Featured Posts
Home » பொதுவானவை » "திடீர்" மனிதாபிமானிகள்

"திடீர்" மனிதாபிமானிகள்

சவூதியில் பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்த இந்திய இளைஞருக்கும், உள்ளூர் அரபி இளைஞருக்கும் ஏற்பட்ட தகறாரில் அரபி இளைஞரின் கண்ணில் தாக்கப்பட்டு பார்வை பறிபோய் விட்டது. பாதிக்கப்பட்டவர் சவூதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு சவூதி-தமாம் கோர்ட்டில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பில், சவூதி இளைஞரின் பார்வையிழப்புக்குக் காரணமான அந்த இந்தியரின் ஒரு கண்ணை பழிக்கு பழியாக நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சவூதி இளைஞரின் கோரிக்கையை ஏற்று சவூதி கோர்ட்டும் அவ்வாறு செய்ய உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரசாங்கம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தைச் செயல் படுத்துவதால், இச்சட்டப்படி உயிருக்கு-உயிரும்,பல்லுக்கு-பல்லும்,கண்ணுக்கு-கண்ணும் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர் நீதி பெறவோ அல்லது இழப்பீடு பெற்றோ பெறாமலோ மன்னிக்கவும் சட்டத்தில் வழியுண்டு.

அதாவது பாதிக்கப்பட்டவரின் முடிவே இறுதியானது. நிலமை இவ்வாறிருக்க இஸ்லாத்தைக் கரித்துக் கொட்ட காத்திருக்கும் எதிர்ப்பாளர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வழக்கம் போல இஸ்லாமிய ஷரீஅத் தண்டணைச்சட்டங்கள் கொடூரமானவை காட்டுமிராண்டித்தனமானவை என்ற கூக்குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இதில் உள்ள சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து அதில் பொதிந்துள்ள தீர்வுகளையும், நியாயங்களையும் நடுநிலையாக விமர்சிக்க முன்வர வேண்டும். ஆனால் நம் திடீர் மனிதாபிமானிகளுக்கு அவற்றிலெல்லாம் அக்கரை இல்லை.

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பது நம் நாட்டுச் சட்டங்களின் நோக்கம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதுதான் சர்வ தேசங்களிலும் கடைபிடிக்கப்படும் சட்ட நெறிமுறை.

பாதிக்கப்பட்டவனுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது. அந்த நியாயம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும், எப்படி வழங்கப் படவேண்டும் என்பதிலும் தெளிவாக வரையறுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் தானே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு குற்றவாளியை தண்டிக்க முடியாது என்பதும் எந்த அளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டாரோ அதே அளவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மனிதாபிமான அணுகு முறையாகவே இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுள்ளன.

ஒருவர் அநியாயமாக பாதிக்கப்படும் குற்றவழக்குகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டவர் மேற்கண்டவாறு பழிதீர்த்து நியாயம் பெற முடியும். விபத்து அல்லது உள்நோக்கமற்றக் காரணங்களால் ஒருவருக்கு இத்தகைய இழப்பு ஏற்பட்டால் இதர நாட்டு சட்டங்களே பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகின்றன.

5:45 அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

16:126 (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

இங்கு கவனிக்கப்பட்ட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் பாதிப்பை
ஏற்படுத்தியவரை சட்டரீதியாக தண்டிப்பதற்கோ அல்லது மன்னிப்பதோ பாதிக்கப்பட்டவரே முடிவு செய்ய வேண்டும். அவர் விரும்பினால் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், உயிருக்கு உயிர் என்ற ரீதியில் நியாயம் பெறலாம் அல்லது மன்னித்து விடலாம்.

ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்” என்ற குர்ஆன் வசனத்தின் படி பாதிக்கப்பட்டாவர் எதிரியை மன்னித்து விட்டால் அவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் இறைவனிடத்தில் மன்னிக்கப்பட்டு பாவமற்றவராக கருதப்படுகிறார்.

சிலவருடங்களுக்கு முன் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் தண்டனை நிறைவேற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன் மன்னித்த நெகிழ்ச்சியான நிகழ்வும் சவூதியில்தான் நடந்தது. மேற்குறிப்பிட்ட வழக்கின் முக்கிய அம்சங்களாக கீழ்காண்பவற்றைச் சொல்லலாம்:

பாதிக்கப்பட்டவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே இழப்பிற்கு ஏற்ப பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 100,000 சவூதி ரியால்கள் வழங்க முன்வந்த போதிலும், அதனை ஏற்க மறுத்து விட்டார்.

சவூதி அரேபியாவில் இவ்வாண்டு கண் பறிக்கும் ஆக்கினை வழங்கப்பட்ட மூன்றாமவரிவர். 2003 ஆம் ஆண்டு முதல் இவர் சிறையில் உள்ளார். கண்பறிக்கப் பட இவரது ஒப்புதல் வேண்டும். இவரது ஒப்புதல் இல்லையெனில் கண்பறிக்கப் பட மாட்டாது; மாறாக இவரது சிறையிருப்புத் தொடரும்-. சிறையில்இருப்பார்.

இவரிடமிருந்து பறிக்கப் பட்ட கண் இவரால் கண்ணிழந்தவருக்கே பொருத்தப்படும். கண்ணிழந்தவர் இவரை மன்னித்தால் அல்லது இழப்பீடு பெற்றுக்கொண்டால் இவர் சிறை மீள்வார் – விடுதலையாவார். இது தான் சட்டம். ஆனால் சவூதிக் குடிமகன் இவரை மன்னிக்கவோ இழப்பீடு பெறவோ ஒப்பவில்லை.

கண் பறிக்கும் ஆக்கினை குர்ஆனின் அடிப்படையிலானது என்பதாலேயே ஊடகங்களின் கூப்பாடு-ஊடகங்கள் பேரளவிலும் யூத / பார்ப்பனக் கட்டுப் பாட்டிலிருப்பதால் இந்நிலை. ஒவ்வொரு நாட்டிலும் குற்றவியல் சட்டங்களும் குற்றங்களுக்கான ஆக்கினைகளுமுள்ளன. அதில் பிறர் கருத்துக் கூறவோ குறை கூறவோ உரிமை இல்லை.

கண்ணை விட உயர்வானது உயிர். கொலையாளியின் உயிரைப் பறிக்கும் ஆக்கினைவழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு உயிர் பறிக்கும் ஆக்கினைவழங்கப் பட்டால் அதை யாரும் குறை கூறுவதில்லை சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தினால் உயிர் பறிப்பர். இது அந்நாட்டுச் சட்டம். ஸவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படையிலான ஆக்கினை வழங்கியதாலேயே இந்தக் கூப்பாடும் ஒப்பாரியும்.- hue and cry யும்.

மேற்கண்ட தண்டனையை செயல்படுத்துவதன் மூலம் கண்ணை இழந்த சவூதி இளைஞர் மீண்டும் பார்வையைப் பெறப்போவதில்லை. வழங்கப்படும் இழப்பீட்டை விட எதிரியை பழி வாங்கினால் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்புகிறார். பாதிப்பிற்குள்ளானவரின் பாதிப்பிற்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவனின் இழப்பை மனிதாபிமான அளவீடு கொண்டு நியாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.

சவூதியில் இத்தீர்ப்பு செயல்படுத்தப் படுவதால் அதற்கு இஸ்லாமிய துவேச சாயம் பூசப்பட்டு நியாயமான ஒரு தீர்ப்பு கொச்சைப் படுத்தப் படுகிறது. இதில் இவர்களின் மனிதாபிமானத்தை விட இஸ்லாமிய எதிர்ப்பே மேலோங்கியுள்ளது.

குற்றவாளி தான் பாதிக்கப்பட்ட அளவுக்கு தண்டிக்கபடவேண்டும் என்ற சவூதி இளைஞரின் கோரிக்கையை தடுக்காத அப்பாதிப்பில் சம்பந்தமில்லாத சவூதி மன்னர் இந்தியா வருவதை எதிர்க்க வேண்டுமாம். சவூதியை காட்டுமிராண்டிகள் நாடு என்று அறிவிக்க வேண்டுமாம். அவ்வாறு செய்யாவ
ிட்டால் இந்திய ஜனாதிபதி. அப்துல் கலாம் அவர்களையும் சாடுவார்களாம்!?.

பார்ப்பனர் அல்லாத இந்திய ஜனாதிபதிகளின் பதவிக் காலம் முடியும் தருவாயில் இதுபோன்ற வசை பாடல்கள் சகஜம் என்பதும், மோடி போன்ற மனிதாபிமான!முதல்வர்கள் இன்றும் முதல்வராக இருந்து கொண்டிருப்பதும் தனிக்கதை.

குற்றம் செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனையிலிருக்கும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களால் வெட்டிக் கொல்லப்படுவதும், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்படுவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஏனென்றால் நம் நாட்டு சட்டங்களிலுள்ள ஓட்டைகளில் புகுந்து குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்று பாதிக்கப்பட்டவர் நம்புவதால்தான் இத்தகைய பழிவாங்கலில் ஈடுபடுகிறார்கள் என்பது நியாயமாகச் சிந்தித்தால் உணர முடியும்.

மேலும் பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் உயிருக்கு உயிர் என்பது குர் ஆனில் மட்டும் சொல்லப்படவில்லை. தன் மணைவியை கவர்ந்து சென்ற இராவனன் கொல்லப்பட்டது இராமயன நீதி. கிறிஸ்தவர்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் உள்ள சட்டமே.

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்பட வேண்டும். (உபாகமம் – Deuteronomy 19:21)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் (யாத்திரயாகமம் – Exodus 21:24)

இயேசு கிறிஸ்துவுக்கு பின்வந்த அவரின் சீடர்களால் இக்கட்டளை பிறகு மாற்றப்பட்டது. அதாவது (மாத்தேயு 5:38-39) இல்

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என மாற்றப்பட்டது.

இன்று உலகின் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மதமான கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிளின் புதிய ஏற்பாடு முன்னிருத்தப் பட்டுள்ளது. எனில் எல்லோருமே அன்புக்கு அடிமையாகி வலது கன்னத்தில் அடித்தவனுக்கு இடது கன்னத்தைக் காட்டுகிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லமுடியும்.

கிறிஸ்தவரான ஜார்ஜ் புஷ்ஷும் டோனி பிளேயரும் சதாம் உஷேனுக்கும் பின்லாடனுக்கும் ஏன் கன்னத்தைக் காட்டாமல் படையெடுத்துச் சென்று அவர்களின் நாட்டை சின்னா பின்னமாக்கினார்கள்?

சரி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” மற்றும் “அன்பே சிவம்” என்று சொல்லிக் கொண்டுதான் இவர்கள் குஜராத்திலும் இன்னும் பிற பகுதிகளிலும் தங்கள் மனிதாபிமானத்தைக் காட்டினார்கள்.

இந்த திடீர் மனிதாபிமானிகளின் உள்நோக்கம் இஸ்லாத்தைத் தூற்ற கிடைக்கும் எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் தவற விடக் கூடாது என்பதே என்பது எளிதில் விளங்கும்.

One comment

  1. நண்பன்

    இந்தத் திடீர் மனிதாபிமானிகள், கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல மாட்டார்கள்.

    தீவிரவாதத்தை நான் எதிர்க்கிறேன். ஆனால் அதே சமயம் நீங்கள் நிகழ்த்திய தீவிரவாதத்தைக் கண்டித்து குரல் கொடு என்ற பொழுது மௌனமாகிப் போனார்கள். அவர்கள் அறிவிக்கிறார்கள் – தமிழில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப் போகிறோம் என்று. அங்கு தங்கள் இஷ்டம் போல் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.

    இன்று இவர்கள் மனிதாபிமானம் பேசுகிறார்கள். ஆனால், மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. மரணதண்டனையை சட்ட பூர்வமாக நீதி மன்றங்கள் மூலம் பெற முடியாது என்னும் பட்சத்தில், போலிஸ்காரர்களே நீதிவான்களாகி விடும் நேர்மையான சட்டங்களை வைத்துக் கொண்டு தான் பேசுகிறார்கள்.

