Featured Posts
Home » பொதுவானவை » இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?
முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதர் என்ற வகையில் இயேசுவை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு இணையாக மதிக்கிறார்கள்.இயேசுவின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவதோடு,அவர் தடுத்தவற்றை இன்றளவும் பின்பற்றி இயேசுவைக் கண்ணியப்படுத்துவதில் முஸ்லிம்களே முன்னனியில் இருக்கிறார்கள்.

இயேசுவின் முக்கியமான போதனைகளில் ஒன்றான மது,விபச்சாரம் போன்ற பாவச்செயல்களை இஸ்லாம் ‘ஹராம்’ என்று தடுக்கிறது. கிறிஸ்துவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மதுவுடன் தொடங்கும் களியாட்டங்கள் பைபிள் தடுக்கும் பெரும் தீமைகளுடனேயே தொடர்ந்து தீமையிலேயே முடிகின்றன. இயேசுவின் மீது உண்மையான மரியாதை வைத்திருந்தால் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் இதனைச் செய்வார்களா?

இயேசு மூலம் வந்த இறைபோதனைகள் அவருக்குப் பின்வந்த சீடர்களால் களங்கப்பட்டுள்ளன என்று இஸ்லாம் சொல்வதில் நியாயமிருக்கிறதா இல்லையா என்பதை பைபிளை நம்பும் சகோதரர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர்-25இல் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கும் பைபிளிலோ அல்லது ஆரம்பகால உண்மையான கிறிஸ்தவர்களிடமோ சரியான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமளிக்கிறது !

இயேசுவின் பிறப்பு பற்றியக் குறிப்பு பைபிளில் காணப்படுகிறது. ஆனால் எங்குமே அவரின் பிறந்தநாளைக் கொண்டாடச் சொல்லவில்லை. பிறந்த நாளைக் கொண்டாடுவதை முஹம்மது நபியும் செய்தது இல்லை; ஏனெனில் அது இஸ்லாத்தில் இல்லாதது.பிறந்த நாளைக் கொண்டாடுவது இயேசுவுக்கும் முஹம்மது நபிக்கும் முந்தைய பாகன்களின் வழிமுறையாகவே இருந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய கிறிஸ்துமஸ்மர அலங்கரிப்பை பைபிள் கண்டிக்கிறது!

“The customs of the people are worthless, they cut a tree out of the forest, and a craftsman shapes it with his chisel, they adore it with silver and gold, they fasten it with hammer and nails so it will not totter” (Jeremiah 10-3,4).

கிறிஸ்துஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டிருக்கவில்லை. Oxford Guide to Ideas and Issues of the Bible (Bruce Metzger and Michael Coogan, editors, 2001) என்ற நூலில் கிறிஸ்துமஸ் பற்றியும், இயேசுவின் பிறந்த தினம் பற்றியும் கீழ்கண்டவாறு விளக்குகிறது,

Twenty-five December was by the fourth century [ A.D.] the date of the winter solstice, celebrated in antiquity as the birthday of Mithras [an ancient Persian god] and of Sol Invictus [the ‘unconquered’ sun god]. In the Julian calendar the solstice fell on 6 January, when the birthday of Osiris [the Egyptian god of the dead] was celebrated at Alexandria. By about 300 CE [ A.D.], 6 January was the date of the Epiphany in the East, a feast always closely related to Christmas” பார்க்க:http://www.gnmagazine.org/issues/gn43/bornchristmas.htm

டிசம்பர் 25 ஐ இயேசுவின் பிறந்த தினமாக கி.பி.354 இல் போப் லிபெரியஸால் பிரபலப்படுத்தப்பட்டு கி.பி,435இல் போப் சிக்ஸ்டஸ் III ஆல் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதே நாளில்தான் ரோமர்களும் பார்சியர்களும் தங்கள் கடவுளின் தினமாகக் கொண்டாடி வந்தனர், ரோமன் கத்தோலிக்க அறிஞர் மரியோ ரைட்டி (Mario Righetti ) சொல்வதுபோல், “To facilitate the acceptance of the faith by the pagan masses, the Church of Rome found it convenient to institute the 25th of December as the feast of the birth of Christ to divert them from the pagan feast, celebrated on the same day in honor of the ‘Invincible Sun’ Mithras, the conqueror of darkness” (Manual of Liturgical History, 1955, Vol. 2, p. 67). பார்க்க: http://www.ucgstp.org/lit/gn/gn008/gn008f03.htm

இயேசு/ஈஸா (அலைஹி) அவர்கள் சொன்னவற்றைப் பின்பற்றாமல் அவர் தடுத்த மது, விபச்சாரம், இறைவனை மறந்த களியாட்டங்களைப் பின்பற்றுவது இயேசுவை மதிப்பவர்கள் செய்யக் கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து.

மாற்றுக் கருத்திருந்தால் சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளலாம்!

12 comments

  1. நல்லடியாரே
    இரண்டு வருத்தங்கள், இந்த நல்ல நாளில் இந்த தலைப்பு உருத்துகிர்றது, இயேசுவின் (எந்த மத போதனைகளும்) 10 கட்டளைகளும் ஒரு சராசரி மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும் என்பது சந்தேகமே
    இன்றைக்கு கொஞ்சம் சந்தோசமாய் இருக்கலாம்னு பார்த்தேன் கெடுத்துடீங்களே அய்யா.

    குல்லு ஆம் இந் தும்பி கேர்

    லியோ சுரேஷ்
    துபாய்

  2. உங்கள் கட்டுரையில் முக்கியமான தொய்வு “இயேசு டிசம்பர் 25 பிறந்தார்” என கிறிஸ்தவர்கள் நம்புவதாக நீங்கள் கூறுவது தான் இதனை இப்போது யாரும் நம்புவதோ (குழந்தைகளைதவிர) போதிப்பதோ இல்லை.
    இரண்டாவது பைபிளை நம்புபவர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? மறுமுறை பிறந்த கிறிஸ்தவர்கள் மதுபானம் அருந்துவதற்கு எதிராக போதித்து வருகின்றன. மேலும் மதத்தில் போதிப்பதை எல்லாரும் பின்பற்ற மாட்டார்கள் என்பது கிறிஸ்தவத்துக்கு மட்டுமல்ல இஸ்லாம், இந்து பௌத்த மதங்களுக்கும் பொருந்தும் அதை ஏன் கிறிஸ்தவருக்கெதிராக மட்டும் காட்டுகிறீர்கள்

  3. நல்லடியார்

    லியோ சுரேஷ்,

    கிறிஸ்துமஸ் பற்றி தேடியபோது கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். கொடுத்திருக்கும் சுட்டிகளின் அடிப்படையிலும் தமிழ் பைபிளிலிருந்துமே எழுதினேன். தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டலாம்.

    //இயேசுவின் (எந்த மத போதனைகளும்) 10 கட்டளைகளும் ஒரு சராசரி மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும் என்பது சந்தேகமே//

    சராசரி மனிதர்களால் பின்பற்ற முடியாத எதுவும் வழக்கொழிந்து விடும். பைபிளின் போதனைகள் அன்றைய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தினருக்கு மட்டும் என்றே அறிகிறேன். இஸ்லாமிய போதனைகள் 100% முழுமையாகக் கடைபிடிக்க ஏற்றவையே! எந்த ஆன்மாவும் அதன் தாங்கும் சக்தியை விட அதிகமாக சுமத்தப்படுவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது.

    //இன்றைக்கு கொஞ்சம் சந்தோசமாய் இருக்கலாம்னு பார்த்தேன் கெடுத்துடீங்களே அய்யா. குல்லு ஆம் இந் தும்பி கேர் //

    “குடி குடியைக் கெடுக்கும்!” “பலான தொடர்புகள் எயிட்சுக்கு வழிவகுக்கும்!” இவையெல்லாம் நமது அரசின் பிரச்சாரங்கள்!! இப்ப சொல்லுங்க நான் மட்டுமா உங்கள் சந்தோசத்தைக் கெடுத்தேன்? :-)

