Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் ரவூஃபுக்கும் அவனது சகாக்களுக்கும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு

  • தனித்தவனாக,
  • அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக,
  • ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக,
  • மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக,
  • ஈருலகிலும் அதிரடியாக?
  • மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக,
  • மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக,
  • மறுமை நாளில் தனது காரியங்களை தன்னந்தனியே நின்று முடித்து வைப்பவனாக போன்ற இன்னும் பல நிரப்பமான, முழுமையான குறைவில்லாத பண்புகளைக் கொண்டு வர்ணிக்கப்படும் அல்லாஹ்வை

நபித்தோழர்களுக்குப் பின்னால் தோன்றிய வழிகெட்ட அபூ மன்சூர் அல்- ஹல்லாஜ், அபூதாலிப் அல்மக்கி (மக்கு), நாஸ்திகன் இப்னு அரபி போன்ற அரபி மொழி வழிகேடர்களின் இறையிற் கோட்பாடுகளை காப்பி செய்து அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காது, அல்லாஹ்வும் அவனது தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த விளக்கங்களுக்கு மாற்றமான நாஸ்தீக, இறைமறுப்பு சார்ந்த விளக்கங்கள் தந்து அழியக்கூடிய அற்பமான, பலவீனமான, மண்ணோடு மண்ணாக மக்கி, உண்மையான அல்லாஹ்வின் நாட்டத்தால் மீண்டும் எழுப்பபட்டு விசாரிக்கப்பட உள்ள அல்லாவின் படைப்புகளுக்கு ஒப்பிட்டு

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  •  நீரும் அவனே

போன்ற வழிகெட்ட, இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி , முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் வழிகெடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் அசத்தியவாதிகளையும் இலக்காகக் கொண்டு அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பது பற்றிய அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூராவமான நபி மொழிகளின் ஓரிரு சான்றுகளின் துணையோடு இங்கு அல்லாஹ்வின் கண்ணியம் அவன் அர்ஷின் மீதிருந்தவாறு இம்மைணிலும் மறுமையிலும் இருப்பதுதான் என்பது பற்றி சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

அல்லாஹ் தொடராக அர்ஷின் மீதிருந்து வருவதை உணர்த்தும் மிஃராஜ் நிகழ்வு.

மிஃராஜ் நிகழ்வு முஸ்லிம் சமூகத்தில் உள்ள மக்களின் இறைகட்டுப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கற்பிக்கின்ற முக்கிய திகழ்வாகும்.

  • சில மணி தேரங்களில் பல கோடி தூரத்தில் உள்ள ஓர் இடம் சென்று அல்லாஹ்வின் தூதர் மீண்டும் வந்தார்கள் என்பது ஒரு இரவில் அது சாத்தியமா?
  • அல்லாஹ் எவ்வாறான வலிமைகள், ஆற்றல்கள் மிக்கவன்,
  • அல்லாஹ்வை இந்த உலகில் நேருக்கு நேர் காணவே முடியாது,
  • அல்லாஹ் பேசுவது, உரையாடுவது,
  • அல்லாஹ்வின் உயர்ந்த அந்த அர்ஷ் ஆதம் நபி (அலை) அவர்கள் முதல் முஹம்மத் நபி ஸல் அவர்கள் வரை வந்த தூதர்கள் வரை அல்லாஹ் அவனது உயர்ந்த அர்ஷின் மீதிருப்பதையே நம்பி போதனையும் செய்துள்ளனர்,
  • சுவனங்கள் வானத்தில் உள்ளன,
  • அல்லாஹ் தனது அடியார்கள் தொடர்பாக தாய் ஏட்டை வைத்துள்ளான். அப்துல் ரவூஃப் நானும் அவனே எனப் போதித்தாலும் அவனாகப் போவதில்லை,
  • பர்ளான தொழுகையின் முக்கியத்துவம்,
  • அல்லாஹ் தனது அடியார்கள் மீது வைத்துள்ள கருணை, அன்பு, பாசம் போன்ற முக்கிய செய்திகளை பாடமாகக் கொண்ட சிறப்பான நிகழ்வாகும்.

