Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » [13] நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை

[13] நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, நஸாயி)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவிற்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கின்றேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: பல் துலக்குவது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திய சுன்னத்தாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது என்றும், அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்றும் கூறுவது ஆதாரமற்றதாகும்.

One comment

  1. Ok….its..true….but I have asking cant use tooth past?because a period of rasullah…only use for miswake stick.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *