Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » அறிவியல் » அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]

அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]

iDTV Talk Show | Episode-2
With Er. Mohamed R. Zackariah

Video and Editing: Islamkalvi Media Unit

விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை என்று நிறுவினரா?

[கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து மீண்டுவந்த மேற்குலக விஞ்ஞானி..!?]

இந்த வீடியோ பதிவில்..

  • விஞ்ஞானிகளை நோக்கி திருக்குர்ஆனின் கேள்விகள்
  • வானம், பூமி படைக்கப்பட்டதை பற்றிய திருக்குர்ஆனின் கேள்விகள்
  • கடவுள் இல்லை என்ற கருத்தாக்கத்தில் எல்லா நவீன அறிவியல் விஞ்ஞானிகளும் ஒன்றுபடுகின்றார்களா?
  • 50 வருடங்கள் கடவுள் மறுப்பு கொள்கை பிரச்சாரம் செய்த விஞ்ஞானி தற்போது..
  • விமர்சன கண்ணோட்டத்தோடு குர்ஆனை அணுகிய பெண்மனி இஸ்லாத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்?
  • இன்னும் பல செய்திகள் உள்ளன..

அழைப்பு பணியில் உள்ள சகோதரர்களுக்காக இந்த வீடியோ பதிவில் மேற்கோள் காட்டப்பட்ட குர்ஆன்வசனங்களை வரிசைகிரமமாக தொகுத்துபட்டு இங்கே பதிவிடப்படுகின்றது:


Keep Yourselves updated:

Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:

? Click Here…

அழைப்பு பணியில் உள்ள சகோதரர்களுக்காக இந்த வீடியோ பதிவில் மேற்கோள் காட்டப்பட்ட குர்ஆன்வசனங்களை வரிசைக்கிரமமாக தொகுத்துபட்டு இங்கே பதிவிடப்படுகின்றது:

  1. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (அல்குர்ஆன்: 67:03)
  2. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (அல்குர்ஆன்: 67:04)
  3. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். (அல்குர்ஆன்: 30:29)
  4. அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? (அல்குர்ஆன்: 52:35)
  5. அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன்: 52:36)
  6. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? (அல்குர்ஆன்: 76:1)
  7. அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? (அல்குர்ஆன்: 52:37)
  8. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். (அல்குர்ஆன்: 52:38)
  9. வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். (அல்குர்ஆன்: 52:44)
  10. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன்: 13:28)
  11. ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. (அல்குர்ஆன்: 52:45)
  12. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 52:46)
  13. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;). (அல்குர்ஆன்: 3:191)
  14. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (அல்குர்ஆன்: 3:190)
  15. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:28)
  16. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.) (அல்குர்ஆன்: 23:115)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *