Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 71)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

தொழுகை நேரம் தவறி விட்டால்..

396-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். இறைத்தூதர் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து …

Read More »

தொழுகையில் குனூத் ஓதுதல்..

392– நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலாமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ மற்றும் மூமின்களில் பலவீனர்களை நீ காப்பற்றுவாயாக! இறைவா! முள்ர் கூட்டத்தின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட …

Read More »

பெரியவர் இமாமாக இருத்தல்..

391– நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக் குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும், இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள். தொழுங்கள் தொழுகை நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் , உங்களில் பெரியவர் …

Read More »

தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுதல்..

389– உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள் என்று தோழுர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »

ஜமாஅத்தாக தொழ வெகுதொலைவிலிருந்து வருவதன் சிறப்பு

388– யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகிறாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட நன்மை அதிகம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-651: அபூமூஸா (ரலி)

Read More »

ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..

387– ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்திகின்றான்: ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமருந்திருக்கும் …

Read More »

தொழுபவரின் ஆடை பிறர் மீது படுதல்..

386– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும் போது, சில வேளை அவர்களுடைய ஆடை என் மீதுபடும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள். புகாரி-379:மைமூனா (ரலி)

Read More »

தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..

384– நான் நபி(ஸல்)அவர்கள் இடத்தில் அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமுகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்து விட்டது. மழைக்காலங்களில் எனக்கும் என் சமுகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும் அவ்விடத்தை (எனது) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். இன்ஷா அல்லாஹ் …

Read More »

தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் அவசியம்..

380– ஒருவர் தனியாக தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின் போது பகல்நேர மலக்குகளும் இரவுநேர மலக்குகளும் ஒன்று சேருகிறார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்து விட்டு, நீங்கள் விரும்பினால் நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது (17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள். புகாரி-648: அபூஹுரைரா (ரலி) 381– தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு …

Read More »

ஸுப்ஹூ தொழுகையின் நேரம்..

377– மூமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது. புகாரி-578: ஆயிஷா(ரலி) 378– நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் …

Read More »