Featured Posts
Home » நூல்கள் (page 23)

நூல்கள்

பைபிளில் முஹம்மத் (05) – பைபிளில் பத்ர் யுத்தம்

இயேசு அல்லாத மற்றுமொரு இறைத் தூதரைப் பற்றி பைபிள் முன்னறிவிப்புச் செய்துள்ளது. அந்த இறைத்தூதர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் இருந்து வருவார் என்றும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்கள் இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் கூறி வருகின்றது. ஆனால், இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் வருவார் என்று கூறப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபியே என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் உறுதியாகத் தெளிவுபடுத்தி …

Read More »

இஸ்லாமும் பிற சமூக உறவும் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:28 – நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்பாளர்களை நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கே தவிர யாரும் அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் விடமிருந்து (பாதுகாப்பு) எதுவும் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். மேலும், அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது ஒரு முஸ்லிம் பிற சமூக மக்களுடன் எத்தகைய உறவைப் பேண வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் விரிவாகப் பேசுகின்றது. முஸ்லிம் அல்லாத …

Read More »

நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:18 – “நிச்சயமாக (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டி யவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்த வனும் ஞானமிக்கவனுமாவான்.” இந்த வசனம் அறிவின் சிறப்பை விளக்குகின்றது. அதே நேரம் ஏகத்துவத்தின் உண்மைத் தன்மையையும் விளக்குகின்றது. அல்லாஹ்வுடனும் மலக்குகளுடனும் அறிஞர்கள் இங்கே …

Read More »

பெருகி வரும் போதைப் பாவனை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். …

Read More »

ஏன் இந்த நிலை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது. ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன? இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான …

Read More »

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும், காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் …

Read More »

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (ஆலுஇம்றான் – 04)

குறைத்துக் காட்டப்பட்ட போர்ப்படை ‘(பத்ரில்) சந்தித்துக் கொண்ட இரு கூட்டங்களிலும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சியுண்டு. ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றது. மற்றதோ நிராகரிக்கும் கூட்டமாகும். அவர்கள் இவர்களைத் தம்மைவிட இரு மடங்காகக் கண்ணால் கண்டார்கள். அல்லாஹ், தான் நாடுவோரைத் தனது உதவி மூலம் பலப்படுத்துகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினையுண்டு.’ (3:13) இந்த வசனத்தில் பத்ர் களத்தில் ஒரு கூட்டத்திற்கு மற்றொரு கூட்டம் தம்மை விட இரு …

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) – 05

இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி …

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) – 04

தொடர் – 04 பைபிளில் முஹம்மத்(ஸல்) பைபிளின் பல வசனங்கள் முஹம்மத் நபியின் வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்கின்றன. அத்தகைய அறிவிப்புக்கள் இயேசு பற்றியே பேசுவதாக கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. முன்னைய இறைத்தூதர்கள் இயேசு பற்றியும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயேசு உண்மையான ஒரு இறைத்தூதர் என்பதிலும் எந்த முஸ்லிமுக்கும் முரண்பாடு இல்லை. ஆனால், கிறிஸ்தவ உலகம் முஹம்மத் நபியின் நபித்துவத்தைப் பொய்ப்பித்துள்ளது. முஹம்மது நபியைப் பொய்ப்பித்தால் …

Read More »

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓர் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் …

Read More »