  4. நல்லடியாரே,
    அதுக்குத்தான் மதம் சம்பந்தபட்ட விஷயங்களில் கலந்துக்கொள்வதே இல்லை
    //இஸ்லாமிய போதனைகள் 100% முழுமையாகக் கடைபிடிக்க ஏற்றவையே!//

    கத உடாதீங்க சார், மனசாட்சியோடு சொல்லுங்க உங்களால முடியுமா.எல்லா மதபோதனைகளும் – முடியுமா அல்லதுப்கடைபிடிக்க ஏற்றவையே கடைபிடிக்கப்படுகிறதா என்பது தான் கேள்வி
    //குடி குடியைக் கெடுக்கும்!” “பலான தொடர்புகள் எயிட்சுக்கு வழிவகுக்கும்!” இவையெல்லாம் நமது அரசின் பிரச்சாரங்கள்//
    ரொம்ப கற்பனை பன்னாதீங்க சும்மா ஒரு பீர்…நன்றி

    லியோ சுரேஷ்
    துபாய்

  5. சிறில் அலெக்ஸ்

    ரெம்பக் கஷ்டம்டா சாமி. இணையம் வந்ததுலேந்து ஆளாளுக்கு எக்ஸ்பெர்ட் ஆயிட்டு வர்ற்றோம் அதுவும் அடுத்தவங்க சம்பந்தப்பட்ட விஷய்த்துல.

    நல்லடியார் உங்க பதிவு வருத்தத்தை அளிக்கிறது. இன்னைக்குப் போயி இப்படி ஒரு பதிவு.

    மது அருந்தாதேன்னு இயேசு நேரடியா சொன்னதா நினைவில்ல. Anything in moderation is good.

    அடுத்தவங்க சந்தோஷமாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா? :)

    கத்தோலிக்க கிறீஸ்த்தவம் பல கலாச்சாரங்களை அழித்துள்ளதுன்னு ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆன உண்மையில் அது பல கலாச்சாரங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கிறீஸ்துமசும் அதுபோலத்தான். இன்றைக்கு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் இந்தியாவில் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படுகின்ற என்றால் அது கலாச்சாரக் கொலையல்ல.

    Anyway. இந்தத் தருணத்தில் ஒரு தேவையில்லாத பதிவென்றே நினைக்கிறேன்.

    இயேசு பிறந்தார் என்றால், அவர் பிறந்த நாளாக ஒரு நாளை பாவித்து கொண்டாடுவதில் என்ன தப்புங்க?

    நீங்களும் இதச் செய்யணும்னு நினைக்கிறேன். 100 வருஷம் வாழப்போறீங்க கொஞ்சம் சந்தோஷமாத்தான் வாழுங்களேன் :)

    விழாக்கால நல் வாழ்த்துக்கள்.

  6. பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

    தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    “அவனை முதலில் நிறுத்தச் சொல்” எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்….அனத்து மதத்தினரும்… இதனைச் செய்தால் மட்டுமே போதும்…. மத நல்லிணக்கம் வளர!

    நம் மதத்தின் பெருமைகளைச் சொல்லவே நமக்கு நேரம் போதாது!
    இதில் அடுத்த மதத்தைப் பற்றிய விமரிசனங்களைத் தவிர்க்கலாமே!

    தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

    இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

    அனைவருக்கும் நன்றி.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

  7. The unfortunate thing is, you can comment on Jesus, but we cannot comment on your religion i.e. you will not accept any comments… 1. Jesus has said not to marry many women, but?

    2. Jesus has said to show the other side of the face, but?

    3. Jesus has said “Law is for man and not man for law”, but?

  8. பகுத்தறிவாளன்

    //இயேசு/ஈஸா (அலைஹி) அவர்கள் சொன்னவற்றைப் பின்பற்றாமல் அவர் தடுத்த மது, விபச்சாரம், இறைவனை மறந்த களியாட்டங்களைப் பின்பற்றுவது இயேசுவை மதிப்பவர்கள் செய்யக் கூடாத ஒன்று//

    நல்லடியார் அவர்களே ஒரு திருத்தம்.

    மதிக்கப்படும் ஒருவரின் அனைத்து செயல்பாடுகளையும் அவர் கூறியவற்றையும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    பின்பற்றப்படுபவரின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது நியாயமானது. அது தான் சரியும் கூட.

