Featured Posts

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.

இஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் புறப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார். //(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், …

Read More »

மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-161: அபூஹூரைரா (ரலி)

Read More »

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

Read More »

ஆராய்ச்சியாளரின் சிந்தனை?! (நீதிக்கதை)

சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.

Read More »

புத்திசாலித் தந்தை, புத்திசாலி மகன் (நீதிக்கதைகள்)

புத்திசாலித் தந்தை (பழசு) ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.

Read More »

மகனின் சாதுரியம் (சிறுகதை)

விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!

Read More »

குரங்கு விசாவில்.. (நீதிக்கதை)

ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று. காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.

Read More »

கடவுளின் பெயரால் (சிறுகதை)

ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை. ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.

Read More »

நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் …

Read More »

பொய்யர்களின் கடைசிப் புகலிடம்.

இஸ்லாம் மார்க்கத்தைக் களங்கப்படுத்திட களமிறங்கிய இஸ்லாத்தின் எதிரிகளின் ஆய்வறிவற்றப் பொய்ப் பிரச்சாரங்கள் பிரமிக்க வைக்கிறது. இஸ்லாத்தை விமர்சிக்கவென்றே, இஸ்லாத்தைப் படிக்கும் இந்தப் பக்கத்துக் காஃபிர்கள், என்னதான் வாசிக்கிறார்கள்? இருப்பதை இல்லையெனவும், இல்லாததை இருப்பதாகவும் சொல்வதற்கா..? இஸ்லாத்தின் மீது விஷத்தைத் துவிடக் கிளம்பிய வெஷ குமார் – அபு லபு என்று அடித்துக் கொண்ட இவரை, நேசம், வெஷம் என்று எழுத எமக்கு உரிமையுண்டு என்றாலும், வேண்டாம் நேசகுமார் என்றே குறிப்பிடுவோம். …

Read More »