Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » வாதத்திறமை உள்ள வழிகேடர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

வாதத்திறமை உள்ள வழிகேடர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

‘(நபியே!) இவ்வுலக வாழ்வில் தன்னுடைய (சாதுர்யமான) வார்த்தை மூலம் உம்மைக் கவர்ந்து தனது உள்ளத்தில் உள்ளவற்றுக்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்கு பவனும் மனிதர்களில் உள்ளான். அவன்தான் கடுமையான விரோதியாவான்.’

‘அவன் (உம்மை விட்டும்) விலகிச் சென்றாலோ பூமியில் குழப்பம் விளைவிக்கவும், பயிரினங்களையும் உயிரினங்களையும் அழிக்கவும் முயற்சிக்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்பமாட்டான்.’

”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’ என அவனிடம் கூறப்பட்டால் (அவனது) வறட்டு கௌரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகின்றது. அதனால் நரகமே அவனுக்குப் போதுமானதாகும். தங்குமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.’
(2:204-206)

வாதத்திறமைமிக்க வழிகேடர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் குறித்து இவ்வசனங்கள் பேசுகின்றன. நபி(ச) அவர்களையே கவரும் விதத்தில் பேசும் ஆற்றல் பெற்றுள்ளவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களது வசனங்கள் தேனை விடவும் இனிமையாக இருக்கும். அவர்களின் உள்ளங்கள் நரித்தனம்மிக்கதாக இருக்கும். தங்கள் தவறுகளையும் அழகாக நியாயப்படுத்திக் காட்டும் திறமை பெற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள். குழப்பம் விளைவிப்பது அவர்களின் குணமாக இருக்கும். அல்லாஹ் மீது அச்சம் இல்லாது குழப்பம் விளைவிப்பர்.

‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவன் வாதத்திறமை உள்ளவனாவான்.’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி: 7188, 2457, 4523,
முஸ்லிம்: 2668

தவறான அடிப்படையில் வாதத் திறமையைப் பயன்படுத்துபவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *