூதிகளும் 12 கிறிஸ்தவ தேவாலயங்களும் சேதப்படுத்தப் பட்டுள்ளன. (source: Palestinian Council for Peace and Justice).

இவையன்றி பாலஸ்தீனப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேலிலிருந்து கொண்டு வந்து கொள்ளை இலாபத்தில் விற்க அனுமதியுண்டு. அதே சமயம் பாலஸ்தீன தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்களை பாலஸ்தீனத்திற்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேற்குக்கரைப் பகுதியில் வேலையின்மை 51.3% காஸாப் பகுதியில் 71.7%. கடந்த செப்டம்பர் 2000 முதல் இஸ்ரேலில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 80,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வேலைகளை இழந்துள்ளனர். அக்கிரமிப்புப் பகுதிகளில் சுமார் 60,000 க்கும் மேல் வேலை இழப்பு. 75% சதவீத பாலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

(Source: Palestinian Central Bureau of Statistics)

நன்றி

19 comments

  1. நல்ல பதிவு, இப்பொழுதெல்லாம் நம் நாட்டிலுள்ளள ஒரு சில ஊடகங்கள் தவிர மற்ற அனைத்துமே அமெரிக்க அடிவருடிகளாகவே மாறிவிட்டன, இதில் இன்னும் கொடுமை அமெரிக்காவுடன் சேர்ந்துக்கொண்டு இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மிருகத்தனமாக நடத்தும் தாக்குதல்களைக்கூட கண்டுக்கொள்ளாததுடன், திட்டமிட்டே ஊடகங்களில் இருட்டடிப்பு செய்வது தான்.

    அன்புடன்
    தமிழ்ச்செல்வன்

  2. நல்லடியார்

    தமிழ்செல்வன்,

    மேற்கண்ட புள்ளி விபரங்களில் சொல்லப்பட்டவை மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தவை. ஏரியல் ஷரோன் என்ற அரக்கனின் வெறித்தனத்தால் அதன் பின்னர் நடந்த கொடூரங்களையும் தேடி எழுதினால் வேதனைதான் மிஞ்சும்.

  3. dondu(#4800161)

    “சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டனத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர்.”

    தவறு. இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இஸ்ரேலிய கான்ஸ்லேட் முதலிலிருந்தே செயல்பட்டு வந்திருக்கிறது. என்ன, நேரு அப்புறம் முஸ்லிம் ஓட்டுக்காக ஜகா வாங்கினார், ஆயினும் அங்கீகாரத்தை வாபஸ் பெறவில்லை.

    இடதுசாரி கட்சிகளால் ஆராதிக்கப்பட்ட சோவியத் யூனியன் முதல் முதலாக சட்ட அங்கீகாரத்தை கொடுத்தது (de jure recognition). அமெரிக்காவே de facto அங்கீகாரம்தான் கொடுத்தது.

    பாலஸ்தீனத்தை இரண்டாக்கிய தீர்மானம் முறைப்படி ஐ.நா.வில் மூன்றிற்கு இரண்டு கணக்கில் நிறைவேற்றப்பட்டது. தனக்கு கொடுத்த நாட்டை வைத்துக் கொண்டு இஸ்ரேல் முதல் நாளிலிருந்தே செயல்பட ஆரம்பிக்க, அரபு தேசங்களால் திசை திருப்பப்பட்ட பாலஸ்தீனியர் இஸ்ரேலை ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டனர். யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததை நீங்கள் அறிவீர்களா? ஆனால் சுற்றியுள்ள் அரபு தேசங்கள் அவர்களுக்குத் தவறான வழி காட்டின. ஹிட்லர் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து விடப் போவதாக ஆசை காட்டின. அவர்களும் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றனர். 1948 யுத்தம் இஸ்ரேலியர் வெற்றியுடன் முடிவடைந்தது. அகதிகள் முகாம்களில் மாட்டிக் கொண்டனர். மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் குறி இஸ்ரேலே. எல்லா யூதர்களையும் கொன்று விடுவதே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்த கோஷம்.

    நிலைமை இவ்வாறிருக்க இஸ்ரேல் அகதிகளைத் திரும்ப உள்ளே விடும் என்று எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்? அறுபது லட்சம் மரணங்கள் போதாதா?

    ஒரு சிறு டைவர்ஷன். ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்” இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மாதிரி கொடுமைகளை தாங்கிக் கொண்ட யூதர்கள் இம்முறை எதிர்த்தனர், வெற்றி பெற்றனர்.

    பாலஸ்தீனியருக்கு கொடுத்த நாட்டை கபளீகரம் செய்தன ஜோர்டான் மற்றும் எகிப்து. சரித்திரத்தை சரியாகப் பார்த்து விட்டு பேசுங்கள்.

    இப்போது அங்கு நடப்பது தினசரி யுத்தம். நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு சுட்டிக்கும் என்னால் பத்து சுட்டிகளைக் காண்பிக்க இயலும். போட்டோக்களுக்கும் பஞ்சமில்லை.

    குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துள்ளதால் இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய இஸ்ரேல் பற்றியப் பதிவு ஒன்றிலும் போட்டு வைக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/5.html

    அன்புடன்,

  4. மிதக்கும் வெளி

    நல்ல பதிவு.குறிப்பாக ஷ்ங்கர்(அ)வஜ்ரா என்று நினைக்கிறேன்,இஸ்ரேல் குறித்து ஏகப்பட்ட புகழாரம்.படியுங்கள்.

  5. Muse (# 5279076)

    நல்லடியாரே,

    இதே போன்ற வேறு ஒரு புள்ளிவிவரங்களை இஸ்ரேல் சார்பிலிருந்தும் வரலாம். புள்ளிவிவரங்களின் பரிமாறலால் அமைதி விளைந்துவிடுமா?

    இந்த ப்ரச்சினை சம்பந்தமாக என்னுடைய கேள்விகள் பின்வருமாறு:
    (தயவுசெய்து நேரடியான பதில்களைத் தாருங்கள்)

    1. இதற்கு சரியான தீர்வு என்று நீங்கள் கருதுவது என்ன?

    2. ஐக்கியநாடுகள் சபையில் இஸ்ரேல் பலமுறை கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    2.அ. இஸ்ரேல் மட்டும்தான் இந்தக் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறதா?
    2.ஆ. பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்குக் கண்டனங்களே எழுந்ததில்லையா?
    2.இ. ஹமாஸை ஐக்கியநாடுகள் சபை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளதா? அறிவித்துள்ளதென்றால் ஏன்?

    3. யூதர்களை இஸ்ரேலிலிருந்து விரட்டுவது யார்? எதற்காக?

    4. யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது போல, இஸ்ரேலுக்கு ஆதரவாக எந்த பாலஸ்தீனரும் குரல் குடுப்பதில்லையே ஏன்?

    5. பாலஸ்தீனத்திற்கு முழுமனத்தோடு ஆயுத, பண மற்றும் பலவகைகளிலும் உதவி செய்யும் நாடுகளில் பெரும்பாலானவை ஏன் முஸ்லீம் நாடுகளாகவே உள்ளன?

    6. 1948-ல் 2/3 பெரும்பான்மையுடன் பாலஸ்தீனத்தை இரு பாகங்களாகப் பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. யூதர்கள் ஏற்றுக்கொண்டனர். பாலஸ்தீனர்கள் ஏன் இருநாடுகள் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை ?

    7. இரு பிரிவினரும் ஒரே மாதிரியான துன்பங்களையும், எதிர்ப்பையும் சந்திக்கும்போது இஸ்ரேல் மட்டும் எப்படி கலை, அறிவியல், மற்றும் பல்வேறு நல்வாழ்வு விஷயங்களிலும் முன்னேறியுள்ளது?

    8. இஸ்ரேலில் யூதர்களைத் தவிர, பத்து லட்சத்திச் சொச்சம் பாலஸ்தீனர்கள், அரபு மக்கள் இஸ்ரேலில் அதே கருத்துச் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அதேபோல பாலஸ்தீனத்தில் கருத்துச் சுதந்திரத்துடன் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை எத்தனை? அப்படி யாரும் அங்கே இல்லை என்றால் ஏன் இல்லை?

    10. இஸ்ரேலியர்கள், மற்றும் யூதர்களிடம் காணப்படும் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தால், எத்தகைய கருத்துக்களும் வரவேற்கப்படும்போது, பாலஸ்தீன மற்றும் அரபு தேசங்களில் ஏன் அதி தீவிர கட்டுப்பாடு மற்றும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு வெளியிடப்படும் பத்வாக்கள்?

    11. யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தபோதும், அவர்கள் ஏன் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றன?

    12. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் விரட்டிவிட்டுவிட்டதா?

    12.அ. அப்படியானால் பாலஸ்தீனர்கள் எந்த நிலத்தில் வாழ்கின்றனர்?
    12.ஆ. அவர்கள் வாழும் பரப்பு இஸ்ரேலைவிடப் பெரியதா, சிறியதா?

    13. இஸ்ரேல் விவசாயத்துறையில் உலகத்தின் முன்னோடியாக உள்ளதே. அதேபோல பாலஸ்தீனத்தின் விவசாய வளர்ச்சி எந்த அளவு உள்ளது?

    14. இந்த இரு நாடுகளின் ஜி டி பி என்ன? இரண்டிற்கும் நடுவிலுள்ள வித்தியாஸம் பெரியதாய் இருக்குமானால் அதற்கான காரணம் என்ன?

    15. இஸ்ரேலும் பாலஸ்தீனத்திற்கே போகவேண்டும் என்று வற்புறுத்துகிற அரபு தேசங்கள் பல இருக்கின்றனவே.

    15.அ. அவை பில்லியன் கணக்கில் ராணுவ உதவி அளிப்பதற்குப் பதிலாகத் தங்கள் நிலங்களில் “கொஞ்சூண்டை” அகதிகளாகவிருக்கும் தங்கள் சகோதரர்களுக்கு ஏன் கொடுக்க முன்வரவில்லை?

    15.அ. பாலஸ்தீனம் ஏன் இந்த அரபு நாடுகளை நம்பி வாழ்கின்றது?

    16. மனித வெடிகுண்டு, தற்கொலைப் படையை வெற்றிகரமாக்கிக் காட்டியதில் பாலஸ்தீனத்திற்கு இருக்கும் புகழ், ஏன் மற்ற விஷயங்களில் இல்லை?

    17. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனப் ப்ரச்சினையையும், காஷ்மீர் ப்ரச்ச

  6. Muse (# 5279076)

    21. மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் ஏன் இதுவரை காண்பிக்கவில்லை?

    22. யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதா?

  7. Muse (# 5279076)

    23. தங்களுடைய புள்ளி விவரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தின் கூற்றாக உள்ளன. ஐக்கிய நாடுகளின் சபையினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏதும் தங்களிடம் உள்ளதா?

    24. பாலஸ்தீனப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேலிலிருந்து கொண்டு வந்து கொள்ளை இலாபத்தில் விற்க அனுமதியுண்டு. அதே சமயம் பாலஸ்தீன தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்களை பாலஸ்தீனத்திற்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    24.அ. இஸ்ரேல் பொருட்களை பாலஸ்தீனத்திற்கு வாங்க வேண்டிய கட்டாயம்தான் என்ன?

    24.ஆ. இவ்வளவு வெறுப்பை உமிழும் பாலஸ்தீனம் ஏன் அந்த வியாபரத்தை (இஸ்ரேல் செய்தது போல) தடை செய்யவில்லை?

    24.இ. பாலஸ்தீன அரசியல்வாதிகளுக்கு இஸ்ரேலிய வியாபாரிகளிடமிருந்து கணிசமான லஞ்சம் கிடைப்பதே காரணமா?

  8. நல்லடியார்

    டோண்டு ராகவன்,

    //இப்போது அங்கு நடப்பது தினசரி யுத்தம். நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு சுட்டிக்கும் என்னால் பத்து
    சுட்டிகளைக் காண்பிக்க இயலும். போட்டோக்களுக்கும் பஞ்சமில்லை.//

    யுத்த களத்தில் சந்திக்கும் இருவரும் சமபலத்துடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான யுத்தகள தர்மம். (ஏவுகணைகள்,அணுகுண்டுகள் உள்ளிட்ட) நவீன போர்த் தளவாடங்கள், உலக சட்டாம்பிள்ளை அமெரிக்காவின் ஏகோபித்த ஆதரவு, ஊடகங்களின் ஓரவஞ்சனை இவற்றிற்கிடையில் இஸ்ரேலிய அரச பயங்கராவாதிகள் முன், மேற்கண்ட
    எதுவுமற்ற பாலஸ்தீனர்கள் செய்து கொண்டிருப்பது யுத்தமே அல்ல.

    போர்க்களத்திலும் சரி, போருக்குப் பின்னரும் சரி பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதை தடுக்கக்
    கூடாது என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டவை. இதை நான்காவது ஜெனீவா உடன்படிக்கையில் விதி 20 இன் படி அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் அத்தகைய ஐநாவின்
    வழிகாட்டல்களை குப்பையில் போட்ட பின்னரே பாலஸ்தீனர்களை அடக்குமுறைக்காளாக்கி வருகின்றது. மேலும் பார்க்க:

    http://www.nowarforisrael.com/articles/resolutions.html

    //இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இஸ்ரேலிய கான்ஸ்லேட் முதலிலிருந்தே செயல்பட்டு வந்திருக்கிறது. என்ன, நேரு அப்புறம் முஸ்லிம் ஓட்டுக்காக ஜகா வாங்கினார், ஆயினும் அங்கீகாரத்தை வாபஸ் பெறவில்லை. //

    சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே காந்தி, நேரு மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை ‘யூத நாடு’
    உருவாவதை எதிர்து வந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவின் பரிந்துரைப்படி பாலஸ்தீனை இரண்டாகப் பிரிப்பதை இந்தியா எதிர்த்தது. மேலும் 1949 இல் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலை அனுமதிப்பதையும் எதிர்த்தது. வரலாறு இவ்வாறிருக்க நேரு, பிரிவினையால் ஏற்கனவே பெரும்பாலான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் பிரிந்து சென்ற பிறகு ‘முஸ்லிம்களின் ஓட்டுக்காக ஜகா’ வாங்கினார் என்பது அபத்தமாகப் படுகிறது.

    சரி, நேருதான் முஸ்லிம்களின் ஓட்டிற்காக இஸ்ரேலை எதிர்த்தார், காந்திஜி என்ன எழவுக்காக எதிர்த்தார் என்று சொல்ல முடியுமா? (மலர்மன்னனிடம் கேட்டால், அதற்காகத்தான் கோட்சே காந்தியை சுட்டான் என்று சொன்னாலும் சொல்வார்)

    ஜூலை 31, 1971 இல் நடந்ததாகச் சொல்லும் ‘எல்லை தாண்டிய தீவிரவாதிகள்’ கதைப்போல் இன்னும் பல நகைச்சுவைக் கதைகளை ‘நான் ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன்’ எனச் சொல்லும் உங்கள் போன்ற, நகைச்சுவையாக எழுதும் மூத்த வலைப்பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். :-)

  9. நல்லடியார்

    ம்யூஸ்,

    கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்!

    பாலஸ்தீனத்திலிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களின் முதல் கிப்லா (தொழும் திசை), இறைவனால் அனுப்பப்பட்ட பெரும்பாலான நபிமார்கள் பாலஸ்தீனத்தை உள்ளடக்கிய புனிதப் பிரதேசத்திற்கே அனுப்பப்பட்டார்கள். குர்ஆனில் அதிகம் குறிப்பிடப்பட்ட சமூகம் இஸ்ரவேலர்கள். இவையே பாலஸ்தீனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு.

    அவ்வாறு அனுப்பப்பட்ட நபிமார்களில் பலரை அநியாயமாகக் கொலை செய்ததால் சபிக்கப்பட்டவர்களே
    யூதர்கள். மட்டுமின்றி எந்தவித உலக நியாயத்திற்கும் கட்டுப்படாமல் அராஜகமாக பாலஸ்தீனர்களை சொந்த
    நாட்டை விட்டு வெளியேற்றியதோடு எஞ்சி இருப்பவர்களை அடக்குமுறைக்காளாக்கி கொடுமைப் படுத்திவரும் ஆட்சியாளர்களைக் கொண்டுள்ளதால் முஸ்லிம்களின் வெருப்பிற்காளான தேசம் இஸ்ரேல். இவ்விரு காரணிகளிலிலும் நியாயம் இருப்பதாகக் கருதுவோருக்கு இஸ்ரேலை முஸ்லிம்கள் வெருப்பதிலிருக்கும் நியாயம் விளங்கும்.

    மேற்கண்ட எந்தக் காரணியுடனும் தொடர்பற்ற திரு.டோண்டு ராகவன் மற்றும் ம்யூஸ் ஆகிய உங்களின் இஸ்ரேலிய பாசம் அல்லது பாலஸ்தீன வெருப்பு ஏன்? என்றுதான் புரியவில்லை.

    //ஒன்றைத் தவறு என்று சொல்லும் போது அதன் தொடர்ச்சியாக வைக்கக் கூடியது மூன்று வகை வாதங்கள்.
    1. அது தவறு என்று ஒத்துக்கொள்வது. 2. அது தவறில்லை, சரி என்று கூறுவது. 3. விளைவுகள் தவறாகவோ,
    நன்மையாகவோ இருப்பது பற்றி ஆராயாமல், அந்த விளைவுகளை உண்டாக்கிய காரணங்களைப் பற்றி
    விளக்குவது.”// – June 21, 2006 3:50 AM, Muse (# 5279076)

    //2.அ. இஸ்ரேல் மட்டும்தான் இந்தக் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறதா? பாலஸ்தீனர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், காஷ்மீர் பண்டிட்களும்தான்!! …தான்…தான்….தான்…//

    இப்படி ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தும் நீங்கள், இப்போது சொல்லுங்கள்:

    1) குஜராத்திலும், பாலஸ்தீனத்திலும் முஸ்லிம்கள் அடக்குமுறைக்ககளுக்கு ஆளாக்கப்பட்டது ‘தவறு’ என்று ஒத்துக் கொள்ளும் முதல் வகையை சார்ந்தவரா? அல்லது 2) அவை தவறல்ல; சரியே என்று கூறும் இரண்டாம் வகையைச் சார்ந்தவரா? அல்லது 3) வினைகளைச் சாடாமல் விளைவுகளைச் சாடும் அல்லது விளைவுகள் தவறாகவோ, நன்மையாகவோ இருப்பது பற்றி ஆராயாமல், அந்த விளைவுகளை உண்டாக்கிய காரணங்களைப் பற்றி
    விளக்கும் மூன்றாம் வகையைச் சார்ந்தவரா?

    பாலஸ்தீனர்களின் அவலங்களைப் பட்டியல் போட்ட இப்பதிவில், பின்லேடன், இமாம்அலி, காஷ்மீர்
    பண்டிட்கள் ஏன் நுழைந்தார்கள்? இதனை உங்களின் பரந்த பார்வை என்பதா? அல்லது வாதத்தை திசை திருப்பும் ‘நீலகண்ட நிபுனத்துவம்’ என்பதா?

    மேலும் உங்களின் பல ‘ஏன்?’ களுக்கு என் முந்தைய பதிவுகளில் ஓரளவு பதில் இருக்கிறது. பார்க்க:

    http://athusari.blogspot.com/2006/01/blog-post_28.html
    http://athusari.blogspot.com/2006/02/blog-post_11.html

  10. dondu(#4800161)

    “யுத்த களத்தில் சந்திக்கும் இருவரும் சமபலத்துடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான யுத்தகள தர்மம். (ஏவுகணைகள்,அணுகுண்டுகள் உள்ளிட்ட) நவீன போர்த் தளவாடங்கள், உலக சட்டாம்பிள்ளை அமெரிக்காவின் ஏகோபித்த ஆதரவு, ஊடகங்களின் ஓரவஞ்சனை இவற்றிற்கிடையில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள் முன், மேற்கண்ட
    எதுவுமற்ற பாலஸ்தீனர்கள் செய்து கொண்டிருப்பது யுத்தமே அல்ல.”
    அப்படியா? 1948-ல் இஸ்ரேலை ஒழிக்க எண்ணிய சுற்றியிருந்த அத்தனை அரபு நாடுகளும் உதை வாங்கினவே? அப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்த நிலைதானா? கோலன் உயரங்களை இஸ்ரேல் பிடித்ததே 1967-ல் அப்போதும் அதேதானா?

    “ஜூலை 31, 1971 இல் நடந்ததாகச் சொல்லும் ‘எல்லை தாண்டிய தீவிரவாதிகள்’ கதைப்போல் இன்னும் பல நகைச்சுவைக் கதைகளை..”
    சமீபத்தில் 1971-ல் அந்த நிகழ்ச்சி பத்திரிகையில் வெளி வந்த போது எனக்கு வயது 25. அதை நேரடியாகப் படித்தவன் என்ற முறையில் அதை எழுதினேன். அதை கண்டிப்பாக நகைச்சுவை நிகழ்ச்சியாக அரேபியர்கள், பாலஸ்தீனியர்கள் ஆகியோர் அப்போதே பார்க்கவில்லை. அவர்கள் அவமானத்தால் தலை குனிந்தது நிஜம்.

    “பாலஸ்தீனியருக்கு கொடுத்த நாட்டை கபளீகரம் செய்தன ஜோர்டான் மற்றும் எகிப்து”
    இதற்கு என்ன பதில் உங்களிடம்? சமீபத்தில் 1982-ல் லெபனானிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டியிருந்தது. அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க எந்த அரேபிய தேசத்துக்கும் மனமில்லை, அவ்வளவு நோக அடித்திருந்தனர் உண்ட வீடுகளுக்கு இரண்டகம் நினைத்த அராஃபத் கும்பல். அப்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தார் இஸ்ரவேல பிரதமர் மெனாசெம் பெகின் அவர்கள். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டார். பி.எல்.ஓ. தன் போராட்டத்தை விட வேண்டுமென்று. அரேபியர்களுக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளும் நிலை. பிறகு வேண்டா வெறுப்பாக துனீஷியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இந்த செய்திகளையும் சம்பந்தப்பட்ட காலக் கட்டத்தில் படித்தவன் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  11. dondu(#4800161)

    மகாத்மா காந்தி அவர்கள் 1938-ல் கூறினார், யூதர்கள் ஹிட்லருக்கு எதிராக அகிம்சை யுத்தம் செய்ய வேண்டுமென்று.

    ஏதோ பிரிட்டிஷ்காரனிடம்தான் காந்திஜியின் அஹிம்ஸாவாதம் பலித்தது. ஹிட்லருக்கு எதிராக அவ்வாறு செய்திருந்தால் அவரை அவன் ஆஷ்விட்ச் அழிவு முகாமுக்கு ஒரு வழி டிக்கெட் எடுத்துக் கொடுத்தனுப்பியிருப்பான். அவ்வளவுதான் அந்த விஷயத்தைப் பற்றி அவருடைய அப்போதைய அறிவு.

    நேரு அவர்கள் கான்ஸுலேட் அங்கீகாரம் கொடுத்தது நிஜம். அவர் ஜகா வாங்கியதும் நான் சொன்ன காரணங்களுக்குத்தான். காந்தி என்னதான் சொன்னாலும் அரசில் இல்லை. அவர் சொல்வது அதிகார பூர்வமாகாது.

    அது சரி, இரண்டின் கீழ் மூன்று விகிதத்தில் பாலஸ்தீனை பங்கு போடும் நிறைவேறிய சரித்திர உண்மையை மறுக்கிறீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  12. நல்லடியார்

    //பாலஸ்தீனத்தை இரண்டாக்கிய தீர்மானம் முறைப்படி ஐ.நா.வில் மூன்றிற்கு இரண்டு கணக்கில் நிறைவேற்றப்பட்டது. //அது சரி, இரண்டின் கீழ் மூன்று விகிதத்தில் பாலஸ்தீனை பங்கு போடும் நிறைவேறிய சரித்திர உண்மையை மறுக்கிறீர்களா?//

    டோண்டு ராகவன்,

    மூன்றில் இரண்டு பங்கு என்று எதைச் சொல்கிறீர்கள்? 1947 நவம்பர் 27 ஆம் தேதி ஐ.நாவில் நிறைவேறிய தீர்மானம் எண் 181(II) இன் படி பாலஸ்தீனர்களுக்கு 45.53% மும் யூதர்களுக்கு 56.47% மும் பிரித்துக் கொடுப்பது என்ற சரித்திர உண்மையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்படி பாலஸ்தீனை துண்டாடுவதை அப்போதைய ஐநாவில் 56 நாடுகளில் 33 நாடுகள் ஆதரித்தன. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. கடைத்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பது இதுதான் போலும்!

    //”பாலஸ்தீனியருக்கு கொடுத்த நாட்டை கபளீகரம் செய்தன ஜோர்டான் மற்றும் எகிப்து” இதற்கு என்ன பதில் உங்களிடம்?//

    பாலஸ்தீனத்தை கபளீகரம் செய்ததில் இஸ்ரேலுக்கு இணையான பங்கு ஜோர்டானும் எகிப்துக்கும் உண்டு. ஆகையால் இஸ்ரேல் கபளீகரம் செய்தது நியாயம் என்றாகி விடாது.

  13. dondu(#4800161)

    மூன்றில் இரண்டு பங்கு என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் கூறியது ஐ.நா. சபையில் வோட்டளித்த பெரும்பான்மையை பற்றி.

    பிரித்தானிய இந்தியா இருந்த நிலையில்தான் அப்போதைய பாலஸ்தீனமும் இருந்தது. அதுவும் பிரிட்டனின் கீழ் இருந்தது. இந்தியாவை பங்கு போட்டது போலத்தான் பாலஸ்தீனத்தையும் பங்கு போட்டனர்.

    என்ன, இந்தியாவை பங்கு போடுவதில் ஐநா பங்கு வகிக்கவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் தத்தம் அகதிகளை பார்த்துக் கொண்டனரா இல்லையா. ஆனால் பாலஸ்தீனத்தில் மட்டும் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? இஸ்ரேல் தன் பங்குக்கு வந்த நாட்டை நன்றாக நிர்வாகம் செய்தது. நெகேவ் பாலைவனத்தை சோலைவனமாக்கியது. இஸ்ரேலில் கணிசமான அரேபியர்கள் வாழ்கின்றனர். அரேபிய மொழியும் அங்கு ஆட்சி மொழிகளில் ஒன்றுதானே?

