Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 49)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் பற்றி.

895. நபி (ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள். புஹாரி :5136 அபூஹூரைரா (ரலி). 896. நான், …

Read More »

மனைவியை ஆகுமானதாக்க…..

894. உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2721 உக்பா இப்னு ஆமிர் (ரலி).

Read More »

மஹரைத் தவிர்க்க ஒருவர் தன்மகளை சகோதரியை அடுத்தவருக்கு மணமுடித்துவிட்டு அவரின் மகளை சகோதரியை மணப்பது (ஷிஃகார்) தடை.

893. ‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றெவாருவரிடம் ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது. புஹாரி:5112 இப்னு உமர் (ரலி).

Read More »

ஒருவர் மணம்பேசும் பெண்ணை மற்றவர் இடையில் புகுந்து தனக்காக கேட்டல்.

892. ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்கு முன் பெண் கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் கூறினார்கள். புஹாரி :5142 உமர் (ரலி).

Read More »

மணமுடிக்கத் தடையான பெண்கள்.

890. (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5109 அபூஹுரைரா (ரலி).

Read More »

முத்ஆ- தற்காலிக (தவணைமுறை) திருமணம் தடை

887. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ‘எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.” என்று கூறிவிட்டு பிறகு, …

Read More »

திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)

884. நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது ‘மினா’வில் அன்னாரை உஸ்மான் (ரலி) சந்தித்து, ‘அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் (ரலி) (அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம்) ‘அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் …

Read More »

குபா பள்ளியில் தொழுவதின் சிறப்பு.

883. நபி (ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு சில நேரங்களில் நடந்தும் சில நேரங்களில் வாகனத்தில் பிரயாணித்தும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்று உள்ளது. புஹாரி :1194 இப்னு உமர் (ரலி).

Read More »

நன்மையை நாடி பயணம் செய்தல்.

882. ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற் கொள்ளக் கூடாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1189 அபூஹுரைரா (ரலி).

Read More »

மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந்நபவி பள்ளிகளின் சிறப்பு.

881. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1190 அபூஹுரைரா (ரலி).

Read More »