இப்போது மிஃராஜ் இரவு கடமையாக்கப்பட்ட தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

«فَفَرَضَ اللهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً»، قَالَ: فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً، قَالَ لِي مُوسَى عَلَيْهِ السَّلَامُ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَوَضَعَ شَطْرَهَا، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَأَخْبَرْتُهُ قَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، قَالَ: ثُمَّ انْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ؟ قَالَ: ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤَ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ

எனது சமுதாயத்தினர் மீது அல்லாஹ் ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான். அதனைக் கொண்டு நான் திரும்பி வரும் போது வழியில் மூஸா (அலை) அவர்கள் கண்டு உனது சமுதாயத்தினர் மீது உமது இரட்சகன் எதைக் கடமையாக்கி உள்ளான் எனக் கேட்டு உமது சமூகம் அதைச் செய்ய சக்தி அற்றவர்கள். எனவே உமது இரட்சகனிடம் நீர் மீண்டும் சென்று அதில் குறைப்பு சலுகைகளைப் பெற்றுக் கொள் என மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பினார்கள் இறுதியில் ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என நபி ஸல் அவர்கள் கூறியதும் அதையும் குறைத்துக் கொள்ள மூஸா நபி ஆலோசனை கூறிய போது நபி ஸல் அவர்கள் என்ன கூறினார்கள்தெரியுமா?

قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي

(இனியும் செல்ல) எனது இரட்சகனிடம் இருந்து நான் வெட்கப்படுகின்றேன் என்றார்கள். (புகாரி).
அப்படியானால், அல்லாஹ் அவருக்கென இருக்கும் தோற்றத்தை மறுக்க முடியுமா? அல்லாஹ் என்பவன் அவனது படைப்பாக முடியாது என்பதை மறுக்க முடியுமா?

அல்லாஹ் அர்ஷில் என்றும் இருக்கின்றான் என்பதை பல நூறு ஹதீஸ்கள் தெளிவுபடுத்தி உள்ளன. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
இரவு வேளைகளில் வானில் இருந்து எறியப்படும் நட்சத்திரங்கள் தொடர்பான செய்தியில் நிச்சயமாக அவை உலகில் முக்கியமான ஒரு மனிதனின் பிறப்பிற்காகவோ இறப்பிற்காகவோ வீசி எறியப்படுவதில்லை. மாற்றாக அதற்கான காரணம் இதுதான்.

عن عَلِيُّ بْنُ حُسَيْنٍ: …. «فَإِنَّهَا لَا يُرْمَى بِهَا لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنْ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى اسْمُهُ، إِذَا قَضَى أَمْرًا سَبَّحَ حَمَلَةُ الْعَرْشِ، ثُمَّ سَبَّحَ أَهْلُ السَّمَاءِ الَّذِينَ يَلُونَهُمْ، حَتَّى يَبْلُغَ التَّسْبِيحُ أَهْلَ هَذِهِ السَّمَاءِ الدُّنْيَا» ثُمَّ قَالَ: ” الَّذِينَ يَلُونَ حَمَلَةَ الْعَرْشِ لِحَمَلَةِ الْعَرْشِ: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ فَيُخْبِرُونَهُمْ مَاذَا قَالَ: قَالَ فَيَسْتَخْبِرُ بَعْضُ أَهْلِ السَّمَاوَاتِ بَعْضًا، حَتَّى يَبْلُغَ الْخَبَرُ هَذِهِ السَّمَاءَ الدُّنْيَا، فَتَخْطَفُ الْجِنُّ السَّمْعَ فَيَقْذِفُونَ إِلَى أَوْلِيَائِهِمْ، وَيُرْمَوْنَ بِهِ، فَمَا جَاءُوا بِهِ عَلَى وَجْهِهِ فَهُوَ حَقٌّ، وَلَكِنَّهُمْ يَقْرِفُونَ فِيهِ وَيَزِيدُونَ ” (مسلم/ ٢٢٢٩)

எவனது பெயர் நாமம் உயந்து அவன் மகத்துவமிக்கவனாக உயர்ந்துவிட்டானோ அந்த அல்லாஹ் வானத்தில் ஒரு விட(ஷ)யத்தை தீர்ப்பளிப்பு விட்டால் அர்ஷை சுமக்கும் வானவர்கள் அவனைத் துதிப்பார்கள். பின்னர் (செய்தி ஜிப்ரீல் அலை மூலம் சொல்லப்பட்டதும்) அதற்கு கீழ் வானவர்கள் அவனைத் துதிப்பார்கள். பின்னர், அர்ஷை சுமக்கும் வானவர்களுக்கும் சென்றடையும், பின் அடுத்து வானத்தில் உள்ள வானவர்கள் அர்ஷை சுமக்கும் வானவர்களிடம் உங்கள் இரட்சகன் என்ன கூறியுள்ளான் எனக் கேட்பார்கள். அவர்கள் தமது இரட்சகன் போதித்தது பற்றி ஏனையவர்களோடு பரிமாறிக் கொள்வார்கள். இவ்வாறு வானத்தில் உள்ள வானவர்கள் ஒருவரை ஒருவர் விசாரித்து கீழ்வானம் வரை அந்த செய்தியைப் பரிமாறிக் கொள்வார்கள். (மக்களை வழிகெடுப்பதற்காக உள்ள ) ஜின்களில் ஒருசாரார் சிலதைத் திருடி தமது மனித தோழர்களுக்கு அறிவித்து அதில் இருந்து திருட்டுத்தனமாக செவிமடுக்கும் போது அந்த நட்சித்தரங்களைக் கொண்டு வானவர்களால் அவர்கள் தாக்கி அழிக்கப்படுவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அதில் அவர்கள் ஒரு உண்மையையும் 99 பொய்களையும் கலந்து தமது தோழர்களின் காதுகளில் (டொக்) எனப் போட்டுவிடுவார்கள். எனவே நீங்கள் ஜோதிடம் சொல்வோரிடம் வராதீர்கள் எனக் கூறினார்கள் என வந்துள்ளது.

மறுமையிலும் அல்லாஹ் அர்ஷின்மீதிருத்தவாறே தீர்ப்பளித்து ஆட்சி செய்வான்.

அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.

فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ (15) وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ (16) وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ (الحاقة/ ١٥ ١٧)

அப்போது நிகழக்கூடிய நிகழ்வு நடந்து விடும். வானமும் பிளந்து, அது பலவீனமானதாகி விடும். வானவர்கள் பலபாகங்களிலும் (பரவிக்) காணப்படுவார்கள். அந்நாளில் உமது இரட்சகனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள். (அல்ஹாக்கா: வசனங்கள் 15-17)

அல்லாஹ் அர்ஷின் மீதில்லாதிருந்தால் வானவர்கள் அதனை ஏன் சுமந்து வரவேண்டும்?  எனவே அல்லாஹ் அர்ஷின் மீதில்லை என்பதும், நானும் அவனாகலாம் என்பதும் அல்லாஹ்வை தெளிவாக நிராகரிக்கச் சொல்லும் போதனைகளே அன்றி வேறில்லை.

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களின் தன்மைகள்

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களை சாதாரண மனிதர்கள் போன்று கற்பனை செய்வதாலும், அல்லாஹ் தனக்குத் தேவையானது; அவசியமில்லாதது எனத் தேர்ந்தெடுத்துள்ள அர்ஷ் என்ற படைப்பு அல்லாஹ்வுக்கு தேவையற்றது என சாதாரண மனிதர்கள் முடிவு செய்வதாலும் அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதை நிராகரிக்க சிலருக்கு ஏதுவானதாகிவிடுகின்றதா? எனவே அந்த வானவர்களின் பெறுமானம், தன்மைகள் பற்றியும் முஸ்லிம் ஒருவர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.

அப்போதும் அல்லாஹ் அர்ஷின் மீதுள்ளான் என்பதை முடிவு செய்ய முடியும்.

((أُذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش، إن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة سبعمائة عام ((أبو داود ))

அர்ஷை சுமக்கும் அல்லாஹ்வின் வானவர்களில் ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய நபி ஸல் அவர்கள்: அவர்கள் ஒருவரின் காதின் சோணைக்கும் ( மடல்) அவரது தோழ் புயத்திற்கும் இடைப்பட்ட தூர அளவு (700) எழுநூறு ஆண்டுகள் நடை தூரமாகும் எனக் கூறினார்கள்.(அபூதாவூத்).

அல்லாஹ் அர்ஷின் மீதில்லையானால் அவனது அர்ஷை அவனது வானவர்கள் சுமக்க ஏன் வேண்டும்?

வானத்தில் இருந்து அல்லாஹ்வின் கட்டளைகள் ஏன் வரவேண்டும்? வானவர்கள் ஏன் அங்கிருந்து உலகுக்கு இறங்கி வர வேண்டும்? மீண்டும் அங்கு சென்று அல்லாஹ்வுடன் ஏன் உரையாட வேண்டும் ? என்று சிந்திக்கும் முஸ்லிம் அல்லாஹ் வானில் உள்ள அவனது அர்ஷின் மேலிருந்து சூழ்ந்து அறியும் அவனது அபரிமிதபான அறிவாற்றலால் உலகை ஆட்சி செய்வதை அறிந்து கொள்வான்.

அல்லாஹ் தினமும் அடிவானத்திற்கு இறங்குவது உணர்த்துவது என்ன? 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ “

தினமும் இரவில் மூன்றில் ஒரு பகுதி மீதிருக்கும் போது நமது இரட்சகன் அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகின்றான். என்னிடம் யார் பிரார்த்தனை செய்வாரோ அவருக்கு நான் பதில் அளிப்பேன், என்னிடம் யார் கேட்கின்றாரோ நான் அவருக்கு கொடுப்பேன்,
என்னிடம் யார் பாவமன்னிப்பு வேண்டுவாரோ நான் அவருக்கு பாவமன்னிப்பு வழங்குவேன் எனக் கூறுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் .(புகாரி/முஸ்லிம்)

குறிப்பு:

  • நானே அவன் எனக் கூறும் அதிகாரம் காத்த நகர் மனிதக் கடவுள் ரவூஃபுக்குண்டா என்று அவரது சீடர்கள் யோசிக்க வேண்டும்.
  • மேற்படி ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி மற்றும் பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறும்,متواتر முதவாதிர் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

எனவே அதனை நாம் எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது. மாற்றமாக மார்க்க விளக்கத்திலும் மொழி அறிவிலும் சிறந்து விளங்கிய நபித்தோழர்கள் முறை கற்பிக்காது, கற்பனையும் செய்யாது , அருள் என்றும் நம்பாது எவ்வாறு அதன் பொருளில் நம்பினார்கள்களோ அவ்வாறு நாமும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுவே நபி ஸல் அவர்கள் நம்பிய, போதித்த நம்பிக்கையாகும்

அல்லாஹ் தினம் தினம் அர்ஷில் இருந்து இறங்கி வருவதால் அவனது அர்ஷ் காலியாகும் என்பது சிலருக்கு கவலை போலும்!

இவ்வாறான அற்ப கற்பனைகளால் இந்த ஹதீஸுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்குவதாக நபித்தோழர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக பிற்காலத்தில் வந்தவர்களின் உளரல்களையும் கற்பனைகளைகளையும் முன்வைத்து அதனை இவ்வாறு விளக்க முற்படுவதும், அல்லது ஹதீஸில் தெளிவாக வந்திருப்பதை விட தமது கற்பனைகளை முற்படுத்துவதும் ஜஹ்மிய்யா, முஃதஸிலா அஷ்அரிய்யா போன்ற வழிகெட்ட பிரிவுகளின் போக்காகும்.

எனவே அந்தப் பிரிவுகளின் விளக்கத்தை மீண்டும் உயிர்பிக்கும் நவீன வழிகேட்டு வழிகாட்டிகளின் விளக்கம் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தம்பி மட்டுமில்லை தவ்ஹீத் பேசும் தென்னிந்திய அண்ணனும்தான் சொல்லி இருக்கிறார்.

விளக்கம் சரியா?

அல்லாஹ் தனது அருளைக் குறிக்க பயன்படுத்தும்
الرحمة கருணை
النعمة சிரேஷ்ட அருள்
الفضل மேலதி அருள்
போன்ற தெளிவான எந்த வாசகங்களும் இங்கு இடம் பெறாமல் இதில் அல்லாஹ் இறங்குவதாக வந்துள்ளது. எனவே அவன்

فعال لما يريد 
ولا يسأل عما يفعل 

தான் தாடுவதைச் செய்யக் கூடியவன், அவன் செய்வது பற்றி அவனை யாராலும் அவன் விசாரிக்க முடியாது போன்ற குர்ஆன் வசனங்களின் படி இந்த ஹதீஸை நம்புவதும் அதனை இறங்கி வருதல் என்ற பொருளிலேயே நபித்தோழர்களும் நம்பி
விசுவாசித்தது போன்று நாமும் விசுவாசம் கொள்வது நமது கடமையாகும்.

அதற்கு அல்லாஹ் அர்ஷில் இல்லை. உலகம் முழுவதும் இல்லை, எங்கும் எதிலும் இல்லை. அனைத்தும் அல்லாஹ்தான் என மக்களை மடையர்களாக்கும் அரைகுறை விளக்கங்களை நம்புவது வழிகேடாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *