Featured Posts

உளுச் செய்யும் முறை………

135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் …

Read More »

தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…

பாடம் – 2 சுத்தம் 134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)

Read More »

கிறிஸ்தவர்களின் பார்வையில் இஸ்லாம்

கத்தோலிக்க மதகுரு புனிதபோப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கடந்த செப்டம்பர்-12 அன்று ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, பதினான்காம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட பைசாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பாலியோலோகஸ் (Manuel II Paleologus)க்கும்,மன்னனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன ஒரு பார்ஸிய அறிஞருக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி மன்னிப்புக் கேட்டுள்ளார் . பதினான்காம் நூற்றாண்டு உரையாடலை மேற்கோள் காட்டிய …

Read More »

கொள்கையால் வேறுபட்டவர்கள்.

மனதால் கொள்கையில் மாறுபட்டவர்கள் மண வாழ்க்கையில் இணைந்தால்..? அனைத்திற்கும் ஒரே, ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் இறைக் கொள்கை. இந்தக் கொள்கையால் மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. மட்டுமல்ல, சட்ட திட்டங்கள், வணக்க வழிபாடுகள், கொள்கைகள் என எல்லா விஷயங்களிலும், பிற மதங்களிலிருந்து இஸ்லாம் தனிவழி கொண்டிருக்கிறது. இல்லறத் துணை என்பது மனித வாழ்வில் மிக முக்கியத் தேவை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆண், பெண் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (19)

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற …

Read More »

ஆயிரத்தில் ஒருவர்……..

133- (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் (உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள். அதற்கு அவன் ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப்பிரித்திடுங்கள்) என்று …

Read More »

சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!

132- நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். அவர்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருக்க …

Read More »

2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது

  இது அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். இதுபோல் கேட்பது புதிதல்ல. ஸஹாபா பெருமக்கள் காலத்திலேயே இவ்வாறு கேட்கப்பட்டு அதற்கான பதிலும் கிடைத்து விட்டது. கீழ்கண்ட ஹதீஸை கவனியுங்கள்: ‘ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிற்றைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து …

Read More »

மதமாற்றம் ஏன்? -5

இஸ்லாம் பற்றிய சந்தேகம் கேட்டு, 67.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற தலைப்பின் தருமி என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 21கேள்விகள் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் மட்டுமில்லை, கேள்விகளுக்கு முன் ஒரு முன்னுரை மாதிரி, ”இதெல்லாம் எனக்குத் தெரியும்” என்ற தோரணையில் இஸ்லாத்தை பற்றியும் சில விளக்கங்களை எழுதியிருந்தார். நமது பார்வையில் அது விமர்சனமாகப்பட்டது. ஏனென்றால் எழுத்தின் சாயலில் விமர்சனம் இருந்தது. மிகையாகச் சொல்லவில்லை இதோ அவர் எழுதியது… //மூன்று …

Read More »