    என்ன செய்வது?? சிந்திக்கும் திறன் இல்லாதவர்களுடன் நாம் வாதிட வேண்டி இருக்கிறது.

    இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி சொல்லும் பொழுது – participative disposal of justice என்று தான் குறிப்பிட வேண்டும். அதாவது ஒரு தனிமனிதன் பாதிக்கப்படும் பொழுது அந்த மனிதன் தான் தனக்கான நீதியாக என்ன வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். ஆனால், அதே சமயம் அவன் ஒரு சின்ன விரல் போனதற்காக எதிரியின் உயிரே வேண்டும் என்று கேட்க முடியாது. அதே சமயம் – குற்றம் செய்தவருக்கு ஒரு மன்னிப்பு கிடைக்க சாத்தியதை இருக்கிறது. போனால் போகட்டும் விட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டால் – அவன் விடுதலை செய்யப்படுவான்.

    மற்ற நாடுகள் இன்று நடைமுறைத்தப் படும் சட்டங்கள் மூலம், குற்றவாளிக்கு தங்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு எந்தப் பரிகாரமும் தேட முடியாது. மாறாக, குற்றங்கள் என்பது இங்கு அரசிற்கு எதிரானது. ஆம் – அரசு தண்டனை வழங்கும் – குற்றம் இழைக்கப்பட்டவரால் சாட்சி மட்டும் தான் சொல்ல முடியும். தண்டிக்கப்படுவதும், தண்டிக்கப்படாததும் இங்கு அரசின் அரசின் விருப்பம். அத்தனை தான் வித்தியாசமுண்டு.

    இதில் என்ன பெரிய முற்போக்கு வந்து விட்டது? இங்கு நீதியின் பிடியில் இருந்து அவன் தப்பித்துச் செல்ல முடியும் – எத்தனை பெரிய வக்கீல், எவ்வளவு லஞ்சம் கொடுக்க முடியும், எத்தனை காலத்திற்குப் போராட முடியும் என்பது தான் இங்கு நீதியை வழங்குகிறதே தவிர, பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் என்பது கிடையாது. அதைவிடக் கொடூரம் – அநீதிக்கு ஆளான மனிதன் – குற்றம் செய்தவனை விட அதிக அளவில் பணம் செலவு செய்தால் தான் தனக்கான நீதியைப் பெற முடியும்.

    பணம் இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்? ‘நீ நாசமாகப் போவ’ என்று மண் வாரித் தூவி விட்டு, ஆண்டவனிடம் இறைஞ்சுதலைத் தவிர? இந்த ஏற்றத் தாழ்வை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பிறப்பினால் அனைவரும் சமம் என்று முழங்கிய மதமாயிற்றே. இவர்கள் எதிர்பார்க்கும் – அரசு நிறுவன நீதிபரிபாலனையில் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்தெடுப்பது என்பது ஒரு போதும் சாத்தியதை இல்லை.

    வாதத்திறமையாலும், பண வலிமையாலும் சட்டத்தின் கண்களைக் கட்டி விடலாம் என்ற தைர்யம் பெற்றதினால் மட்டும் தானே – இன்று கூலிப்படையினர் செழித்து வளர்கின்றனர்!!!

    கையை வெட்டுவதற்கு ஒரு விலை, கழுத்தை எடுப்பதற்கு ஒரு விலை என்று மனித மாண்பை விலை பேசி திரியும் கூலிகளைக் கொண்டு அரசியல் நிகழ்த்தும் இந்த மக்கள் – மடங்கள் – கட்சிகள் – நீதி முறைப்படிவழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதை ஏளனம் செய்யத் தான் செய்வார்கள்.!!!

    தண்டனைக்கு சற்று முன் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிகழ்வுகள் இங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை. தன்னை சுட்டவனை மன்னித்து விடுங்கள் என்று இறப்பதற்கு முன் காந்தி கேட்டுக் கொண்டார். ஆனால், அவன் விடப்பட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *