Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் (page 7)

உண்மை உதயம் மாத இதழ்

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01 பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. …

Read More »

ஷிர்க்கும் சிலந்தி வீடும்

அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். “அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவ லர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த …

Read More »

“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏ “பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4) பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் …

Read More »

அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-27 [சூறா அந்நிஸா–04]

பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த …

Read More »

திருமண வயதெல்லை

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 …

Read More »

இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும்

இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் …

Read More »

பீ.ஜே.-யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்

இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் …

Read More »

எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன?

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சு+ழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது …

Read More »

விழி இழந்த பின் விளக்கெதற்கு…

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்’ முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு …

Read More »