    இங்கு இயேசுவை கிறிஸ்தவர்கள் தங்களது முன்மாதிரியாக பின்பற்றுகிறார்கள் என்று எந்த கிறிஸ்தவரும் கூறுவதில்லை. எனவே தான் அவரின் கட்டளைகள், முன்மாதிரிகள், செயல்பாடுகள் எவையும் அவர்களால் பின்பற்றப்படுவதில்லை. அவர்கள் பின்பற்றுவது புனித பவுல் அடிகள் போன்ற அவர்கள் நம்பும் புனிதர்களை மட்டும் தான்.

    இதனை என் பதிவுகளில் “விருத்த சேதனம்”, “கர்த்தரை வணங்கும் முறை”, “இறை மகன்” போன்ற விஷய்ங்கள் கிறிஸ்தவர்களால் பைபிளில் கூறப்படுவது போல் பின்பற்றப்படுவதில்லை என பைபிளிலிருந்தே ஆதாரங்களைக் எடுத்துக் காட்டி நிரூபித்திருக்கிறேன். அதனை பைபிளில் அவ்வாறு இல்லை என எந்த ஒரு கிறிஸ்தவ அன்பரும் இதுவரை கூற முடியவில்லை.

    எனவே இங்கு நண்பர் லியோ சுரேஷ் கூறியிருப்பது போன்று நீங்கள் இதையெல்லாம் தற்போதைய கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்பது தான் என் கருத்தும்.

    பகுத்தறிவாளன்

  9. \\அடுத்தவங்க சந்தோஷமாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா? :)\\

    \\இயேசு பிறந்தார் என்றால், அவர் பிறந்த நாளாக ஒரு நாளை பாவித்து கொண்டாடுவதில் என்ன தப்புங்க?\\

    சகோதரர் நல்லடியார் அவர்களே!

    கிருஸ்துவர்கள் கிருஸ்துமஸ் கொண்டாடினால் அது பற்றி இறைவனிடத்தில் நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் உங்களுடைய நன்மை தீமைகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும், அதுபோல்தான் இந்த உலகத்தில் உள்ள சராசரி மனிதர்களும் இதுதான் இறை நியதி. கிருஸ்துவர்களும் சரி, முஸ்லிம்களும் சரி மறுமை நாளில் இறைவனைச்சந்திப்போம் என்று நம்புகின்றனர். இருந்தபோதும் இவ்விரு மதத்தினரில் பெரும்பான்மையோர் புதிய புதிய இரண்டு மதத்திற்குமே சம்பந்தமில்லாத வணக்கங்களிலும், இன்னபிற செய்களில் ஈடுபட்டு வருவது கண்கூடு. இதற்குக் காரணம் இவ்விரு மதத்தினவரும் இறைக்கட்டளையை உதாசீணப்படுத்தியதுதான் என்றால் மிகையாகாது.

    இதில் கிருஸ்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்.

  10. நல்லடியார்

    இணையம் வந்ததுலேந்து ஆளாளுக்கு எக்ஸ்பெர்ட் ஆயிட்டு வர்ற்றோம் அதுவும் அடுத்தவங்க சம்பந்தப்பட்ட விஷய்த்துல. நல்லடியார் உங்க பதிவு வருத்தத்தை அளிக்கிறது. இன்னைக்குப் போயி இப்படி ஒரு பதிவு.மது அருந்தாதேன்னு இயேசு நேரடியா சொன்னதா நினைவில்ல. Anything in moderation is good. அடுத்தவங்க சந்தோஷமாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா? :)

    சிறில் அலெக்ஸ்,

    இயேசு உங்களுக்கு மட்டுமா சொந்தம்? ;-) மது அருந்துவதை எதிர்க்கும் பைபிள் வசனங்கள் பற்றி, “பர்தாவும் பைபிளும்” என்ற எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். பைபிளில் சொல்லப்பட்டவை இயேசு/ஈஸா அலைஹி.. அவர்களின் போதனைகள் என்றிருக்கும்போது நேரடியாக/மறைமுகமாக என்பது சரியா? தடுக்கப்பட்டவற்றில் பல விடயங்கள் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் பொதுவாகவே இருக்கின்றன. அந்த நல்லெண்ணத்தில்தான் பதிவெழுதினேன்.

    தருமியின் கிறிஸ்தவ/மத மறுப்பு பற்றிய பதிவில் இயேசு பற்றிய குற்றச்சாட்டுகளில்கூட இயேசுவை உயர்த்திச் சொல்லி இருக்கும் குர்ஆன் வசனங்களைச் சுட்டி வாதிட்டேன். துரதிஷ்டவசமாக அனானிகளின் தொந்தரவால் தொடரமுடியவில்லை.

    மதிப்பிற்குறிய எஸ்.கே மற்றும் சிலர் சொன்னதுபோல் தலைப்பு சற்று உறுத்தலாக அமைந்துவிட்டது. மற்றபடி இயேசு (ஈஸா அலைஹி..) அவர்களை அவமதித்தோ அல்லது உண்மையான கிறிஸ்தவர்களின் மனதை மகிழ்சியான நன்னாளில் புண்படுத்தும் நோக்கிலோ பதிவிடவில்லை.

    குடியும் குடுத்தனமாக இருக்க வாழ்த்துக்கள்!

    /1. Jesus has said not to marry many women, but? 2. Jesus has said to show the other side of the face, but?
    3. Jesus has said “Law is for man and not man for law”, but? /

    OCBC,

    1.Could you please refer me a verse either from NT or OT that restricting Polygamy or says not to marry more than one wife.

    2. It is bit complicated point. Lets have discuss in detail. Meanwhile,Can you tell me why this noble verse not followed in IRAQ,Afgan and elsewhere on the earth?

    3.Do you know who opinioned women are not a human being, women has no right, women are the route cause for all sins etc…

    லியோ சுரேஷ்,

    BEER ஆனாலும் போதையின்றி குடி! துபாய்ல Lemon flavoured Mousy மால்ட் ட்ரிங்ஸ் கிடைக்குமே! :-)

  11. //Beer ஆனாலும் போதையின்றி குடி! துபாய்ல lemon flavoured மால்ட் ட்ரிங்ஸ் கிடைக்குமே! :-)//
    அத 10 அல்லது 15 முறை குடித்திருப்பேன், சவுதியில் இருந்த 17 வருஷத்தில்.சவுதியைப் பற்றி அறியாதவர்கள் அங்கு ஒன்றுமெ இல்லை என நினைக்கவேண்டாம்(இல்லீகல் விஷயங்களை சொல்லவில்லை)தம்மாமில் அராம்கோ காம்பவுன்டில் எல்லாமே இருக்கிறது பன்றி இறைச்சி உட்பட(நான் அதை எல்லாம் சாப்பிட்டதில்லை ஆணால் கென்யா நெய்ரோபியில் கார்னிவோரஸ் உணவகத்தில் நண்பர்களுடன் சாப்பிட சென்ற பொழுது அவர்கள் கொன்டு வந்த இறைச்சியை என்னவென்று கேட்க கூலாக யானை இறைச்சி என்று கூற நான் மறுக்க நண்பன் அப்துல் ஜலீல் சாப்பிடு மச்சான் நம்ப ஊருல இத நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறி பின் நாங்கள் சாப்பிட்டது-நினைவில் இருப்பது முதலை,காட்டு எருமை,இன்ன பிற) அது கிடக்கட்டும் விஷயத்துக்கு வற்ரேன்.

    1.லக்கும் தீனுக்கும் வலிய தீனுக்கெல்லம் நீங்கள் மதிப்பளிப்பதிலையா? (இந்த இறை வசனத்தின் தொடக்கதிலிருந்து படிக்கவும்)
    2.கியாமத்து நாளில் ஏசு மட்டும் அல்லாவுடன் இருப்பதாக குரானில் படித்த நினைவு. அது ஏன்?(உடனே வசன எண் எல்லாம் கேட்காதீர்கள் நியாபகம் இல்லை)நன்றி.

    லியோ சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *