Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 18)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. …

Read More »

[பிக்ஹுல் இஸ்லாம்-29] அதானும் இரண்டு இகாமத்துக்களும்

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது. நபி(ச) அவர்களது அரபா, முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. ‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் …

Read More »

இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்'(ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.” (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் …

Read More »

நடுநிலை தவறி நாறிப்போவதேன்! (சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?)

நடுநிலை தவறி நாறிப்போவதேன்! (சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?) இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். எதையும் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலை தவறாமல் நோக்குவதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய உம்மத்தை அல் குர்ஆன் ‘உம்மதன் வஸதா” நடுநிலை சமுதாயம் என்றே அடையாளப்படுத்துகின்றது. ‘(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத்தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். ” (2:143) ஆனால், கொள்கை வெறியுடன் …

Read More »

அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம்-28: சேர்த்துத் தொழுதல்-2

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) சென்ற இதழில் பயணத்தில் இருக்கும் போது ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழலாம் என்பது குறித்து விரிவாக நோக்கினோம். பயணம் அல்லாத சில சந்தர்ப்பங்களிலும் சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது. உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்: 1. மழைக்காக சேர்த்துத் தொழுதல்: மழைக்காக சேர்த்துத் தொழுவதற்கான அனுமதியுள்ளது. மழை காரணமாக மக்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் தனித்தனியாகத் தொழுவதை விட, அனைவரும் …

Read More »

ஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்

மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயல்புகளில் ஒன்றுதான் திக்ர் எனும் இறை தியானம், இறை நினைவாகும். அல்லாஹ்வை பல விதங்களில் திக்ர் செய்யலாம். தொழுகை, பயான் மஜ்லிஸ்கள் கூட திக்ர்தான். இவ்வாறே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாவுகளால் அல்லாஹ்வை திக்ர் செய்வதும் சுன்னாவாகும் இவ்வாறு செய்யும் பழக்கம் எம்மிடம் மங்கி மறைந்துவிட்டது! ஒவ்வொருவரும் தம்மைத் …

Read More »

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது

அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 27- சேர்த்துத் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ழுஹருடைய நேரத்தில் ழுஹருடன் அஸரையும், அஸருடைய நேரத்தில் அஸருடன் ழுஹரையும், இவ்வாறே மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் இணைத்து சேர்த்துத் தொழுவதையே இது குறிக்கும். இதனை ‘ஜம்உ’ செய்தல் என்று கூறப்படும். ‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை யாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103) தொழுகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படி இருந்தும் ழுஹர், …

Read More »

அல் குர்ஆன் விளக்கம் – முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) அல் குர்ஆன் விளக்கம் முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா? ‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். …

Read More »