Featured Posts

நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்… //இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் …

Read More »

மல ஜலம் கழிக்கும் போது….

148- நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாக ஆக்கியோ பின்பக்கமாக ஆக்கியோ உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன் நோக்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அறிவித்து விட்டுத் தொடர்ந்து நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதை விட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடினோம் …

Read More »

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

146- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை அடர்த்தியாக வளரவிடுங்கள் மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி-5892: இப்னு உமர் (ரலி) 147- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள் தாடியை வளரவிடுங்கள். புகாரி-5893: இப்னு உமர் (ரலி)

Read More »

ஃபித்ரத் (இயற்கை மரபுகள்) பற்றி…

145- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயேகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஜந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும். புகாரி-5889: அபூஹூரைரா (ரலி)

Read More »

பின்லாடன், ஜவாஹிரி வரிசையில் முஷராஃப்!

தீவிரவாத்திற்கு எதிராக’ என்ற போலிக் காரணம் சொல்லி கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவின் கூட்டுக் களவானியாகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராஃப், தற்போது தீவிரவாதிகளை உருவாக்குவது அமெரிக்காதான் என்று திருவாய் மலர்ந்துள்ளார். காலம் கடந்த ஞானதோயம்! முஷராஃப்பின் இந்த திடீர் பல்டியால், ஏற்கனவே மனஉளைச்சலில் நொந்து போயிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இன்னும் சில நாட்களில் உசாமா, ஜவாஹிரி வரிசையில் பாகிஸ்தான் அதிபரையும் வைத்து அழகு …

Read More »

ஆதாம், ஏவாள் எனும் ஜோடி.

இன்னுமா நம்புகிறார்கள்? என்ற தலைப்பில் எழில் என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். ஆம் ”இன்னுமா நம்புகிறார்கள்…?” இதே கேள்வியை வந்த வழிக்கே திருப்பினால் என்ன…? பரிணாமப் பறிமாற்றங்களை அருகிலிருந்து பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாரா!? என்னத்தைச் சொல்ல..! பரிணாமத்தின் உந்து விசையைக் கண்டுபிடிப்பதில் லாமார்க் போன்ற சிறந்த விஞ்ஞானிகளேத் தோற்றுப் போனார்களே! இவரென்ன விஞ்ஞானக் குஞ்சு! குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை நிரூபித்து விட்டாரா..? ”கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” …

Read More »

தூக்கத்திலிருந்து விழிக்கும் போது……

144- நபி (ஸல்) அவர்கள் இரவு (தூக்கத்திலிருந்து) விழிக்கும் போது தங்கள் வாயைக் குச்சியால் சுத்தம் செய்வார்கள். புகாரி-245: ஹூதைஃபா (ரலி)

Read More »

3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.

போர்களை நடத்திச் செல்ல ஆட்சி அவசியமா..? இஸ்லாம் என்ன சொல்கிறது..? போர் நடத்த வேண்டுமென்றால் அதைக் கட்டுப்படுத்த ராணுவம், ராணுவ அதிகாரிகள் என்று இருக்க வேண்டும். ராணுவம், ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த ஆட்சி, ஆட்சியின் அதிகாரம் இருக்க வேண்டும். ஆட்சி செய்வதற்கு நாடு, அல்லது ஏதேனும் நிலப்பகுதியை கைப்பற்றி அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இப்படி முறையாக அமைக்கப்பட்ட ஆட்சி, ராணுவம், போர் வீரர்கள் என்று இருந்து, அது …

Read More »

3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் …

Read More »