Featured Posts
Home » இஸ்லாம் (page 40)

இஸ்லாம்

கடனா? வஸிய்யத்தா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-31 [சூறா அந்நிஸா–08]

ஒருவர் தனது சொத்தில் 1/3 க்கு அதிகமாகாத அளவுக்கு வஸிய்யத் செய்யலாம். அந்த வஸிய்யத் பொது அமைப்புக்காகவும் இருக்கலாம். குர்ஆன் குறிப்பிட்ட, வாரிசுரிமை பெறாத தனி நபர்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் ஒருவரின் மரணத்தின் பின்னர்தான் சொத்துக்கள் பங்கிடப்படும். அவரது இறுதிக் கிரியைகளுக்கான செலவுகள் போன பின்னர் அவரது கடன்கள் மற்றும் வஸிய்யத்துக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் அவரது சொத்துக்கள் பகிரப்பட வேண்டும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது, “(இவ்வாறு …

Read More »

இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்

ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை …

Read More »

பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-30 [சூறா அந்நிஸா–07]

பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு “இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள். நபிமார்களின் வாரிசுகள்: ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் …

Read More »

அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-29 [சூறா அந்நிஸா–06]

اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏ “நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.” (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. “அநாதைகளின் சொத்துக்களை உண்பது” என்ற …

Read More »

என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம், யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள். 1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்? * நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்! 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி? *தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன? *மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் …

Read More »

அழகிய விடுதலை

உறவினர்கள் கூடி அளவளாவிக்கொண்டிருந்த பொழுதொன்றில், எங்கேயோ நடந்து முடிந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் பேச்சின் இடையில் புகுந்துகொண்டது. ஒரு வீட்டுத் தலைவி பாதையால் கூவிச்சென்ற மீன்காரரிடம் தேவையானளவு மீனைக் கொள்வனவு செய்து அதைச் சமைக்கும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். வீட்டுத் தலைவன் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அறையில் மாட்டிவிடப்பட்ட கணவரின் சட்டைப் பையில் கையைவிட்டதும் கிடைத்த தொகையில்தான் அந்தத் தேவையை முடித்திருக்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சற்று நேரத்தில் வீட்டிற்கு …

Read More »

[தஃப்ஸீர்-037] ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) விளக்கவுரை | வசனங்கள் 64 – 83

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-37 ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) | வசனங்கள் 64 – 83 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய …

Read More »

ஷிர்க்கும் சிலந்தி வீடும்

அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். “அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவ லர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் …

Read More »

[தஃப்ஸீர்-036] ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) விளக்கவுரை | வசனங்கள் 54 – 63

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-36 ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) | வசனங்கள் 54 – 64 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்க செய்வதை எப்படி பித்அத், ஷிர்க் என்று சொல்லுவீர்கள் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். நபி ஸல் அவர்களை புகழுங்கள் …

Read More »