    ஆனால் பாலஸ்தீனத்தின் ரிகார்டை பாருங்கள்? 1948-லிருந்து 1967 வரை பாலஸ்தீனியரும் அரேபியர்களும் செய்தது என்ன? இஸ்ரேலை ஒழிப்போம் என்று ஹிட்லர் போல கோஷம் இட்டதுதானே? சில இடங்களில் இஸ்ரேலின் அகலம் வெறும் 10-20 மைல்கள்தான் என்பதை அறிவீர்களா? கோலன் உயரத்திலிருந்து 1948-லிருந்து 1967 வரை சிரியர்கள் இஸ்ரவேலரை சீண்டி வந்துள்ளனர்-யுத்தமோ, இல்லையோ. ஆனால் 1967க்கு அப்புறம் இஸ்ரேல் அதை கைபற்றிய பிறகு அவ்வாறா செய்தது? சொல்லப் போனால் டமாஸ்கஸ் அங்கிருந்து பீரங்கி குண்டு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.

    யெரூஸலம் பக்கம் வாருங்கள். இஸ்ரேலியருக்கு புனிதமான அழுகைச் சுவரை ஜோர்தானியர்கள் டாய்லட்டாக உபயோகித்தனர். தாவூத் நபியை அவமானம் செய்யும் காரியமில்லையா அது? யூதர்கள் யார்? அவர்களின் கடவுள் யாஹ்வேதானே நீங்கள் அல்லா எனக் கூறுகிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  14. dondu(#4800161)

    “பாலஸ்தீனத்தை கபளீகரம் செய்ததில் இஸ்ரேலுக்கு இணையான பங்கு ஜோர்டானும் எகிப்துக்கும் உண்டு.”
    இந்த உண்மையை ஒத்துக் கொண்டதற்காக என் அன்புள்ள எங்கள் புதுக்கல்லூரி ஜூனியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

    இன்னொரு விஷயம். டோண்டு ராகவன் என்றால் இசுலாமியரை வெறுப்பவன் என நினைத்து விடாதீர்கள். உண்மையைக் கூறப்போனால் யூதர்களும் இசுலாமியர்களும் கண்ணாடி பிம்பம் போலத்தான். இட வல மாற்றம் அங்கங்கு இருந்தாலும் மேல் கீழ் மாற்றங்கள் கிடையாது (இயற்பியல் உண்மை). ஆகவே யூதர்களை ஆதரிக்கும் நான் கண்டிப்பாக இசுலாமியரை வெறுக்க இயலாது.

    அரபி மொழி படிக்க ஆசை. பகுதி நேரமாக அதை படிக்க சென்னையில் வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. அரபியாவது படித்து விடலாம், ஆனால் ஹீப்ரூ மொழிக்கு சான்ஸே இல்லை இந்தச் சென்னையில். ஆகவே கிடைத்ததை வைத்து திருப்தி அடைய வேண்டியதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  15. நல்லடியார்

    //இன்னொரு விஷயம். டோண்டு ராகவன் என்றால் இசுலாமியரை வெறுப்பவன் என நினைத்து விடாதீர்கள்.//

    நான் அவ்வாறு நினைக்கவில்லை.
    இஸ்ரேலுக்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் மறந்தும் கூட அவர்களின் கொடுமைகளை கண்டிக்கவில்லை. மாறாக இதெல்லாம் சகஜம் என்பது போல் சொல்லியுள்ளீர்கள்.ஆகவே, சிலர் அவ்வாறு நினைக்க வாய்ப்புண்டு.

    //இஸ்ரேலியருக்கு புனிதமான அழுகைச் சுவரை ஜோர்தானியர்கள் டாய்லட்டாக உபயோகித்தனர்.//

    டோண்டு ராகவன் சார்,

    இஸ்ரேலியர்கள் அழுகைச் சுவர் என்று சொல்லும் WAILING WALL ஐ முஸ்லிம்கள் புராக் சுவர் என்கிறார்கள். முஹம்மது நபி விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது இந்த சுவர் அமைந்துள்ள மஸ்ஜிதிலிருந்து என்று நம்புகின்றனர். முஸ்லிம்களுக்கு மட்டுமே முழு உரிமையுள்ள (பார்க்க: Report of British mandate over Palestine) எகிப்திய மம்லுக்கர்களிடமிருந்து பாலஸ்தீனைக் கைப்பற்றிய 16 ஆம் நூற்றாண்டு முதல் புராக் சுவற்றிற்கருகில் யூதர்கள் வழிபாடு செய்ய பெருந்தன்மையாக அனுமதித்தவர் உத்மானிய சுல்தான் சலீம் 1.

    வரலாறு இப்படி இருக்க முஸ்லிம்கள் அவமதித்தார்கள் என்கிறீர்களே.

    //அரபி மொழி படிக்க ஆசை. பகுதி நேரமாக அதை படிக்க சென்னையில் வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. //

    நீங்கள் குடியிருக்கும் திருவல்லிக்கேணி அல்லது ராயப்பேட்டை ஏரியா என்று நினைக்கிறேன். தமிழ்-ஆங்கிலம் மூலம் அரபிமொழிப்பயிற்சி கொடுக்கப் படுகிறது. முழு முகவரியும் கிடைக்கவில்லை.

    தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் வெளுத்து வாங்கும் நீங்கள், அரபியும் கற்றுக் கொண்டால் சொல்லவா வேண்டும்?

    அப்புறம், வீரப்பனைப் பிடிக்க தமிழக போலீசுக்கு இஸ்ரேல் ராணுவம் உதவ முன்வந்ததாகவும் பிறகு காடுகளில் தேடிப்பார்த்து விட்டு வெருங்கையுடன் திரும்பி விட்டதாகவும் செய்திகளில் படித்த ஞாபகம். இது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?

  16. dondu(#4800161)

    அன்புள்ள நல்லடியார் அவர்களே,

    நான் கூறியது 1948-லிருந்து 1967 ஜூன் 10-ஆம் தேதி வரை. அந்த காலக் கட்டத்தில் ஜோர்தானியர்கள் செய்த அவலத்தைத்தான் இந்த டோண்டு ராகவன் கூறினான். ஆறு நாள் யுத்தம் நடந்த சமயம் எனக்கு வயது 21. எல்லாவற்றையும் அக்காலத்தில் சுடசுட பத்திரிகையில் படித்தவன். இஸ்ரவேலர்களுக்கு அக்காலக் கட்டத்தில் (19 ஆண்டுகள்) அழுகைச்சுவரில் பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை என்பதையாவது அறிவீர்களா?

    மற்றப்படி ஜூலை 31, 1971-ல் நடந்தது, 1982-ல் மெனாசெம் பெகின் பாலஸ்தீனியருக்கு அடைக்கலம் ஆஃபர் செய்தது எல்லாமே சரித்திர உண்மைகள்.

    திருவல்லிக்கேணியில் தேடிப் பார்த்தால் போயிற்று. அரபி மொழி ரொம்ப இனிமையானது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உருது பற்றி நான் ஏற்கனவே பதிவே போட்டுள்ளேன், அதை படித்து பின்னூட்டம் கூட இட்டிருந்தீர்களே? பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  17. dondu(#4800161)

    வீரப்பன் விஷயம்? அது பற்றி சரியாகத் தெரியாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  18. ஜயராமன்

    அரபு நாட்டில் பல வருடம் வாழ்ந்தவன் என்ற முறையிலும் அரபு மொழியை படித்தவன் என்ற முறையிலும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அரபு மொழியின் பழம்பாண்மையை நான் ஆர்வமாக ஆராய்ந்தேன். அரபி மொழியும் நான் அறிந்த சமுஸ்கிருத மொழியின் ஒற்றுமையும் என்னை வியக்க வைத்தது. ஒருமை, இருமை, பன்மை என்ற தளத்தில் அமைந்த இரு மொழிகள் இவை மட்டுமே. அரபி மொழியின் வார்த்தை கூறுகள் சம்ஸ்கிருத வார்த்தை கூறு இலக்கணத்தை ஒத்திருந்தன. ஒரு வார்த்தை தெரிந்து கொண்டால், அதன் சார்ந்த எல்லா வார்த்தைகளையும் அந்த root கொண்டே அமைவது தனி அழகு. ஹப்தா – சப்தாஹ்; மாஹ் – மாஸ் போன்ற பிரபலமான பல வார்த்தைகள் அப்படியே இருந்தன.

    இதை மேலும் நோண்டியதும் அரபியும் சம்ஸ்கிருதமும் ஒரே linguistic family என்ற பல ஆராய்ச்சிக் கோர்வைகளை நான் படித்து அரிந்தேன்.

    இன்று வடமொழியை எதிர்க்கும் பல மூடர்கள் இதை அறிய வேண்டும் என்பது என் ஆசை.

    மொழிகள் மத்த்தால் பாகுபட்டு நிற்பது பெரும் கொடுமை.

    நன்றி

  19. Dear Nalladiyar,

    Why don’t you update the statistics of Israel’s recent barbarianism in Labenan?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *